Episode-104
சத்ய தேவ் அங்கேயே நின்றிருந்தான். வீட்டில் இருந்து போனுக்கு மேல் போன் பறந்தது. கொஞ்சம் டெஸ்ட் எடுக்கிற வேலை. அதான் நான் அப்படியே கமிஷ்னர் ஆபீஸ் போயிட்டு சாந்தி நகர் அப்பார்ட்மெண்ட் போறேன். எந்த பிரச்னையும் இல்ல என கூறி போனை வைத்தான்.
டாக்டர் அந்த பக்கமாக வந்தார். இப்போ எப்டி இருக்கான் என சத்ய தேவ் அருகில் சென்றான். உயிருக்கு ஆபத்து இல்ல. ஆனால் அவருக்கு கவுன்சிலிங் தேவைப்படுது. இப்படி தன்னை தானே சுட்டுக்கிற அளவுக்கு வந்திருக்கார். இது எங்க ஹாஸ்பிடலில் நடந்திருக்கு. அவரோட மனசு சரி இல்ல. கண்டிப்பா சைக்காட்ரிஸ்ட் கிட்ட போகன். என்றார்.
ஓகே டாக்டர் நான் இப்போ போய் பார்க்கலாமா? என சத்ய தேவ் கேட்க..
ம்ம் பாருங்க என பெரு மூச்சுடன் அவர் சென்று விட.. கடைஞ்செடுத்த கிறுக்கன் என நினைத்து கொண்டே உள்ளே சென்றான்.
டேய் எந்திரி! எதுக்கு இப்படி ஒரு கிறுக்குதனம் பண்ண?
நிதின் எதுவும் பேசாமல் எழுந்து கொள்ள முயற்சி செய்தான்.
ப்ச் படுத்திரு! என சத்ய தேவ் கூற..
இது வரை நீ என்கிட்ட எதையுமே மறைச்சதில்ல. ஆனால் இந்த விஷயத்தை எப்டி மறைச்ச? என்னால டைஜஸ்ட் பண்ண முடியல என்றான் நிதின்.
சத்ய தேவ் நெற்றியை நீவி கொண்டே, எனக்கே உடனே தெரியாது. அவங்க ரெண்டு பேரும் கவுன்சிலிங் போன நேரத்தில் தான் கண்டு பிடிச்சேன்.
நிதின் கோபமாக என்கிட்ட சொல்லியிருக்கலாமே என்றான் ஆதங்கம் சேர்ந்து கொண்டது.
சொன்னால் நீ தீராவை எதுவும் பண்ணிட்டா என்ன பண்றது? எனக்கு அவன் தெய்வ மச்சான் என்றான் சத்ய தேவ்.
கெட்ட வார்த்தை வாயில வருது என நிதின் முறைக்க..
தெரியாம மறைச்சுட்டேன் போதுமா? அதான் சுட சொன்னில்ல!! என்றான் சிரித்து கொண்டே..
நிதின் கோபத்துடன் மகி மா மேலே சத்தியமா சொல்றேன். நான் அப்படி பண்ண மாட்டேன் டா என்று உருக்கமாக பேசினான்.
சரி நம்புறேன். அப்டியே நீ தீரா மேலே இருக்க கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்க! என்றான் சத்ய தேவ்.
அவனுக்கு போய் என்னோட தங்கச்சியா? கேட்கவே நாராசமா இருக்கு. எனக்கெல்லாம் ஒரு குட்டிய ரிலீஸ் பண்ண மூணு வருஷம் தேவைப்பட்டது. அந்த நாய் என் தங்கச்சிய கொடுமை பண்ணிருக்கான். அதான் குழந்த உடனே வந்திடுச்சு. அவங்க குடும்பத்துல இருந்து அப்டியே உரிச்சு வச்சு உடனே குழந்தை பொறந்திடுச்சு. நான் கொடுமை பண்ண அவசியமே இல்ல. என்னோட கோபத்தை விட நிலா அவனை புரட்டி போட்டு எடுக்கிறா!! என்றான் நிதின்.
டேய் பையன் மாதிரி பேசு! என்று சத்ய தேவ் கூற..
சரி இப்போவாச்சும் சொல்லு அந்த கார்கோடன் கேங் பத்தி என நிதின் கேட்க..
ஒண்ணுமில்ல!! நீ என்ன சொல்றேன்னு புரியல என்று போனை காட்டினான்.
நிதின் அவனது போனை எடுத்து பார்க்க, அதில் அனைத்து செய்திகளும் இருந்தது.
நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன் என நிதின் கூற..
நீ மறுபடியும் மினிஸ்டர் ஆகு!! அது போதும்.
எங்கே ஆகறது? உன் மாமனார் என்னை மொத்தமா முடிச்சு விட்டுட்டார். எனக்கு அதுக்கு தகுதி இல்லையொன்னு தோணுது.
நீ பைத்தியம் மாதிரி பேசாத! என்றவன் அதிரடிக்காரனுக்கு அழைத்தான்.
யாருக்கு போன் பண்ற? அந்த வீராவுக்கா? என கேட்டான் நிதின்.
ம்ம் நீ இன்னையில் இருந்து ஃப்ளாஷ் ல வருவ! அவன் பார்த்துப்பான் என வீராவிடம் பேசினான் சத்ய தேவ்.
எனக்கு யாரோட ஹெல்ப்பும் தேவையில்லா. என நிதின் கூற..
சத்ய தேவ் முறைத்து பார்த்தான்.
முக்கியமா அவனோட ஹெல்ப் எனக்கு வேணாம். என்று நிதின் திரும்பி கொண்டான்.
உன்னை சண்டைக்கு கூப்பிடுறேன். நம்ம கேங்கா சேர்ந்து பண்ணலாம் என்று தட்டி விட்டான்.
போனை எடுத்து பார்த்தவன் கண்கள் பளிச்சிட நிஜமாவா? அப்டியா? என நிதின் கேட்க..
ஆமா அப்டின்னா நீ மூடிட்டு போய் ஸ்ட்ராங்கா பில்ட் ஆகு. என சத்ய தேவ் கூறினான்.
எப்போ ஆரம்பிக்கிறோம்? என நிதின் துள்ளலுடன் கேட்க..
முதல்ல நீ கை சரியாகி வா! வீட்ல ஒரு கிருமி என் பின்னாடியே ஒட்டிட்டு சுத்துது. எல்லாத்தையும் கேர் ஃபுல்லா தான் பண்ணனும் என்றான் சத்ய தேவ்.
கிருமியா? என நிதின் கேட்க..
இதோ அழைப்பு வந்து விட்டது. கிருமியிடம் இருந்து.
ஹலோ தேவ் நான் சந்தனா பேசுறேன். எப்போ வருவீங்க? உங்க மனைவிக்கு எல்லாமே மறந்திடுச்சு என்றாள்.
வரேன் டாக்டர் என போனை வைத்தான் பெரு மூச்சுடன்.
ரிதம் இயலாமையுடன் சரிகாவை பார்த்தாள்.
சரிகா தன்னை அழகாக ஒப்பனை செய்து கொண்டாள். சத்ய தேவ் மீதிருந்த மயக்கத்தில்..
என்னடி அப்படி பார்க்கிற? உண்மைய சொல்லி தான் பாரேன். எங்க அண்ணன் கொண்ணுடுவான் உன்னை.. என்று சொல்லி கொண்டே உதட்டுக்கு பட்டையாக உதட்டு சாயம் பூசினாள் சரிகா.
எதுக்கு டிஸ்கோ டான்ஸர் மாதிரி இப்படி ரெடியாகுர? என ரிதம் கேட்க..
அது உனக்கு எதுக்கு? போ போய் உன் பையன பாரு! அண்ட் சொன்னது நியாபகம் இருக்கு தானே சொதப்பி வச்ச அப்புறம் உன் அம்மா, உன் பையன், உன் தம்பியோட குழந்தை எல்லாமே பரலோகம் டிக்கெட் வாங்கிடும் என்றாள் சந்தனா.
ரிதம் பெருமூச்சுடன் மகனை பார்த்தவள். மார்புடன் அணைத்து கொண்டு பக்கத்து அறைக்கு சென்று விட்டாள்.
சத்ய தேவ்!! என மெல்லிய குரலில் தனக்கு தானே அழைத்து கொண்ட சந்தனா. அவனது சட்டையில் இருக்கும் வியர்வை வாசத்தை இழுத்து வாசம் பிடித்தாள். ப்பா மார்ஃபின் போல ஆளை இழுக்குது. என சொல்லி கொண்டாள்.
சத்ய தேவ் வீட்டுக்கு வருவதற்கு இரவு ஆனது. அனைவரும் விழித்திருக்க.. இன்பா ஒரு பெரு மூச்சுடன் நின்றிருந்தார்.
என்னாச்சு மாமா? டாக்டர் சந்தனா அவளுக்கு எல்லாமே மறந்து போச்சுன்னு சொல்றாங்க? என கேட்டு கொண்டே வந்தான் சத்ய தேவ்.
மகி அழுதபடி என்னை யாருன்னு கேட்கிறா சக்தி. ரிதம் எல்லாத்தையும் மறந்துட்டா! அவள் இருக்க கோலத்தை போய் பாரு என தேம்பினார்.
சத்ய தேவ் மெல்ல அறைக்குள் நுழைந்தான். வெள்ளை புடவையில் முடியை கொண்டையிட்டு தரையில் ஒரு மூளையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் ரிதம்.
ரிதம்!! என சத்ய தேவ் அழைக்க..
அவள் இன்னும் தேம்பி அழுதாள்.
நீங்க யாருன்னே நேக்கு தெரியல. பிளீஸ் என்னை விட்டுடுங்கோ! கிட்ட வராதேள் என ரிதம் கூற..
தேவ் என அழைத்து கொண்டே குழந்தையை மார்புடன் தட்டி கொண்டு வந்தாள் சந்தனா.
சத்ய தேவ் இறுகிய மனதுடன் தன் மகனை வாங்கி கொண்டான்.
சந்தனா குரலை சரி செய்து கொண்டு அவங்களுக்கு எல்லாமே மறந்து போச்சு இப்போ அவங்க சைலஜாவாக இருக்காங்க. இனி அவங்களோட மொத்த அடையாளமும் அந்த பேரில் தான் இருக்கும். அவங்களோட புருஷன் இறந்துட்டதாக சொன்னாங்க. அப்போ நீங்க என தயக்கத்துடன் கேட்டாள். அனைத்தும் தெரிந்து கொண்டே..
அது என்னோட பெர்சனல். என்றான் ஒரே வார்த்தையில்..
அரிச்சந்தரா அரிச்சந்திரா அப்டின்னு சொல்லி அழறாங்க அதான் யாருன்னு கேட்டேன். சாரி தேவ் என்றாள் சந்தனா.
சத்ய தேவ் எதுவும் பேசாமல் திரும்ப. ஆணியில் தாலிக்கொடி தொங்கி கொண்டிருந்தது.
சந்தனா அவனது பார்வையை கண்டு கொண்டு, தாலி என எடுத்து வந்தாள்.
ம்ம் கொடுங்க என அதை வாங்கி கொண்டான். வெடுக்கென.. சந்தனா தடுமாற்றத்துடன் நின்றாள். அவள் மனதில் இதே தாலிய நீ எனக்கு கட்டுவ டா! கட்ட வைப்பேன். உன் பொண்டாட்டி இனி நான் தான். இனி ரிதம் சத்ய தேவ் அத்தியாயம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. இனிமே சரிகா சத்ய தேவ் ஆரம்பம் ஆக போகுது என அவனது பின்னால் நடந்தாள்.
இன்பா வேதனையுடன் வெளியில் இருக்க, சத்ய தேவ் இறுகிய முகத்துடன் வந்தான்.
விவேகா மொத்தமாக உடைந்து அழுதார். மகி தலையில் அடித்து கொண்டு அழுதார்.
ப்ச் என்னமா?
டேய் நீ இருக்கும் போதே அவள் அமங்கல கோலத்தில் இருக்கா டா! எனக்கு உயிர் போற மாதிரி இருக்கு என துடித்து அழுதார்.
சத்ய தேவ் நேராக தன் அன்னையின் அருகில் வந்தவன். அதுக்குன்னு அவளை விட்டுட முடியுமா? அவள் என் பொண்டாட்டி. யாரும் எதையும் கண்டுக்க வேணாம். உங்களுக்கு கஷ்டமா இருந்தால் சொல்லுங்க. நான் அவளை கூட்டிட்டு தனியா போயிடுவேன். என்றான்.
டேய் என்ன பேசுற? என மகி கேட்க..
அப்போ கம்முன்னு இருங்க. அவள் எப்டி இருக்க விருப்பப்படுரலோ அப்டி இருக்கட்டும். யாரும் வருத்தப்பட வேணாம். மாமா உங்களுக்கும் தான் சொல்றேன். இப்போதைக்கு அவளோட புருஷன் நான் இல்ல. அரிச்சந்திரா.
டேய் என சூர்யா பேச வர..
சொல்றத கேளுங்க நீங்களும் அவள் கிட்ட அப்படியே காட்டிக்கோங்க. என்றவன் நேராக சந்தனா பக்கம் திரும்பி, அவளை இங்கே இருந்து நீங்க பார்த்துக்க முடியுமா? என் பையனையும் சேர்த்து சொல்றேன் என்றான்.
சந்தனாவின் மனதில் மத்தாப்பு பூக்க.. கண்டிப்பா மிஸ்டர் தேவ் அதுக்காக தானே வந்திருக்கேன். ஐ மின் டேக் கேர் பண்ணிக்க.. என்றாள்.
இன்பா எதுவும் பேசாமல் வெளியே சென்று விட, சந்தனா அவளை கொஞ்சம் பார்த்து பேச்சு கொடுங்க. அண்ட் மைண்ட்ல வச்சுக்கோங்க. அவள் அரிச்சந்திரன் பொண்டாட்டி என்று சொல்லும் போது அவன் குரல் கமரி இருந்தது.
ஓகே தேவ் என சொல்லி கொண்டே உள்ளே சென்றாள் உற்சாகமாக..
மாமா!! என சத்ய தேவ் அழைக்க..
இதையெல்லாம் பார்த்திட்டு நான் உயிரோட இருக்கணுமா? என இன்பா கண்களில் நீர் கோர்க்க..
செய்வோம் மாமா இனி சிறப்பா செய்வோம். நீங்க பார்க்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த சத்ய தேவ் யாருன்னு நீங்க இன்னும் முழுசா பார்க்கணும் என்றான்.
சக்தி என இன்பா திரும்ப..
மாமா இதை ருத்ரன் கிட்ட சொல்ல வேணாம். அவன் அங்கேயே இருக்கட்டும். அது தான் அவனுக்கு safe. இது திருப்பி அடிக்க வேண்டிய நேரம். என கூறினான்.
இன்பா..?
நிலா கிஸ் மி you bluddy.. என உதட்டை நெருங்கினான் ருத்ரன்.
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels