Episode -99
நிலா என்ன செய்வதென புரியாமல் அமர்ந்திருந்தாள். அடுத்து வந்த நாட்கள் இன்னும் மோசமாக இருந்தது பசை போல அவளிடம் ஒட்டி கொண்டான். உணவு உறக்கம் என அனைத்தும் அவளுடன் தான். அவளின் முன் வேறு ஒருவனாக தெரிந்தான். ஒரு கட்டத்துக்கு மேல் அவளால் முடியவில்லை. தீர்க்கமாக ஒரு முடிவை எடுத்தாள். அதற்கு முன் சத்ய தேவ் எப்படி இருக்கிறான் என்று பார்க்க சென்றாள்.
அங்கே அவளை பார்த்த கலைவாணி பாசத்துடன் வாடா தங்கம் என அழைக்க..
ஹே அங்கேயே நில்லு என வந்தார் மைவிழி.
சித்தி!! என நிலா அதே இடத்தில் நின்றாள்.
இங்கே எதுக்கு டி வந்த? என மைவிழி கோபத்துடன் கேட்க
அவ்விடத்துக்கு இன்பா மற்றும் விவேகா இருவரும் வந்தார்கள்.
நிலா மகியை பார்த்து கொண்டு அண்ணனை பார்க்க வந்தேன். நான் வர கூடாதா சித்தி? என கேட்டாள் கண்களில் நீருடன்.
என் பையன உன்னோட அண்ணா சுட சொல்லுவான். நீ அவனை பார்க்க வருவ? இதையெல்லாம் நாங்க நம்பனும். அப்படி தான! மரியாதையா வெளியே போயிடு! என மை விழி கூற..
விடு மைவிழி! அவள் இன்பா அண்ணாவோட மருமகள். அவங்களை பார்க்க வந்திருப்பா என்றார்.
இன்பா விவேகாவிடம் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ! என்றார்.
நிலா அழுகையுடன் குழந்தையை அணைத்தபடி பிளீஸ் சித்தி! நான் அண்ணனை ஒரே ஒரு முறை பார்த்திட்டு போயிடுறேன். என கெஞ்சினாள்.
மகி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார். சத்தம் கேட்டு சத்ய தேவ் அறையில் இருந்து வெளியே வந்தான்.
அண்ணா!! என வேகமாக நிலா அருகில் செல்ல..
ஹே வெளியே போடி!! என்ற மைவிழி அதன் பின் விவேகா!! உன் மருமகள தயவு செஞ்சு போக சொல்லு என கூறினார்.
சித்தி பிளீஸ் என சத்ய தேவ் பேச..
சக்தி நான் சொல்றத கேளு! இவள நம்ம நம்ப முடியாது. மோசமான ஒருத்தி! என சரமாரியாக திட்டினார்.
கலைவாணி மகியை பார்த்து, ஹே நம்ம நிலா அதுவும் பச்சை உடம்புக்காரி அவளை கஷ்ட படுத்துறா உங்க அக்கா! நீ எதுவும் பேசு மகி அமைதியா இருக்க? என்றார் பதட்டத்துடன்.
நிலா நீ வீட்டுக்கு கிளம்பு மா என இன்பா கூற..
மாமா நான் நிலா கிட்ட பேசணும். நான் பேசுவேன். அவள் என்னோட தங்கச்சி என்று விட்டு சத்ய தேவ் நகர, அதற்கு மேல் அங்கிருக்கும் யாராலும் பேச முடியவில்லை.
நிலா குழந்தைய எங்கிட்ட கொடு என வாங்கி கொண்டார் கலை வாணி.
எப்படி இருக்க நிலா? என சத்ய தேவ் கேட்க..
அண்ணா எல்லாத்துக்கும் நான் தான் காரணம். நீ இந்த நிலைமையில் இருக்க நான் தான் காரணம் என்னை மன்னிச்சிடு என அழுதாள்.
சத்ய தேவ் அவளின் முகத்தை பார்த்து, என்ன பேச்சு பொண்ணு இது? இது மாதிரி பேசாத! இதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. தேவையில்லாம கண்டத நினைக்காத;
இல்ல அண்ணா! நான் என அவள் மேலும் அழ..
எல்லாமே நல்லதில் தான் முடிஞ்சிருக்கு. நீ யாரை மனசார சின்ன வயசில இருந்து விரும்பினயோ அவனையே கல்யாணம் பண்ணிட்ட!
நிலா விரக்தியுடன் பார்க்க..
இதுக்கும் ருத்ரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. அவனும் உன்னை போல தான். நான் குண்டடி ஒரு நிமிசம் தான் வாங்கினேன். ஆனால் ருத்ரன்? அவன் பாவம் என்றான் சத்ய தேவ்.
சரி அண்ணா! என அவள் வெளியே செல்ல போக..
எப்டி உன்னை வீட்ல விட்டாங்க? உங்க அண்ணனூக? என சத்ய தேவ் கேட்க..
அவங்க எங்கே விட்டாங்க? அவர் தான் என்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டார். என்றாள்.
ஓ அந்த அளவுக்கா? ருத்ரன எவ்ளோ மாத்தி இருக்க நீ? என சத்ய தேவ் கூற..
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை என நிலா சொல்லி கொண்டே வெளியே வந்தவள். அத்தை மாமா வீட்டுக்கு வர்றீங்களா? கொஞ்சம் பேசணும் என அழைத்தாள்.
என்ன விசயம்? என இன்பா கேட்க..
எல்லாமே நல்ல விஷயம் தான் என நிலா புறப்படுவதற்கு முன் மகியின் முன் கை கூப்பி என்னை மன்னிச்சிடுங்க சித்தி. சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என கூறி விட்டு புறப்பட்டாள்.
இன்பா ருத்ரனுக்கு அழைத்து கொண்டே வந்து சேர்ந்தார்.
நிலா குழந்தையுடன் வீட்டில் இருக்க, என்ன விசயம் என விவேகா கேட்டார்.
உங்க பையன் என்னை கட்டாயப்படுத்தி தான் இங்கே கூட்டிட்டு வந்தார். அண்ட் எனக்கு நல்லா தெரியும். உங்களுக்கு சத்ய தேவ் அண்ணாவுக்கு குண்டடி பட்டதில் இருந்து என் பிறந்த வீட்டு குடும்பம் மேலே கோபம்.
இப்போ என்ன சொல்ல வர? என இன்பா கேட்க..
எனக்கு உங்க பையன் கூட வாழ இஷ்டம் இல்ல. விவாகரத்து வேணும். என்றாள் தீர்க்கமாக..
அது நீயே செத்தாலும் நடக்காது டி! என சொல்லி கொண்டு உள்ளே நுழைந்தான் ருத்ரன்.
விவேகா நிலாவின் பக்கம் சென்று, உனக்கே நல்லாருக்கா? நிலா? உங்க அண்ணன் பண்ணது சரியா? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? நீ விவாகரத்து கேட்க? என் பையன் உன் கூட வாழ கூட்டிட்டு வந்திருக்கான் என்றார்.
நிலா கண்களில் நீர் வழிய, இன்பா அங்கில் இன்னும் ஒரு தடவை கூட என் பையன பார்க்கல! இந்த வீட்டு குழந்தை தானே! நீங்க எல்லாரும் என்னை வேண்டா வெறுப்பா நடத்துறீங்க? என்னால இங்கே இருக்க முடியாது. எனக்கு ருத்ரன பிடிக்கல! விருப்பம் இல்ல இந்த வாழ்க்கையில். அவ்ளோ தான் இதுக்கு மேலே நான் எதுவும் சொல்ல மாட்டேன். என் அண்ணனுக்கு போன் பண்ணிட்டேன் அவன் வருவான். நாங்க போறோம். என குழந்தையை நெஞ்சுடன் அணைத்தாள்.
அவளின் அருகில் கோபத்துடன் நெருங்கிய ருத்ரன். அவளது கழுத்தை பிடித்தான் அழுத்தமாக…
டேய் தீரா!! என விவேகா கத்த..
டேய் விட்ரா அந்த பொன்னை என இன்பா தடுக்க முயன்றார்.
என்னடி விட்டா பேசிட்டூ போற? உன் வீட்ல வாழவெட்டியா இருப்ப? ஆனால் இங்கே உனக்கு வாழ்க்கை கஷ்டமா இருக்கா? ராஸ்கல். என அவன் சொல்ல கையில் இருக்கும் குழந்தை கத்த ஆரம்பித்தது.
டேய் விடு என இன்பா அவனை இழுத்து ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
டாடி! நீங்க என் விசயத்துல தலையிடாதீங்க? நீ எப்டி அங்கே போறன்னு நான் பார்க்கிறேன் என ருத்ரன் கூற…
அதற்குள் நிவாஸ் ஒரு வக்கிலுடன் வந்து சேர்ந்தான். இவர்கள் இருவரையும் பிரிப்பதில் அவனுக்கு அத்தனை நிம்மதி.
உள்ளே வரலாமா என கேட்டு கொண்டே நுழைந்தான் நிவாஸ்.
ருத்ரன் கண்கள் சிவக்க நிலாவை பார்க்க,
அவங்க விவாகரத்து மனு போட்டிருக்காங்க.. இப்போ அவங்க கை குழந்தையோட இருக்காங்க அதனால அவங்க பிறந்த வீட்ல இருக்கறது தான் சரி!! இது கோர்ட் உத்தரவு என நீட்டினார் வக்கில்.
இன்னும் விவாகரத்து ஆகளையே? என இன்பா கூற..
உங்களுக்கு எதுவா இருந்தாலும் இந்த பேப்பர் சொல்லும் வாங்கி படிங்க என நிவாஸ் நீட்டினான்.
ருத்ரன் நிலாவின் பக்கம் பார்வையை பதித்தான். ஆத்திரம் பன்மடங்கு உயர்ந்தது.
நிலா எதுக்கு மா இப்படி பண்ற? என விவேகா அழுதார்.
மா என ருத்ரன் விக்கித்து அழைத்தான்.
இன்பா படித்து முடித்து விட்டு நிமிர்ந்தார்.
நிலா நீ வா நம்ம கிளம்புவோம் என நிவாஸ் வந்து நிற்க..
விவேகா கெஞ்சினார். பிளீஸ் நிலா போகாத! பிளீஸ் மா! என அழுதார்.
இன்பா ருத்ரனது கன்னத்தில் ஓங்கி அரை விட்டவர். எதுக்கு டா இப்படி பிரச்னை பண்ற? உன்னால தான் டா என கொதித்து பேசினார்.
ருத்ரன் நிலாவின் பக்கம் வந்து என்னால விவாகரத்து கொடுக்க முடியாது. பார்க்குறேன் டி! நீயா என்னை தேடி வருவ! உன்னை வர வைக்கிறேன் என்றான்.
நிவாஸ் அவர்களின் பக்கம் செல்ல போக.. நிலா அவனை பார்த்து, என் குடும்பத்தை கேவலமா நினைக்கிற ஒருத்தர் கூட என்னால எப்டி வாழ முடியும். இதோ பாருங்க உங்க பையன் ஒரு மனநலம் பாதிக்கபட்டவன். என காகிதத்தை எடுத்து வீசினாள் நிலா.
விவேகா இதை கேட்டு அதிர்ச்சியில் மயங்க..
ருத்ரன் அவளை இன்னும் கோபத்துடன் பார்த்தான்.
சாரி டூ சே திஸ் உங்க பையனுக்கு bipolar disorder என்னால அவர் கூட வாழ முடியாது என்றாள் நிலா.
இல்ல டாடி அவள் பொய் சொல்றா! அவளை என ருத்ரன் பிடிக்க வர.
இன்பா தன் மனைவியை அணைத்து கொண்டு நீ கிளம்பு மா! என்று விட்டார்.
அடுத்த இரண்டு நாள் வருடத்தை போல கடந்தது.
சத்ய தேவ் நிலாவிடம் பேச முற்பட.. அவள் அவனது அழைப்பை எடுக்கவே இல்லை.
டேய் தீரா நிலாவை கூட்டிட்டு வா! என விவேகா புலம்பிய படி அழுதார்.
இந்த பக்கம் நிலாவின் முன் ருத்ரன் நின்றிருந்தான்..
நிலா வந்திடு! எல்லாத்தையும் மறந்திடுறேன். இனி கோப பட மாட்டேன். நீ வா!! என பொறுமையாக கூறினான். அவனது கோபத்தை வெளிப்படுத்தாமல்…
நான் வரேன். என்றாள் நிலா.
ருத்ரன் முகம் கொஞ்சம் அமைதியை தத்தெடுத்து கொள்ள..
ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிசன். என்றாள் நிலா.
என்ன என அவனது புருவம் சுருங்கியது.
ஒரு ஆறு மாசம் எங்க வீட்ல I mean நீங்க இந்த வீட்டு மாப்பிள்ளையாக இல்லாமல் மிஸ்டர் சூர்ய பிரகாஸ், நிதின் பிரகாஸ், நிவாஸ் பிரகாஷ் மூணு பேருக்கும் வேலைக்காரனா இருக்கணும்.
No way!! என ருத்ரன் கத்த..
நான் இன்னும் பேசி முடிக்கல.. என்ற நிலா மேலும் இந்த ஆறு மாசத்துல நீங்க கோபப்படுற அளவை நான் பார்த்துட்டே இருப்பேன். இந்த ஆறு மாசம் நான் உங்களுக்கு வைக்கிற டெஸ்ட். அதுல பாஸ் ஆகிட்டா நானே விவாகரத்தை வாபஸ் வாங்கிட்டு உங்க கூட வாழ வந்துடுவேன். இதுக்கு சம்மதம் அப்டின்னா வேலைக்காரனா ஜாயின் பண்ண இந்த ஒப்பந்தத்தில் சைன் போடுங்க. உங்க வேலைக்கான ஸ்கெட்யூல் இந்த அட்டவணையில் இருக்கு என்று விட்டு சென்றாள் நிலா.
தொடரும்.
பிளாக் ஈகிள், சனாதனன், துச்சாதனன் கதாபாத்திரங்களுடன் இன்பா மற்றும் சத்ய தேவ் மொதுவார்கள்.
do like and share pradhanyakuzhalinovels