அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
459 views

Episode -89

நிதின் பிரகாஷ் கோபமாக சத்ய தேவ் அருகில் சென்றவன். எதுவும் என்கிட்ட மறைக்கிறயா டா? என சட்டையை பிடித்தான். 

ரிதம் அவர்களின் நிலையை பார்த்து விட்டு உடனே வீட்டுக்கு போன் செய்தாள். 

ரிதம் எங்கே மா போயிட்ட? பச்சை உடம்பு காரி இப்படி நடு சாமத்தில் இப்படி போகலாமா? 

மாமி மாமி ஒரு நிமிசம்!! நான் சொல்றத கேளுங்க! நீங்க துகில அம்மா கிட்ட விட்டுட்டு மாமாவ கூட்டிட்டு உடனே ஶ்ரீ வாரி நர்சிங் home வாங்க.. 

என்னாச்சு? என மகி பதட்டத்துடன் கேட்க.. 

நிலாவுக்கு குழந்தை பிறந்திடுச்சு 

அதுல சந்தோஷம் தான!! 

சத்ய தேவை எல்லாரும் டார்க்கெட் பண்ணிட்டாங்க. அந்த குழந்தை ருத்ரனோடது. அப்டின்னு.. 

என்ன சொல்ற? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? 

மாமி சத்ய தேவ நிதின் பிரகாஷ் spr நிவாஸ் எல்லாரும் சுத்தி வளைச்சிட்டாங்க!! நீங்க உடனே வாங்க நான் விவரமா சொல்றேன் என கூறி போனை வைத்தாள். 

நிதின் அவன் மேலே இருந்து கைய எடு!! என இன்பா தட்டி விட.. 

நீங்க தள்ளி  நில்லுங்க!! எனக்கும் அவனுக்கும் நடுவில் வராதீங்க!! டேய் சொல்லு டா!! என்ன மறைக்கிற? என இழுத்தான். சட்டையில் இருக்கும் பொத்தான் அப்படியே சட சடவென சரிய..  

இன்பா அவனது கையை தட்டி விட.. 

ஹே என நிதின் இன்பாவை பார்த்து குரலை உயர்த்த.. 

என்னடா பண்ற? என spr தட்டி விட்டார். 

ப்பா!! எல்லாத்துக்கும் காரணம் இவன் தான் காரணம். டேய் என கழுத்தை பிடித்தான் நிதின். 

அங்கு வந்த ருத்ரன் வேகமாக வந்து கைய எடுங்க என் மாமா மேலே இருந்து.. என்று வேகமாக தள்ளி விட்டான். 

வாடா! ரொம்ப நல்லவனே!! நிவாஸ் என்ன பார்த்திட்டு இருக்க இவனை அடி டா!! என நிதின் கோபத்தில் பற்களை கடிக்க.. 

ரிதம் அனைத்தையும் போட்டோ எடுத்து மகிக்கி அனுப்பி வைத்தாள். 

மகி பதட்டத்துடன் spr க்கு அழைத்தவர். மாமா!! நான் வர வரைக்கும் கொஞ்சம் பொறுத்து இருங்க. சக்தி மேலே என் பையன் மேலே கைய வச்சா நடக்கிறதே வேற என கத்தி விட்டு போனை வைத்தார். 

Spr கோபத்துடன் என்ன நிதின் பண்ணிட்டு இருக்க? கைய எடு என தடுத்தார். 

என்ன நடக்குது இங்கே? என்ன நிதின் பண்ற? என தேஜூ கேட்க.. 

நிதின் கோபத்துடன் கார்ட்ஸ் இங்கே இருக்க எல்லாரையும் சுத்து போடுங்க. என்றவன் நேராக ரிதம் அருகில் சென்று அவளின் கையில் இருக்கும் குழந்தையை வலுக்கட்டாயமாக பிடுங்கி வந்தவன். இது இவனோட குழந்தை டாடி!! இவன் தான் நிலாவை என நிறுத்தியவன். அதுக்கு எல்லாம் உடந்தை இந்த சத்ய தேவ் டாடி!! இந்த சத்ய தேவ்  தங்கச்சி தங்கச்சி அப்டின்னு சொல்லி அவனோட மச்சானுக்கு கூட்டி.. என நிறுத்தினான். 

இன்பா சத்ய தேவை பார்க்க.. அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். 

நிவாஸ் ருத்ரனின் கழுத்தை பிடிக்க.. 

நிதின் spr அருகில் சென்று குழந்தையோட மச்சத்த பாருங்க டாடி!! இவனுக்கும் இருக்கு. எவ்ளோ ட்ரிக்கா பிளான் பண்ணி எல்லாத்தையும் செஞ்சிருக்காங்க பாருங்க டாடி!! என காட்டினான். 

அந்த நேரம் செவிலி வெளியே வந்து பேசண்ட் கண்ணு முழிச்சிட்டாங்க குழந்தைய கொடுங்க feed பண்ண வைக்கணும் என கூற.. 

நிவாசை ஆவேசமாக தள்ளி விட்ட ருத்ரன். நான் அவளை பார்க்கணும் என செல்ல.. 

ஹே எங்கே டா போற!! ராஸ்கல்!! என சட்டையை பிடித்து இழுத்தான். 

ருத்ரன் என SPR அழைக்க.. 

என்னை போக விடுங்க. நான் ஒரு தடவை அவளை பார்த்திட்டு வரேன். அப்புறம் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க என்றான். 

SPR முகம் சுருங்க அப்போ நிதின் சொல்றது உண்மையா? நீங்களே சொன்னால் நல்லாருக்கும். என கூறினார். 

அப்பா அவனுக்கு மரியாதை ஒரு கேடா? இனி இவன் ஜெயிலில் களி திங்க போறான். கூடவே சேர்ந்து இவனும் என தன் அண்ணனை பார்த்தவன். நிலா காணாமல் போன விஷயத்தை எனக்கு சொன்னதே சத்ய தேவ் தான் பா! இவனுபா ரெண்டு பேரும் திட்டம் போட்டு பண்ணியிருக்காங்க நம்மள அவமான பட வைக்க.. நம்ம மானம் போக என சொல்லி கொண்டே சென்றான். 

தேஜு அழுகையுடன் சத்ய தேவ் முன்னாள் சென்றவர். சக்தி அவன் சொல்றது உண்மையா? என கண்ணத்தில் அறைந்தார். 

குழந்தை வீரென அழ.. ரிதம் வேகமாக அவன் கையில் இருந்து குழந்தையை வாங்கி கொண்டவள் வார்ட் நோக்கி செல்ல.. அவளின் முடியை கொத்தாக பிடித்தான் நிதின். 

நிதின் என கோபமாக தள்ளி விட்டான் சத்ய தேவ். அதற்குள் கார்ட்ஸ் சுற்றி வளைக்க.. 

ரிதமின் தலையை வருடி விட்டவன். அவள் மேலே கை வைக்கிற வேலைய வச்சுக்காத!! நீ போடி என அனுப்பி வைத்தான் சத்ய தேவ். 

டேய் என spr சத்ய தேவை நோக்கி பாய.. 

இந்த விஷயத்துக்கும் எங்க மாமாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. உங்களுக்கு என்ன வேணுமோ என்கிட்ட கேளுங்க. 

உங்க பிரச்னைய அப்புறமா வச்சுக்கோங்க!! குழந்தை அழுது அவங்க அம்மா வெயிட்டிங் என சொல்லி விட்டு செவிலி சென்றார். 

ரிதம் குழந்தையை எடுத்து கொண்டு உள்ளே செல்ல.. 

தேஜு அவள் கிட்டருந்து குழந்தைய வாங்கு! நீ உள்ளே போ!! என SPR கர்ஜனை செய்ய.. 

ரிதம் குழந்தைய அவங்க கிட்ட கொடுத்திட்டு இப்படி வா மா!! என இன்பா கூற.. 

கொஞ்சம் கழுத்தை விட நான் எங்கேயும் போக மாட்டேன். என ருத்ரன் கூற.. 

குழந்தை அனத்தும் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டு பட்டது. 

பா யாருக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? இவனுங்க ரெண்டு பேரையும் சுட்டு தள்ளும் ஆத்திரம் வருது என நிதின் கூற.. 

Spr பெரு மூச்சுடன் நானும் அதே வெறியில் தான் இருக்கேன். ஆனால் உன் சித்தி வரட்டும். என்றார். 

சார் என அழைத்து கொண்டே  SPR பக்கம் வந்தார் இன்பா. 

எதுவும் சொல்ல வேணாம். எதையும் கேட்கிற நிலையில் நான் இல்ல. என spr கூற.. 

என் பையன பத்தி எனக்கு தெரியும். அவன் அப்படி பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு ஆனால் என்னோட சத்ய தேவ் அப்படி பண்ணியிருக்க மாட்டான். அவனுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. பிலிஸ் என இன்பா கையெடுத்து கும்பிட்டார். 

ரிதமின் கண்களில் நீர் கோர்த்து கொள்ள..  சத்ய தேவ் தன் மாமனாரின் கையை பிடித்தவன். மாமா நீங்க யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல. விடுங்க. கைய எடுங்க மாமா!! என்றான். 

பார்த்தீங்களா டாடி! இது கூட்டு சதி!! இருங்க இவனுங்கள கையும் களவுமா பிடிக்கிறேன் என்ற நிதின். 

நிவாஸ் அந்த நாயை கூட்டிட்டு வா DNA test எடுத்து confirm பண்ணனும். அப்போ தான் மகிழினி சூர்யா ரெண்டு பேரும் வரும் போது எல்லாத்தையும் நிரூபிச்சு இவனுங்களை தூக்குறேன் என கூறி இழுத்து சென்றான். 

டேய் விடுங்க டா! ஆமா டா அது என் குழந்தை தான். நான் தான் அவள் கூட இருந்தேன். ரிப்போர்ட் சொல்றத நானே சொல்றேன். என்றான் ருத்ரன். 

நிவாஸ் ஓங்கி அவனது முகத்தில் குத்து விட கண்ணி சிவந்து வாயில் ரத்தம் கொட்டியது. 

இன்பா எதுவும் பேச முடியாமல் தவிக்க.. 

டேய் ராஸ்கல் கைய எடு என் தம்பி மேலே இருந்து. நீங்க என்னமோ யோக்கியம் மாதிரி அடிக்க வர!! உங்க வரலாறு என்னன்னு உன் அப்பா கிட்ட கேளு! உன் அண்ணன் கிட்ட கேளு! முதல்ல என் தம்பி மேலே இருந்து கைய எடு! என குதித்தாள். 

டாடி!! நான் அவளை பார்க்கணும். என்னை உள்ளே விட சொல்லுங்க!! என ருத்ரன் கேட்க.. 

நிவாஸ் அவனை அடித்தான். 

சத்ய தேவ் இடிந்து போன இன்பாவை பார்க்க, இன்பா தலை குனிந்து நின்றிருந்தார். இதை எப்படி சரி செய்வது என தெரியவில்லை. 

மா என்னாச்சு யாருமே என்னை பார்க்க வரலையா? தீரா இருக்காரா? போய்ட்டாரா? என நிலா கேட்க.. 

கொஞ்சம் அவங்க வேலையா இருக்காங்க நீ feed பண்ணு. நான் வரேன் என வெளியே சென்றார். 

சத்ய தேவ் அவளிடம் நீ வீட்டுக்கு கிளம்பு. நான் பார்த்துக்கிறேன். துகில் உன்னை தேடுவான் என கூற.. 

ம்ம் ஹிம் என தலையாட்டினாள். 

ஆறு மணி நேரமானது. மணி காலை எட்டு. அரக்க பறக்க வந்து சேர்ந்தார்கள் மகி மற்றும் சத்ய தேவ். 

பிளாக் நம்ம நினைச்சது இங்கே எதுவுமே நடக்கல என தீபனா கூற.. 

நிதினோட துப்பாக்கி லோட்ல இருக்கு. நீ என்ன பண்ற? எடுத்து போட்டுடு.

ருத்ரன தான!! 

அவனா? No!! நீ சத்ய தேவை போடு!! இன்பா கண்ணு முன்னாடி!! So simple.

என்ன சொல்ற? என தீபனா கேட்க.. 

போடுறதுக்கு முன்னாடி அந்த மினிஸ்டர் பொண்ணு கிட்ட ருத்ரன் தான் அவளை கெடுத்த விசயத்தை சொல்லிட்டு வெளியே வா லோட் பண்ணு அவனை சுட்டுட்டு நிதின் கிட்ட நீங்க சொன்ன போல செஞ்சுட்டேன் அப்டின்னு சொல்லி துப்பாக்கிய தூக்கி அவன் கிட்ட வீசிடு. 

அப்போ தீபனா நிலைமை? என சரிகா கேட்க.. 

தீபனாவை safe ஆக அனுப்பி வைப்பான் அந்த நிதின். என்ற பிளாக். போனில் நீ பிரச்னை இல்லாம வருவ! நான் கியாரண்டி என்றான். 

ம்ம் என தீபனா ஒற்றை பதில் கொடுக்க.. 

மகி சூர்யா வந்துட்டாங்க. நீ உன்னோட வேலையா ஆரம்பி தீபனா என சொல்லி விட்டு போனை வைத்தான் பிளாக். 

தீபனா ட்ரிக்கர் செய்து சத்ய தேவ்வை சுட்டு விட்டாள். 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment