EPI 152
AAA -152
குட்டி போட்ட பூனையை போல தன்னை சுற்றி வருவான். ஆனால் இன்று என்னை அந்நியமான பார்வையில் பார்த்து கொல்கிறானே என வேதனை பரவியது அவளுக்கு. ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை உடனே புறப்பட்டிருந்தாள் அவனை பார்க்க,
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
கதவை திறங்க உதட்டை துடைத்து கொண்டு நெளிந்து பார்த்தாள் நிலா.
ருத்ரன் உடையை சரி செய்தபடி கதவை திறந்தான். வெளியில் ரிதம் நின்றிருக்க, அக்கா என்றான்.
என்ன பண்ற?
தூங்கிட்டு இருக்கவனை எழுப்பி என்ன பண்றேன்னு கேட்கிற? உனக்கே அநியாயமாக இல்லையா? அறைக்குள் எட்டி பார்த்தாள் ரிதம்.
Ridiuculas..
பக்கத்து ரூமுக்கு வா உன் பொண்டாட்டி தூங்கட்டும் என முன்னால் நடந்தாள்.
ருத்ரன் உதட்டை பிதுக்கியபடி பார்க்க, நிலா காதல் பார்வையுடன் அவனை அனுப்பி வைத்தாள்.
நிலா..
போங்க!! அடுத்து உங்க அக்கா கிட்ட அடி வாங்காதீங்க என கூறினாள் நிலா.
போறேன் என ரிதமின் பின்னால் சென்றான்.
என்ன கா? என ருத்ரன் நிமிர்ந்து பார்க்க, ஆல்ரெடி அங்கே மிதுன் கைகளில் ஆதி நைட்டு ஷிப்ட் பார்த்து கொண்டிருந்தான்.
ருத்ரனிடம் சாகியை கொடுத்தாள் ரிதம்.
அக்கா அம்மாவை..
பார்த்துக்க முடியாது அப்படி தானே? என ரிதம் மிரட்ட..
அய்யோ இல்ல.. நான் பார்த்துப்பேன் என் மருமகன் என் உரிமை.. என்றான் ருத்ரன்.
மிதுன் போன் பேசி கொண்டே ஆதியை பார்த்து கொண்டிருந்தான்.
அம்மாவும் மகி மாமியும் பகல் முழுக்க ரெண்டு பேரை பார்த்துக்கிறாங்க. இப்பவும் பார்த்துகிட்டா அவங்களுக்கு உடம்பு என்னத்துக்கு ஆகும்? என்றாள் ரிதம்.
துகில் எங்கே?
துகில் அப்பா கிட்ட தூங்குறான். சரி பார்த்துக்கோங்க. பால் அதுல இருக்கு என காட்டினாள்.
ஆமா இதையெல்லாம் கொடுத்திட்டு நீ எங்கே போற? என ருத்ரன் கேட்க..
காளைய பார்க்க என்றான் மிதுன் சிரித்து கொண்டே..
மிதுன் தலையை கொட்டியவள். ஆதியின் கன்னத்தை தடவி விட்டு கிளம்பினாள்.
சத்ய தேவ் லேப் டாப்பை நோண்டி கொண்டிருந்தான். உறக்கம் வரவில்லை..
அறை கதவின் முன்னால் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி பார்த்தாள் ரிதம்.
என்னங்க வேணும்? என சத்ய தேவ் திடுக்கிட்டு எழுந்தான்.
சக்தி!! நான் உனக்கு நியாபகமே இல்லையா? கொஞ்சம் கூட இல்லையா? என ரிதம் அவன் முன்னால் வந்தாள்.
நெற்றியை தேய்த்து கொண்டு மவுனமாக பார்த்தான் சக்தி. கையில் இருக்கும் போனை லேப் டாப்பில் கனெக்ட் செய்தாள் ரிதம்.
என்னங்க பண்றீங்க?
சத்தம் போடாத!! இப்பிடி உட்காரு.. என இருக்கையை காட்டினாள்.
உங்க பேர் ரிதம் ரைட்.. அம்மா சொன்னாங்க. நீங்க என்னோட மனைவி அப்டின்னு.. எனக்கு நிஜமாவே யாரையும் நினைவில் இல்ல.. எனக்கு உங்களை புதுசா பார்க்கிற மாதிரி இருக்கு. உங்களை சட்டுன்னு என்னோட மனைவியாக பார்க்க முடியல… எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்க முடியுமா? எல்லாத்தையும் அக்சப்ட் பண்ணிக்க எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்.என அவன் சொல்லி முடிப்பதற்குள் இறுக்கி அணைத்திருந்தாள் ரிதம்.
யாக்கை திரி காதல் சுடர் நெஞ்சே.. பிறவி பிழை காதல் திருத்தம் அனைத்தும் ஒரு நொடி உடலெங்கும் காதல் சுடர் பற்றி கொண்டது. இந்த அணைப்பு அவனுக்கும் தேவைப்பட்டது. எப்பொழுதும் அவன் கொடுக்கும் அணைப்பு இன்று அவள் கொடுப்பதில் சொர்க்கம் சென்று வந்தான். இதோ உதட்டில் முத்தமிட வந்தவவளை அந்நியனாக பார்த்து எட்ட நிறுத்தினான்.
ரிதமின் கண்களில் ஏக்கமும் காதலும் கொட்டி கிடக்க…
சாரி என்றவன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என சொல்லி கொண்டிருக்க, இது நீ உனக்கு நியாபகம் இருக்கா? என கேட்டாள் ரிதம்.
அவன் கண்களில் உண்மையாகவே ஆச்சரியம் மற்றும் பரவசம் தோன்றியது. இது கணடாவில் இருக்கும் போது மகி வரைந்த பெயின்டிங் மகி சத்தியதேவை தனியாக வரைந்து இருப்பார் அதேபோல் ரிதம் போனிடைலில் இருப்பதை தனியாக வரைந்து இருப்பார் அவ்விரண்டையும் சேர்த்து வைத்து காட்டினாள் ரிதம்.
ரிதம் ஆசையாக அதை வருடி பார்த்துக் கொண்டே இது நான் தான் இந்த குட்டி வயசுல இருக்கும்போதே உன் மேல எனக்கு பிரியம் என்றாள். எனக்கு தெரிஞ்சு உன்கிட்ட காட்டாத ஒரே விஷயம் இது மட்டும்தான் மத்ததெல்லாம் உனக்கே தெரியும் பட் இப்போ உனக்கு எல்லாமே மறந்து போச்சு ரைட்! ஆனா, இது சின்ன வயசுல நடந்தது. நீ அப்போ சூர்யா மாமா கூட இருந்த, மிதுன்… உன்னோட தம்பி அவனும், நானும் கனடாவில் இருந்தோம். என் மம்மி உன்னோட மம்மி ரெண்டு பேரும் ஒரே இடத்தில் இருந்தாங்க. அப்போ மகி மாமி இதை பெயிண்ட் பண்ணாங்க என படத்தை ஆசையாக வருடி காட்டினாள். அவளது கண்ணகுழி சிணுங்கியது.
உங்க கணக்குழி அழகா இருக்கு என்றான். ரிதம் சட்டென அவனை பார்க்க….
எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. சாரி தப்பா எடுத்துக்காதீங்க என்றான் வேண்டுமென்றே..
டேய் நான் உன்னோட பொண்டாட்டி டா!! என ரிதம் சிணுங்கி கொண்டே பார்க்க..
விருப்பமில்லாத பொன்னை அணைக்க கூடாது. இன்பா மாமா சொல்லி இருக்கார். எனக்கு விவேகா ஆண்டிய தான் தெரியும். அவங்க உன்னோட அம்மா அப்டின்னு தெரியாது. சாரி நான் காலையில் அப்படி சொல்லியிருக்க கூடாது என்றான் சத்ய தேவ்.
ரிதம் நொந்து போய் பார்த்தவள். சரி லவ் பத்தி என்ன நினைக்கிற? என கேட்டாள்.
ம்ம் கஜுராஹோ என்றான் சத்யதேவ்.
ஹே என மூச்சு வாங்க தன் கணவனை பார்த்தாள் ரிதம்.
சத்ய தேவ் புருவத்தை சுருக்கி கொண்டு இன்பா அங்கிள் கூட நான் போயிருக்கேன் என்ன கூட்டிட்டு போயிருக்காரு. அவரு சொன்னதா ஞாபகம். பட் எப்போ சொன்னாருன்னு நினைவில்லை. கஜுராஹோ தான் காதல் கோவில் அப்படின்னு சொல்லி இருக்காரு என்று முடித்திருந்தான்.
அவ்ளோ தானா? என ரிதம் ஏக்கத்துடன் பார்த்தாள்.
ம்ம் என்றான் சத்ய தேவ்.
ரிதம் அவனை அணைக்க முடியாமல் திண்டாடினாள். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி விலகி இருப்பது என தெரியவில்லை.
அவள் என்ன பேசினாலும் முட்டுக்கட்டையிடும் விதமாக பேசினான் சத்திய தேவ்.
ரிதம் ஒரு பெருமூச்சுடன் நீ என்னை லவ் பண்ண அது உனக்கு தெரியுமா என கேட்டாள்.
திரு திருவென்று முழித்தான் சத்திய தேவ்.
ரிதம் பொறுமை இழந்தவளாக என்னடா தொட்டால் ஓவரா பண்ற? தள்ளி விடுற? முத்தம் கொடுத்தா என்னை பிரிச்சு விடுற? உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? என்று கோபத்துடன் பார்த்தாள்.
சத்யதேவ் பொறுமையாக அவளைப் பார்த்து என்னை நீங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க? நீங்க யாருன்னு எனக்கு நினைவு இல்லன்னு சொல்றேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு தானே கேட்டேன். இதுல என்ன தப்பு இருக்கு? இப்படி தொடறது எனக்கு கஷ்டமா சங்கடமா இருக்கு என்றான்.
ரிதம் கோபத்துடன் அவனைப் பார்த்தவள் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? என் சத்ய தேவ் நீ இல்லடா…! என்று மூக்கு விடைக்க பார்த்தவள். “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? உனக்கு எவ்ளோ ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு தெரியுமா? மூணு பசங்க… அவங்களை யார் பார்த்துக்குவா? மறந்து போச்சுன்னு நீ பாட்டுக்கு உட்கார்ந்துகிட்டு இருந்தினா! அவங்கள யார் பார்த்துக்கறது? எல்லாத்தையும் கொடுக்க மட்டும் தெரியுதுல்ல என வாய்க்குள் முனகினாள்.
என்ன சொன்னீங்க என்று சத்ய தேவ் கேட்க..
ஹான் இருக்கும் இருக்கும் வாயில விரல் வச்சா கடிக்க தெரியாதவன்.
இந்த விளக்க மயிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று பொங்கினாள்.
ஹலோ என்னங்க கெட்ட வார்த்தை பேசுறீங்க என திகைத்துப் பார்த்தவனை… பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அதைவிட கோபம் அதிகமாக வந்தது.
ரிதம் பொறுமையாக அவனை பார்த்தவள். மூணு பசங்க நமக்கு…. உங்க அம்மா அப்பாவுக்கு நிறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இருக்கு. உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணனும், உனக்கு தங்கச்சி இருக்கா இதழினி. அவளுக்கு கல்யாணம் பண்ணனும். சோ உன்னோட மம்மி டாடி ரெண்டு பேரும் பிஸி ஸ்கெடியுள்ள இருப்பாங்க. அதை விட மாமா பிசினஸ பாத்துக்கணும்.
எங்க வீட்ல என்னோட தம்பி அதே போல தான். இப்போ அடுத்து நிலாவுக்கு குழந்தை பிறக்க போகுது. அவங்களுக்குன்னு சில ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இருக்கு. நீ மறந்து போயிடுச்சு, மயிரே போச்சுன்னு உக்காந்துட்டு இருக்க? இதை எல்லாம் நமக்காக ஒதுக்கி வச்சுட்டு அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நாளைக்கே நிலாவுக்கு குழந்தை பிறந்துட்டா, என் தம்பி அவளை பாத்துக்க போயிடுவான். மிதுன் இன்னுமும் ஏன் இப்படியே இருக்கணும்? கொஞ்சமாவது நீ யோசிச்சியா? என கோபமாக பார்த்தாள்.
சத்ய தேவ்..?
தொடரும்..