
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
- 18 Jul 2025
- 914 reads
- ☆ No ratings yet
- 7 min read
Episode -34
அவனது கையில் இருக்கும் சிகரெட்டை பிடுங்கி டஸ்ட் பின்னில் வீசினாள் நிலா. ஹே என்ன டி! என கைகளை பிடித்து இழுத்தான் ருத்ரன்.
நான் தான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேனே! ட்ரிங்க்ஸ் பண்ண கூடாது சிகரெட் பிடிக்க கூடாதுன்னு. அப்புறம் என்ன? இப்போ வந்து பிடிக்கிறீங்க? இது நல்லா இல்ல ருத்ரன் என அவள் சொல்லிக் கொண்டே தன் கைகளை பார்த்தாள்.
அதுக்குன்னு நீ பிடுங்கி போடுவியா? என்ன திமிரா? உன்னோட பண திமிர் எல்லாத்தையும் என்கிட்ட காட்டாத எனக்கு அடங்கி இருக்கணும் நீ! என்றவன் அவளை பிடித்த கையுடன் அப்படியே படுக்கையில் தள்ளினான்.
நிலா தலை தாழ்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, ஹே பேசு டி! என உருமினான். அவள் அவனை வெற்று பார்வை பார்க்க.. வாங்கி பேசு டி என்றான்.
ஹாங்! என அவள் பார்க்க, ம்ம் பேசு எங்க அம்மா உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க! என்றான்.
நான் என்னோட போன்ல பேசிக்கிறேன். இல்லன்னா நீங்க இங்கே வந்த விசயம் அவங்களுக்கு தெரிஞ்சு போயிடும் என்றாள் நிலா.
தெரிஞ்சா என்ன? என ருத்ரன் ஒரு காலை எடுத்து அவளை அனைகட்டுவது போல கட்டிலில் வைத்த ஊன்றியவன் ஒரு காலுடன் நின்றான். மிகவும் நெருக்கத்தில்.
அது அது வந்து?
வாங்கி பேசு! என போனை நீட்டினான். பிஞ்சு விரல்களால் போனை வாங்கி கொண்டவள் மெல்ல காதில் வைத்தாள். ஹலோ நிலா என எதிர்முனையில் ருத்ரனின் அன்னை விவேகாவின் குரல். மாமி நல்லாருக்கீங்களா? என்று கன்னகுழி ததும்ப பேசினாள் நிலா.
ருத்ரன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான். உடையின் நுனியை திருகி கொண்டே புருவங்கள் நெளிந்து விரிய பேசினாள் வெகுநேரம். நேரத்தை பார்த்தான் கால் மணி நேரத்தை கடந்தது. இந்த அம்மா! என சலித்து கொண்டவன். ஆர்வத்துடன் பேசி கொண்டிருந்தவளின் போனை வெடுக்கென பிடுங்கி மா போதும் இவள் கிட்ட கால் மணி நேரம் பேசியிருக்க நீ! என ருத்ரன் கூற..
ஏன் டா தீரா! என விவேகா பேச.. மா நான் அப்புறம் கூப்பிடுறேன் என கட் செய்தவன். திரும்பி பார்க்க.. அங்கே நிலா இல்லை.
ஹே எங்கே டி இருக்க? ஹாங் வந்துட்டேன். பாத்ரூம் வந்தது. அஞ்சு மினிசம் என்றாள்.
ருத்ரன் அந்த படுக்கையில் விழுந்தவன் நெண்டினான். உடல் எல்லாம் நடுங்கியது. அவளின் கண்ணகுழி உள்ளுக்குள் அவனுக்கு பாதாள குழி வெட்டியது. அவளின் பிஞ்சு விரல்கள் சாக்கோ ஸ்டிக் போல கடித்து தின்ன வேண்டும் என தோன்றியது.
கதவை திறந்து கொண்டு நிலா வர, தண்ணீரை வேக மூச்சுடன் குடித்தவன் தன்னை கட்டு படுத்தி கொண்டு அமர்ந்தான். அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்க.. பகவானே ருத்ரன் யாரோ வந்துட்டாங்க! பிளீஸ் நீங்க ஒளிஞ்சுகோக பிளீஸ்! பிளீஸ் என வேகமாக அவன் முன் அவள் வர..
ஹே போய் கதவை திற டி! யாருக்கும் நான் பயப்பட மாட்டேன் போ!
இல்ல ருத்ரன் பிளீஸ்! பிரச்னை ஆகிடும் என நிலா கூற… என்ன டி பேர் சொல்லி கூப்பிடுற? என்ன நீயும் நானும் ரொம்ப தெரிஞ்சவங்க மாதிரி பேர் சொல்ற! மரியாதை சொல்லி கொடுக்கலயா உன் அப்பன் உன்னோட அண்ணனுக தடி தாண்டவராயனுக ரெண்டு பேரும்? என ருத்ரன் ஹாயாக கட்டிலில் படுத்து கொண்டான்.
நிலா என தேஜுவின் குரல் கேட்க.. இதோ வரேன் மா! என யோசித்தவள். சரி இதை ஒரு சாக்கா வச்சு கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று கதவை திறந்தாள்.
மா! நானும் எவ்வளவு சொல்லியும் ருத்ரன் செவுறு ஏறி குதிச்சு வீட்டுக்கு வந்துட்டார். அதுக்கு தான் சொன்னேன் இந்த கல்யாணம் வேணாம்னு. கொஞ்சம் கூட மரியாதை இல்ல மா! இதெல்லாம் டாடிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? என நிலா சொல்லி கொண்டிருக்க..
என்ன உலரிட்டு இருக்க நீ? யாரு சுவர் ஏறி குதிச்சு வந்தது? என அவளை விநோதமாக பார்த்தார் தேஜு.
மாமி! அவளோட அடி மனசுல இந்த கல்யாணம் நிக்கணும்னு ஆசை மாமி அவளுக்கு! அதான் இப்படி பேசிட்டு இருக்கா என ருத்ரன் நிலாவின் பின்னால் வந்து நின்றான்.
தேஜு நிலாவை முறைத்தவர். அது தீரா அவள் எப்போதும் அப்படி தான் கற்பனை வளம் ரொம்ப அதிகம். தூங்கும் போது நீ கனவுல வந்திருப்ப போல உன்னை நினைச்சுக்கிட்டு இருந்திருப்பா! அதான் இப்படி சொல்லிட்டு இருக்கா! நீ எதையும் தப்பா எடுத்துக்காத அவள் சின்ன பொண்ணு ஒண்ணுமே தெரியாது. இங்கிருந்து அவளோட சித்தப்பா வீட்டுக்கு கூட தனியா போக தெரியாது. அவ்ளோ செல்லம். என்றவர் சரி அதை விடு ருத்ரா உனக்காக மட்டன் சூப், சிக்கன் சூப், ஆட்டு கால் பாயா, நண்டு சூப் எல்லா ஸ்டார்ட்டர்சும் இதுல இருக்கு உனக்கு எது பிரியமோ அதை சாப்பிடு. அண்ட் நிலா உனக்கு வெஜ் சூப், முடவாட்டுகால் சூப், கார்ன் சூப், மஷ்ரூம் சூப் எல்லாமே இருக்கு ரெண்டு பேரும் குடிங்க நான் லஞ்ச்க்கு போன் பண்றேன் கீழே வாங்க. என்று விட்டு ட்ராலியை நிலாவின் பக்கம் மெல்ல தள்ளினார்.
மா! என நிலா அதிர்ச்சியுடன் நிற்க.. என்ன டி மசமசன்னு நிக்கிறாய்? எடுத்துக்கோ போ! நீ பொம்மனாட்டி இன்னும் பச்சை குழந்தை மாதிரி பாத்தின்ருக்காத என்று மகளின் காதில் கூறியவர் சாப்பிடுங்க என்று விட்டு சென்றார்.
என்னை மாட்டி விடுறயா டி! உள்ளே போடி என கதவை தாள் போட்டான். நிலா கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கிய படி அவன் பின்னால் சென்றவள் கைகளை பிசைந்த படி நின்றாள்.
அவள் பார்க்காத நேரத்தில் அவனது பாக்கட்டில் இருந்த மினி மதுவை மொத்தமாக வாயில் சரித்து கொண்டான்.
அமைதியாக இருக்கிறானே என்னாச்சு? இந்நேரம் திட்டி தள்ளுவான் என நிமிர்ந்தாள். அவன் குடித்து கொண்டிருப்பது தெரிய.. ருத்ரன் என்ன பண்றீங்க? உங்க கிட்ட எத்தனை தடவை சொல்றது? என வேகமாக பிடுங்கினாள்.
நான் காலி பண்ணிட்டேன் டி! எப்பவோ! என அவளை பார்த்து சிரித்தான்.
நிலா வேதனையான முகத்துடன் “எதுக்கு இப்படி குடிச்சு உடம்பை கெடுத்துக்குறீங்க? குடிக்க காரணம் என்ன? அவ்ளோ கஷ்டத்தோட இருக்குறதால தான குடிக்கிறீங்க? அவ்ளோ வெறுப்பு என் மேலே!
பிடிக்காம எதுக்கு என்னை கட்டிக்கிரீங்க?”
அவளின் கையை பிடித்து இழுத்தான். நெஞ்சில் முட்டி நின்றவளின் கையில் சிக்கன் சூப் எடுத்து நீட்டியவன். ஊட்டி விடு என அருகில் அமர்ந்து கொண்டான்.
நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ருத்ரன். இது வேணாம் இந்த கல்யாணம் வேணாம். எனக்கு பிடிக்கல. உங்களோட குடி, இந்த சிகரெட், துடிக்க வைக்கிற மாதிரி பேசுற உங்க பேச்சு எதுவும் பிடிக்கல! பிளீஸ் என்னை விட்டுடுங்க! இந்த கல்யாணத்தில் இருந்து எப்டி தப்பிக்கிறதுன்னு போராட்டமா இருக்கு. எங்க அண்ணனுங்க யாருக்கும் இதுல விருப்பம் இல்ல இது சரி வராது. நிவாஸ் அண்ணாவுக்கும் உங்களுக்கும் சுத்தமா ஆகாது. இப்படி குடிச்சிட்டு எங்க அப்பா முன்னாடி நீங்க வந்தால் அவரு ரொம்ப வேதனை படுவார். நான் இப்போவே உங்களை பத்தி சொல்ல போறேன். நீங்க குடிச்சிருக்க விசயத்தை என அவள் எழ முயற்சி செய்ய..
ஹே என அவளின் தோல் பட்டையுடன் ஒரு கையை போட்டு கொண்டவன். போதையிலும் தெளிவாக அவளின் கை விரலை பிடித்து இது யார் போட்டது? எங்க அம்மா மோதிரம் உனக்கு வந்திருக்கு. நீ என் அம்மா விருப்பம். எங்க டாடிக்காக நான் எதுவும் பண்ணதில்லை. இந்த கல்யாணம் நடக்கணும் நீ தான் என்னோட பொண்டாட்டி! அத நடக்க விடாமல் எதுவும் தாகிடு தத்த வேலைய நீயோ உன் அண்ணனோ செஞ்சிங்க! நான் உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன். உன்னோட டாடி என ஒற்றை கண் சிமிட்டினான்.
“அய்யோ அப்பாவை எதையும் செய்யாதீங்கோ” என்று நிலா பதட்டத்துடன் கண்களில் நீர் கோர்க்க கூற.. நான் என்ன செய்ய போறேன்! உன்னோட அப்பா உன் அண்ணனுகள செய்ய போறாரு. சரி எனக்கு சூப் ஊட்டு எடு! என அவளின் கழுத்தில் சாய்ந்தான் போதையின் கிறக்கத்தில்..
நீங்க குடிக்கிறது என நிலா மீண்டும் ஆரம்பிக்க.. ஹே ஒன்னு விட்டனா பார்த்துக்க நசனசன்னு பேசிட்டே இருக்க.. எனக்கு எங்கே எப்டி நடந்துக்கணும்ன்னு தெரியும். நான் சொல்ற வேலையை செய் டி! என கன்னத்தை அழுத்தி பிடித்தான். கண்ணக்குளி இன்னும் குழி விழும் அளவுக்கு அவனது பிடித்தம் இருந்தது.
நிலா சிக்கன் சூப்பை எடுத்து ஊட்ட.. அதை ரசித்து குடித்தவன். யம்மி என அரை பவுல் காலி செய்தான். ம்ம் என ஒவ்வொரு ஸ்பூனாக அவள் நீட்ட.. போதும் என்றவன். ஆட்டு கால் சூப் எடு! என உத்தரவிட.. எடுத்தாள்.
அதை வாங்கி அவளின் வாய்க்கு அருகில் நீட்டினான்.
பிளீஸ் வேணாம்ணா! நேக்கு வேணாம்! என பழக்க தோஷத்தில் பாட்டன் பாஷை எட்டி பார்த்து விட..
என்ன அண்ணனா? நான் உனக்கு அண்ணனா டி! ஒழுங்கா இதை குடிக்கிற! குட்ரி என வாய்க்கு அருகில் நீட்டினான்.
“நான் அசைவம் சாப்பிட மாட்டேன் பிளீஸ்!”
ஓ சாப்பிட மாட்டியா? என அருகில் நெருங்கினான்.
இல்ல இல்ல குடிக்கிறேன் என கண்ணீருடன் அவள் வாயின் அருகில் கொண்டு சென்றாள்.
ம்ம் குடி என ருத்ரன் சொல்ல..
முடியாது என்றுவிட்டு வேகமாக எழுந்து அவனிடம் இருந்து தப்பிக்க வெளியே செல்ல முடிவெடுத்தவள் அறை கதவை நோக்கி ஓட ருத்ரன் வளைத்து பிடித்தான் அவளை..
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels










💬 Be the first to comment