அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
491 views

Episode-102

எனக்கு சம்மதம்? உன்னோட வேலைக்காரனா? எனக்கு ஓகே என்றான் ருத்ரன்.

நிதின் நிவாஸ் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, spr திடுக்கிட்டு நிலாவையும் ருத்ரனையும் பார்த்தார்.

ருத்ரன் அவளின் முன் வந்து நீ சொன்னது போல நான் கோபப்பட மாட்டேன். எனக்கு bipolar disorder இல்லன்னு உன்கிட்ட நான் ப்ரூஃப் பண்றேன். அண்ட் இந்த ஆறு மாசம் நான் உன்னை மீறி எதுவும் செய்ய மாட்டேன். அக்ரிமென்ட் காட்டு எங்கே சைன் பண்ணனும்? என கேட்டான்.

நிதின் தனது தங்கையின் புத்திசாலி தனத்தை எண்ணி வியந்தவன். நிலா ஆக்சுவலி இப்போ தான் இந்த நிதின் பிரகாஷ்க்கு தங்கச்சியா நடந்துக்கிற! என்றான்.

என்ன பைத்தியக்கார தனம் இது? நிலா உனக்கென்ன பைத்தியமா? என ஹரிணி கேட்க..

கண்மணி வயிற்றை பிடித்தபடி வருத்ததுடன் பார்த்தாள் ருத்ரனை.

ஹே உள்ளே போடி ஹரிணி! என் தங்கச்சி எல்லாத்தையும் சரியா தான் பண்றா! உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு என்றான் நிதின்.

ருத்ரன் எந்த வெளிப்பாடும் இல்லாமல் இருக்க, நிலா அவனை பார்த்து, இது ஒன்னும் விளையாட்டு இல்ல. அதே போல உங்க அதிகாரம் எதுவும் இங்கே பலிக்காது. அதனால புறப்படுங்க! விவாகரத்து வாங்கிப்போம் என்றாள்.

நான் முன் வச்ச காலை பின் வக்கரதா இல்ல. Challenge க்கு ரெடி என மீண்டும் கூறினான் ருத்ரன்.

நிலா கன்னக்குழி தெரிய சிரித்தவள். எதுக்கும் இருக்கட்டுமே அப்டின்னு இன்னொரு அக்ரிமென்ட் காப்பி இருந்தது. ரெண்டு அக்ரிமென்ட். ஒண்ணு விவாகரத்து அக்ரிமென்ட் அதுல ஆறு மாசம் நான் சைன் போட்டது. என்கிட்ட இருக்கும். அதுல நீங்களும் சைன் போடணும். இன்னொன்னு இந்த ஆறுமாதம் வேலைக்காரனாக இருக்க நீங்க ஒத்துகிட்டதுக்கு ஒரு ஒப்பந்தம். அதுல dos and don’ts எல்லாமே மென்சன் ஆகி இருக்கும் என்றாள் நிலா.

ம்ம் என்றான் ருத்ரன்.

ஆறு மாசம் கழிச்சு நீங்க தாக்கு பிடிச்சு கோபப்படாமல் இருந்தீங்கன்னா அந்த விவாகரத்து பேப்பரை கிழிச்சு எறிஞ்சிட்டு நான் உங்க கூட வந்துடுவேன்.

இல்லன்னா என்ன நடக்கும்? என நிவாஸ் கேட்க..

கைகளை இறுக்கி மடக்கி கோபத்தை அடக்கினான் ருத்ரன்.

இல்லன்னா விவாகரத்து நோட்டீஸ் அவங்க வீட்டுக்கு போகும் மனம் ஒத்து விவாகரத்து கிடைக்கும். என்றாள் நிலா.

கண்டிப்பா இதுல என் தங்கச்சி தான் ஜெயிப்பா என்று நிவாஸ் கூற..

இது எங்களுக்குள்ள இருக்க தனிப்பட்ட விசயம் யாரும் இதுல மூக்கை நுழைக்க வேணாம். என்றாள் நிலா.

Spr எதுவுமே பேசாமல் அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்தார். குழந்தைகள் விளையாடுவது போல இருந்தது.

நிலா சிரித்து கொண்டு நீங்க தங்க போற இடம் அங்கே!! உங்களை சுத்தி cctv footage இருக்கும் 24 மணி நேரமும். அண்ட் குடிக்க கூடாது, ஸ்மோக் பண்ணவே கூடாது. ரெண்டு வேளை தான் சாப்பாடு. உங்களுக்கு சம்பளம் மாசம் 3000 ரூபாய்.

நிதின் இகழ்ச்சியாக சிரிக்க.. ருத்ரன் அதே வெளிப்பாட்டுடன் நின்றான்.

நிலா மேலும் அவனிடம் உங்களுக்கு மூணு ட்ரெஸ் தான். நீங்களே உங்க ட்ரெஸ் துவைச்சுக்கணும். ஆறு மாசம் உங்க வீட்டுக்கு  பேசணும்னு நினைச்சா இந்த போன்ல பேசிக்கொங்க. என பட்டன் போனை நீட்டியவள் இதுல பாம்பு கேம் தவிர வேற எதுவும் வராது. இதுல தான் நானும் கால் பண்ணுவேன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரணும். ஹான் சொல்ல மறந்துட்டேன். போன் பேட்டரி ரொம்ப வீக் கொஞ்சம் பார்த்து என்றாள் நிலா.

நிவாஸ் திருப்தியுடன் இன்னொரு பக்கம் அமர்ந்து கொண்டான். நிலா அவனிடம் மேலும் உங்களுக்கு தயிர் சாதம் தான் i mean only சைவம் மட்டும் தான் no மாமிசம் என்றாள்.

வேற என ருத்ரன் கூலாக இருக்க..

காலையில் நாலு மணிக்கு எழுந்து இங்கிருந்து ரெண்டு கிலோ மீட்டர் நடந்து போய் அந்த சில்வர் குடத்தில் தண்ணிய ஆத்துல இருந்து மொண்டு வந்து இதோ entrance ல இருக்க பிள்ளையாருக்கு ஊத்த வேணும் மூணு குடம். அண்ட் அதை முடிச்சிட்டு காலையில் போய் நான் பேப்பர் படிக்க பேப்பர் வாங்கிட்டு வரணும் அதுவும் நடந்து போய்.. என்றாள் நிலா.

அடுத்து? என ருத்ரன் கேட்க..

நிலா தன் மகனை தோளில் போட்டு தட்டியபடி, வீட்டுக்கு வந்ததும் எங்க அப்பா ஆபிஸ் கிளம்புவார் அவருக்கு குட்மார்னிங் சொல்லிட்டு அப்டியே என் டாடிக்கு நீங்க டிரைவர் வேலை பார்க்கணும். அப்புறம் என் மம்மிக்கு கூடவே வேலை பார்க்கணும். இதுக்கு நடுவில் உங்களுக்கு பிரசர் BP செக் பண்ணிட்டே இருப்பேன்.

ருத்ரன் எதுவும் பேசாமல் அவளை பார்க்க, என் டாடி ஆபிசில் வெளியேவே நீங்க காவலுக்கு நிக்கணும் எடுபிடி வேலை செய்யணும். வீட்டுக்கு வந்ததும் எங்க வீட்ல இருக்க நாயை குளிக்க வைக்கணும். அண்ட் அது போக எனக்கு தோணும் போது இன்ஸ்டன்ட்டா வேலை செய்யணும். நான் சொல்ற ஆர்டர்க்கு கட்டு படனும். உங்களுக்கு முடியாது அப்டின்னா ஓடிடலாம் என்றாள் நிலா.

ருத்ரன் அப்பொழுதும் அப்படியே நிற்க.. நிலா மேலும் எங்க வீட்ல தோட்ட வேலை வீட்டு வேலை எல்லாம் செய்யணும். நாய்க்கு சாப்பாடு போடணும் அதுக்கு எப்போவுமே மதியம் அசைவம் தான் புடிக்கும் ஆனால் நீங்க
உங்களுக்கு சைவம். வாரத்தில் ஒரு நாள் மட்டும் உங்களுக்கு முட்டை என்றாள் நிலா.

தீரா பிளீஸ் இதெல்லாம் வேணாம் நீங்க போயிடுங்க என்றாள் ஒருவள்.

அனைவரும் யாரென பார்க்க.. கண்மணி தான் வேதனையுடன் பிளீஸ் தீரா இது பணிஷ்மென்ட் மாதிரி தெரியல பழி வாங்குற மாதிரி தெரியுது. நீங்க எப்போவுமே சொல்லுவீங்களே அசைவம் சாப்பிடுறவங்களுக்கு கூட இரக்க குணம் இருக்கும் சைவம் சாப்பிடுற ஆளுக்கு தான் cruel கொடூர எண்ணம் இருக்கும்னு அது மாதிரி இருக்கு. ப்ளீஸ் தீரா என கண்ணீர் கோர்க்க கூறினாள் கண்மணி.

ருத்ரன் சிரித்தபடி அவளை பார்த்து, இதை விட பார்த்தாச்சு மேம் என்னால முடியும். உங்களுக்கு தெரியும் தானே!! என்னோட பிரெண்டா உங்களுக்கு என்னை பத்தி தெரியாதா என்ன? என அதே தொனியில் கூறினான்.

அவ்வளவு தான் மீனாட்சியின் மீது இருந்தா கோபம் ருத்ரனுக்கு எப்போதோ கரைந்து விட்டது. கண்மணி என்னும் மீனாட்சி கூட கெடுதல் நினைக்கவில்லை அவனுக்கு. ஆனால் கட்டியவள் அவனை மணக்கோட்டை கட்டி ஆள்பவள் தான் மரணதண்டனைக்கு வித்திடுகிறாள்.

நிலா கோபத்தையும் இயலாமையையும் கட்டு படுத்தி கொண்டு இந்த வீட்ல இருக்க யாரு என்ன வேலை சொன்னாலும் கேட்கணும். இதுக்கெல்லாம் சம்மந்தம் அப்டின்னா தாராளமா வெல்கம் என்றாள்.

ஓகே எல்லாத்தையும் அக்சப்ட் பண்ணிக்கிறேன். பட் இதுல ஒரு சின்ன சலுகை கிடைக்குமா? என கேட்டான் ருத்ரன்.

என்ன? என நிலா ஏகத்தால குரலில் கேட்க..

டெய்லி ஒரு மணி நேரம் நான் என ருத்ரன் ஆரம்பிக்க..

உங்க மூச்சு காத்து கூட என் மேலே என அவள் சொல்ல வருவதற்குள்

அது உன் குழந்தை மட்டுமில்லை எனக்கும் குழந்தை தான் என்றான் ருத்ரன் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொண்டு..

தீரா நான் இப்போவே இன்பா அங்கில்க்கு கால் பண்ணி சொல்றேன் என ஹரிணி நகர..

கா இது டாடிக்கு தெரியும். அண்ட் சக்தி மாமாவுக்கும் தெரியும் பிளீஸ் இது எங்க லைஃப் நாங்க பார்த்துக்கிறோம் என்றவன். நிலாவின் பக்கம் வந்து அக்ரிமென்ட்ல குழந்தை என் கூட ஒரு மணி நேரம் இருக்க போல ரூல் ad பண்ணிட்டு வந்து வாங்கிக்கோ நான் அது வரை வச்சிருக்கேன் என பிடுங்கி கொண்டான்.

நிலா பத்திரத்துடன் உள்ளே சென்றவள் கணிராவுக்கு போன் செய்ய அவள் குரு பிரகாசுடன் வந்திருந்தாள்.

நிலா நீ சொன்ன போல ad பண்ணிட்டேன் என நீட்ட.

தேங்க்ஸ் அக்கா என வாங்கி கொண்டவள். R0ll no 10 அவரை வர சொல்லுங்க என்றாள் நிலா.

குரு அவ்விடத்தில் நின்று கொண்டிருக்க குழந்தையுடன் வந்தவன். படிச்சு பார்க்க அரை மணி நேரம் கொடுங்க என குழந்தையுடன் பேப்பரையும் வாங்கி சென்றான்.

நிலா அங்கும் இங்கும் நடந்தபடி இருக்க..

நிலா குழந்தைய வாங்கிக்கோ என உள்ளிருந்து சத்தம் கேட்டது.

ருத்ரன் இருக்கும் இடத்துக்கு சென்றாள். அங்கே குழந்தையை தோள் மேல் போட்டபடி நின்றிருந்தான்.

குழந்தைய கொடுங்க!!

ம்ம் வாங்கிக்கோ!! என அதே இடத்தில் நின்றான்.

நிலா ஒரு பெரு மூச்சை விட்டபடி அருகில் செல்ல அவளை மெல்ல தள்ளி கதவை லாக் செய்தவன் உதட்டில் முத்தமிட்டான் ஆவேசமாக..

குழந்தை சிணுங்கும் சத்தம் கேட்க.. நிலா மனதில் இன்னும் திருந்தல இவன் என்ன ஜென்மம் என வேகமாக அவனிடமிருந்து விடுபட்டவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள்.

ருத்ரன் சிரித்து கொண்டே, உன்னை என்னோட வழிக்கு கொண்டு வர 5 நிமிசம் ஆகாது. ஆனால் நான் இதையெல்லாம் ஏன் பண்றேன் தெரியுமா?

நிலா கோபத்தில் பார்க்க..

ஏன்னு இந்த 180 நாள் முடிவில் உனக்கு தெரியும். என அவன் உதட்டை சப்பு கொட்டியபடி குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு அக்ரிமென்டில் சைன் போட்டான்.

நிலா அவனிடம் நல்லா யோசிச்சுக்கோங்க மூணு life ஜாக்கெட் தான் இருக்கு உங்ககிட்ட மூணு தடவை தான் உங்களோட கோபம் வெளிப்படனும். இந்த ஆறு மாசத்துல.. அதுக்கு மேலே ஒரு தடவ நடந்தது. விவாகரத்து தான்.

கண்டிப்பா கோபப்பட மாட்டேன். இனி ஜென் நிலை தான். உன்னோட முத்தத்தில் இருந்து தொடங்கி வச்சிருக்க நீ என்றவன். விசில் அடித்தபடி வெளியே சென்றான்.

நிலா அதே இடத்தில் நின்றாள்.

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment