
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
- 17 Jul 2025
- 836 reads
- ☆ No ratings yet
- 6 min read
Episode -26
நிலா நிலை குலைந்து அதே இடத்தில் நின்றிருந்தாள். உங்களோட வெறுப்பு கூட எனக்கு பிடிக்கும் வீரா. நீங்க ரொம்ப ரொம்ப வெறுக்கிர ஒருத்தி நானாக தான் இருப்பேன். சந்தோசமா இருக்கு என உதட்டை கடித்து சுவற்றில் சாய்ந்தாள். அவ்விடத்தில் வெகு நேரம் நின்றிருந்தாள்.
பொம்மாயி என அழைத்த படி SP அவ்விடத்துக்கு வந்தார். டாடி என கண்களை துடைத்தபடி திரும்பினாள். உன்னோட முகம் சரி இல்லையே வாட்டமா இருக்கே! என்னாச்சு அப்பா இருக்கேன் மா! நீ எதை நினைச்சும் கவலை பட வேணாம் டா! என தன் மகளை தவிப்புடன் பார்த்தார். அவள் உடைந்து விட கூடாது. அவள் தான் அவருக்கு முக்கியம்.
எனக்கு என்ன டாடி கவலை? நான் எப்போவும் போல தான் இருக்கேன். அங்கே எல்லாரும் இருக்காங்க அதான் கொஞ்சம் காத்து வாங்கலாம்ன்னு இந்த பக்கம் வந்தேன். என்றாள் நிலா.
வாங்க தங்கம் சாப்பிடலாம்? வெஜ் ஐட்டம் எல்லாமே செஞ்சிருக்கு.. உங்களுக்கு பிடிக்குமே மோர்களி அதை கூட உன் அம்மா செஞ்சிருக்கா! வாடா வெண்டி பொரியல், தொன்டக்கா புளி குழம்பு, வாழைக்காய் மண்டி எல்லாமே இருக்கு.வாங்க தங்கம் நம்ம சாப்பிடலாம் என அழைத்தார்.
வரேன் டாடி! ஆனால் அவங்க எல்லாரும் சாப்பிட்டு கிலம்பட்டும் அதுக்கு அப்புறம் நம்ம சாப்பிடுவோம். அவங்க கெஸ்ட் தானே! என நிலா சொல்ல.. சரி என இருவரும் உள்ளே நடை போட்டார்கள்.
ருத்ரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தான். இன்னொரு பக்கம் சத்ய தேவ், நிதின் பிரகாஷ், நிவாஸ் மூவரும் வந்தார்கள். எப்போவும் போல இரு! இல்லன்னா உன்னோட டாடி கண்டு பிடிச்சிருவார் என சத்ய தேவ் இருவரிடமும் சொல்ல.. இயல்பாக முகத்தை வைத்து கொண்டார்கள்.
வாங்க சாப்பிடலாம்! என தேஜூ அழைக்க.. சத்ய தேவ் நிலாவின் அருகில் சென்று பாப்பா வா சாப்பிடலாம் என அழைக்க.. நிலா தன் தந்தையின் முகத்தை பார்த்தாள். என்னாச்சு டாடிய பார்க்கிற? என சத்ய தேவ் கேட்க… இதோ வரேன் என நிலா சத்ய தேவுடன் உணவு உண்ண அமர்ந்தாள்.
ருத்ரன் மனதில் நான் என்னை பத்தி அவருக்கு கவலையே இல்லையா? அவள் கூட போய் சாப்பிடுறார் என தோன்றியது.
நிலா இந்த பக்கம் வாடா! என நேராக சத்ய தேவ் ருத்ரன் அருகில் அமர்ந்து கொண்டான். அவன் நடுவில் அமர்ந்து கொள்ள, இருவரும் இரண்டு பக்கம் இருந்தார்கள். கண்மணி உதட்டை கடித்து துக்கத்தை அடக்கியவள் விரக்தியாக ருத்ரனை பார்த்தாள். நிலாவின் அருகில் நிதின் அமர்ந்தான். சத்ய தேவ் பார்த்து பார்த்து பரிமாறினான்.
அண்ணி எப்டி இருக்காங்க அண்ணா! நான் வரட்டுமா பார்த்துக்க? என நிலா பேசியது விவேகாவின் காதில் விழுந்தது. நல்ல பொண்ணு என்னை எப்படி பார்த்து கொண்டாள்? என அவரின் சிந்தையில் தோன்றியது. ஆம் விவேகா இரண்டு வருடம் கிட்ட தட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் போல உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள் அந்த நேரம் நிலா தான் ஒரு வருடமாக அவரை பார்த்து கொண்டாள்.
வீட்டில் உள்ள அனைத்து லேண்ட் லைன் எண்களும் ஒரே நேரத்தில் அலறியது. Sp, தேஜூ என இருவரின் எண்களுக்கும் அழைப்பு வர, என்னாச்சு? என sp அவ்விடத்தில் எழுந்தார்.
நியூஸ் ஸ்ப்ரட் ஆகிடுச்சு என சத்ய தேவ் தனது தம்பிகள் இருவரையும் பார்க்க.. எட்சில் கூட்டி விலுங்கினார்கள் இருவரும். நிதி மந்திரியின் மகன் அகிலேஷ் திடீர் திருமணம். அவரது காதலியை கரம் பிடித்தார். திருப்பதியில் அவர்களின் திருமணம் எளிமையாக நடை பெற்றது. நிதி மந்திரி மாதேசின் தங்கை மகள் பிராப்தியை தன் மகனுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தது. என செய்திகள் பரவியது திருமண படத்துடன்.
என்ன நடக்குது? என sp கடுமையான குரலில் கேட்டுக் கொண்டே தன் மகன்களை பார்த்தார். அப்பா அது!.. என நிதின் எழுந்தான். என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? என இன்பா கேட்க.. அது அது வந்து என நிதின் தயங்கினான். உணவில் இருந்து பாதியிலேயே அனைவரும் எழுந்தார்கள்.
Sp ஆவேசமாக தேஜூவின் அருகில் வந்தவர். பளார் என ஒரு அரை விட்டார். என்ன பண்றீங்க? என சத்ய தேவ் தடுக்க முயற்சி செய்தான்.
நான் படிச்சு படிச்சு சொன்னேன் டா! பொம்மாயிக்கு கல்யாண ஏற்ப்பாடு வேணாம்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன். இப்போ என் பொண்ணு! என் பொண்ணை விட்டுட்டு அந்த மினிஸ்டர் பையன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். என் பொண்ணை பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க? என காட்டு கத்தலாக கத்தியவர். நிவாஸ் பக்கம் சென்று சட்டையை பிடித்து தூக்கினார். எல்லாத்துக்கும் காரணம் நீ தான டா! உன்னால தான்! நீ கல்யாணம் பன்றதுன்னா கட்டிட்டு போயி தொலைய வேண்டியது தானே! என் பொண்ணு மேல அவ்வளவு அக்கறை மயி* இருக்கவன். எதுக்கு டா நீ முதல்ல எதுக்கு டா அவசரப்பட்டு கல்யாணம் பண்ற? அவ்வளவு அவசரத்தில் எவனுக்காவது என் பொண்ணை தாட்டி விட திட்டம் போடுற நீ! அண்ட் நீ என நிதின் பக்கம் வந்தவர். நீ எதுக்கு இருக்க நிதின்? உன் மேலே என்னோட மொத்த நம்பிக்கையும் வச்சேனே! என உடல்கள் நடுங்க கத்தினார்.
“பெரிப்பா வேணாம் விடுங்க! அவன் நம்ம பாப்பாவுக்கு வேணாம். அந்த அகிலேஷ் பண்ணதுக்கு தேஜூ மா என்ன பண்ணுவாங்க? நிவாஸ் நல்லது தானே நினைச்சான். நிதின் இருக்க பதவிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? கோப படவேனாம் விடுங்க. என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. எல்லா பிரச்னையும் சால்வ் ஆகிடும்”
இதுக்கும் மேலே எப்படி சரி பண்ண முடியும்? என்ன சொல்ற சத்ய தேவ்? எல்லாம் போச்சு! என் பொண்ணு வாழ்க்கை போச்சு! என ஆறடி கம்பீர மனிதனின் நடை தளர்ந்து போனது.
தேஜூ கண்ணீருடன் எழுந்து நிற்க முடியாமல் நிலை குலைந்து கிடக்க.. ஹரிணி தன் மாமியாரின் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறினாள்.
பாப்பாவுக்கு குறிச்ச நாளில் குறிச்ச தேதியில கல்யாணம் பண்ணனும். மாப்பிள்ளை பார்ப்போம். பிரம்மாண்டமா பண்ணலாம் என்றான் சத்ய தேவ்.
நிலா அப்பட்ட அதிர்ச்சியுடன் பார்க்க.. சத்ய தேவ் தங்கையை பார்த்தபடி கூறினான்.
இப்படி இருக்க என் பொண்ணை யார் கல்யாணம் பண்ணிப்பா? என spr வருத்தத்துடன் கூறினார்.
நம்ம பாப்பாவுக்கு என்ன குறை கண்டிப்பா கல்யாணம் நடக்கும். நீங்க கவலை படாதீங்க பெரிப்பா கல்யாணம் நடக்கும். பிரம்மாண்டமா.. நீங்க எதை பத்தியும் கவலை படவேணாம் யார் மேலேயும் பழி சுமத்த வேணாம். நீங்க தைரியமா இருங்க. என கூறினான் சத்ய தேவ்.
விவேகா தீவிரமாக யோசித்தபடி, ராகவ் என தன் கணவனை அழைத்தாள்.
ம்ம் என்ன?
“பேசாமல் நிலாவை நம்ம ருத்ரனுக்கு கேட்போமா? நல்ல பொண்ணு! என்னை நல்லா பார்த்துகிட்டா சத்தமா கூட பேச மாட்டாள். நிதின் தானே நம்ம பொண்ணு ரிதம கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்தான். நான் படுத்த படுக்கையில் இருந்த போது அவள் தானே என்னை சரி செஞ்சா! கேட்டு பார்க்கலாமா? அவங்களும் கஷ்டபடுறாங்க. பொண்ணு கல்யாணம் நின்னுபோனா எவ்ளோ வேதனையா இருக்கும்” என்றார் விவேகா.
“உன் பையன் இதுக்கு ஒத்துக்குவானா?”
அவன் எனக்காக செஞ்சு தான் ஆகணும். குடிக்கிறான் ராகவ்! இவனையும் குடும்ப வாழ்க்கையில் புகுத்தினா தான் திருந்துவான். பொறுமையான குணம் தான் நிலா. கண்டிப்பா ருத்ரனை மாத்துவா எனக்கு நம்பிக்கை இருக்கு. இத்தனைக்கும் ரெண்டு பேருக்கும் முறை பொருத்தம் இப்போவே எனக்கு அவங்க ஜோடி பொருத்தம் கண்ணுல தெரியுது. என கனவு காண ஆரம்பித்தார்.
அப்போ நீயே சொல்லு! இப்போவே சொல்லிடு என இன்பா சொல்ல..
விவேகா தன் கணவனை பார்த்தாள்.
சொல்லு நீ சொன்னால் உன் பையன் ஒத்துப்பான்ன்னு சொன்ன. சோ நீயே இப்போவே சொல்லிடு என்றார் இன்பா.
விவேகா தன் மகனை பார்த்துவிட்டு நிலாவை நீங்க ருத்ரனுக்கு கட்டிக்க தருவீங்களா? எங்க வீட்டு மருமகளா நிலாவை நான் நல்லா பார்த்துப்பேன் என்றார்.
சத்ய தேவ் நிம்மதியான பெருமூச்சுடன் அவர்களை பார்க்க..
அங்கிருக்கும் அனைவரும்…?
எனக்கு இதுல விருப்பம் இல்ல. சாரி அத்தை என நிலா மறுத்தாள்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels










💬 Be the first to comment