அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
342 views

Episode -71

போனை அவள் கிட்ட கொடு ரிதம் டென்ஷன் பண்ணாத!! என ருத்ரன் மீண்டும் கூற.. 

நிலா திகைப்புடன் ரித்தமை பார்த்து கொண்டிருந்தாள். 

உன் கிட்ட ஒரு விசயம் சொல்லணும் டா என்றவள் வயிற்றை பிடித்தபடி தனியாக சென்றாள். 

நீ என் கிட்ட பேசுறயா? உனக்கு தான் என்னை பிடிக்காதே! அதை விட நீ ஒன்னும் ஒழுங்கு இல்லையே! மாமாவை கஷ்ட படுத்திட்டு இருக்க! உன் கிட்ட பேச எனக்கு இஷ்டம் இல்ல. நீபோனை நிலா கிட்ட கொடு என ருத்ரன் மீண்டும் கூறினான். 

ஜஸ்ட் ஷட் அப் ருத்ரன்!! என அதிகார தொனியில் ரிதம் கத்த சட்டென வாயை மூடி கொண்டான் ருத்ரன். என்ன தான் என்றாலும் அவனை விட வயதில் மூத்தவள் ஆகிற்றே அதனால் இருக்கலாம். அப்படி இல்லன்னா கூட ரிதம் இப்போ சத்ய தேவ் பொண்டாட்டி. தனது மாமாவுக்கு கொடுக்கும் மரியாதையை அக்காளுக்கும் கொடுக்கரானோ என்னமோ? 

ருத்ரன் அமைதியாக இருக்க.. நீ நிலாவை இஷ்ட பட்டு தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட?  நிவாசோட வைஃப்! அவளை தானே நீ லவ் பண்ண! அவளை ரிவெஞ் பண்ண கல்யாணம் பண்ணிக்கள தானே? என கேட்டாள் ரிதம். 

என்னோட வாழ்க்கையில் உனக்கென்ன திடீர் அக்கறை? உனக்கு தான் என்னை பிடிக்காதே என ருத்ரன் கேட்க.. 

ரிதம் நெற்றியை தேய்த்தவள். உன்னை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது. எனக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய பாசத்தில் நீ பங்கு போட பிறந்திருக்க.. நீ சொன்னது சரி.  உன் வாழ்க்கையில் எனக்கு அக்கறை இல்ல தான். ஆனால் நீ என் மம்மியோட அண்ட் என் டாடியோட பையன். அதனாலே தான் இந்த அக்கறை! இதுக்கு மேலே பேசின? கண்ணம் பழுத்திடும் ராஸ்கல். கழுத்தை திருகி போடுவேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என்றாள். 

நான் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 

ரிதம் பதட்டத்துடன் அவள் தான் கன்சிவா இருந்தாலே? எப்டி ஒத்துகிட்ட? உனக்கு தான் அவளை சின்ன வயசில இருந்தே பிடிக்காதே!!கல்யாணம் பண்ணி கொடுமை எதுவும் பண்றயா? 

உனக்கும் கூட தான் என்னை புடிக்காது. இப்போ நீ ஏன் வந்து என் கிட்ட பேசுற? அதே போல தான் நானும். பிடிக்காது தான் ஆனால் அவள் நல்லா இருக்க கூடாதுன்னு நான் நினைக்க மாட்டேன். அவளோட எனக்கு பிடிக்கலன்னா கூட சிங்க் ஆகுது. அண்ட் என்னோட முழு சம்மதத்தோடு தான் கல்யாணம் பண்ணேன். அண்ட் கொடுமையா? நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்ல. நீ தான் சக்தி மாமாவை கொடுமை பண்ணிட்டு இருக்க என ருத்ரன் சொல்லி கொண்டிருக்க.. போனை நிலாவிடம் நீட்டினாள் ரிதம். 

அண்ணி!! என நிலா பார்க்க.. 

நீயே பேசு! இவன் கிட்ட எல்லாம் பத்து நிமிசத்துக்கு மேலே பேச முடியாது. என கூறி விட்டு நகர்ந்தாள் ரிதம். 

லுக் நான் தேன் நிலாவை இஸ்டபட்டு கல்யாணம் பண்ணேன்! என ருத்ரன் சொல்லி கொண்டிருக்க.. ஹலோ என நிலா பதில் சொல்ல.. 

சட்டென அவனது குரல் அமைதியானது. நிலா அவன் சொல்வதை கேட்டு விட்டாள். 

ருத்ரன் தலையை கோதியபடி நின்றவன். அடுத்து பேச வார்த்தைகள் இன்றி சரி நான் போனை வைக்கிறேன் நீ அங்கே ஈரோடு ரீச் ஆகிட்டு மெஸேஜ் போடு என்று விட்டு வைத்தான். 

நிலாவுக்கு அவன் வார்த்தைகள் தான் உள்ளுக்குள் ஒரு பிரலயத்தை தோற்றுவித்தது. அப்போ என்னை இஷ்டபட்டு கட்டி இருக்காரா தீரா? என தனக்கு தானே கேட்டு கொண்டிருந்தவள் உதடுகளும் கண்ணகுழியும் சேர்ந்து சிணுங்கியது. 

இன்னிக்கி நிச்சயமா மழை வரும்ன்னு நினைக்கிறேன். என சத்ய தேவ் அவளின் காதில் கூற.. 

எதுக்கு? என கேட்டாள் ரிதம். 

மேடம் இன்னிக்கி அநியாயத்துக்கு ஓவர் பர்பார்ம் பண்றாங்க. 

ரிதம் முகத்தில் வழியும் வியர்வையை துடைத்த படி எதிரில் இருப்பவனை பார்த்தாள்.

சத்ய தேவ் கண்களை சிமட்டிய படி அப்பா கிட்ட பேசுறீங்க! அம்மா கிட்ட உறவாடுரீங்க அதை விட அதிர்ச்சி என்னன்னா? பாச மலர் தம்பி கிட்ட பேசி இருக்கீங்க அதான் எங்கேயோ இடிக்கிது? இந்த ரிதம் இப்படி பட்டவ இல்லையே!! என்றான். 

மூடிட்டு வா!! என முன்னாள் நடந்தவள் காரில் ஏறி கொண்டாள். இன்பாவின் தோலில் சாயிந்து கொண்டாள். ரிதமின் கைகளை பிடித்து கொண்டாள். 

என்ன நிலா மா சைலண்ட் ஆகிட்டீங்க? என சத்ய தேவ் கேட்க.. 

சும்மா அண்ணா!! நான் நல்லா தான் இருக்கேன். என்றாள் நிலா. 

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ஈரோடு வந்து சேர்ந்தார்கள். 

உமா ஆரத்தி தட்டுடன் ரெடியாக இருந்தார். அத்தை என மகி சென்றார். 

என் பேத்தி வரணும்! பாப்புவை வர சொல்லு மகி என உமா புன்னகையுடன் அழைக்க.. 

இதழ் வந்து நின்றாள். வா கண்ணு உன்னோட அன்னிக்கு சுத்தி போடு செல்லம் என்றார். 

ரிதம் வயிற்றை பிடித்து கொண்டு நிற்க.. உமா சத்ய தேவை பார்த்து, சக்தி தங்கம் நில்லுங்க கூட என்றார். 

இதோ ஆத்தா என அவனும் சேர்ந்து நின்றான். ஊரே லைட் வெளிச்சத்தில் பாட்டு சத்தத்தில் ஜொலித்தது. 

மேளம் சத்தம் கேட்க.. மழை தூரல் போட்டது.

இந்த நேரத்தில் மழையா? என அவர்கள் கேட்க.. 

உமா சிரித்து கொண்டே தீர்த்த குடம் எடுக்க போகும் போது மழை பெய்யரது நல்ல சகுனம். இன்னிக்கி என் பேரன் வாரிசு சொந்த பூமிக்கு வந்திருக்கு அதுவும் ஒரு காரணம் என்றார். 

சூர்யா மற்றும் மகியின் முகத்தில் அத்தனை சந்தோஷம். 

நட்ராஜ் அனைவரையும் நலம் விசாரித்து உள்ளே அழைத்தார். இன்பா பொதுவான விசாரிப்புகளிடன் உள்ளே சென்றார். 

ரிதம் வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கும் போதே பழைய நினைவுகள் வந்து ஒட்டி கொண்டது. அவள் சைலஜாவாக இருந்த நேரம் சத்ய தேவ்வை திருமணம் செய்த காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தது. 

அவள் எவ்வளவு தான் இயல்பாக இருக்க முயன்றாலும் முடியவில்லை. அனைவருடனும் சாதாரணமாக பேசியவள் வேகமாக அவளது அறைக்கு சென்று விட்டிருந்தாள். 

சத்ய தேவ் என இன்பா அழைக்க.. 

சொல்லுங்க மாமா என முன்னால் வந்தான். 

என்னாச்சு அவளுக்கு? என இன்பா கேட்க.. 

சத்ய தேவ் சிரித்தபடி உங்க பொண்ணை பத்தி உங்களுக்கே தெரியலயே? எனக்கு எப்டி தெரியும்? என குறும்பாக கூறினான். 

Be serious என இன்பா குரலில் கடுமையுடன் கேட்டார். 

தெரியல மாமா!! ஆனால் பச்சையா தெரியுது. எதையோ மறைக்கிரா என்றான் சத்ய தேவ். 

இன்பா அவனை பார்த்து என் பொண்ணு எதோ கஷ்டத்தில் இருக்க போல எனக்கு ஏன் தோணுதுன்னு தெரியல. ரிதம் ரொம்ப வேதனையில் இருக்கா டா! அவளை நீ நல்லா தானே பார்த்துக்கிற? அவளுக்கு நான் எந்த குறையும் வைக்கலயே டா! அவள் உன் மேலே இஸ்டபட்டாள் நான் கட்டி வச்சேன். ஆனால் என்னாச்சு அவளுக்கு? என கேட்டார். 

சத்ய தேவ் தன் மாமனாரை பார்த்து கவலை படாதீங்க மாமா! நான் அப்படியே விட்டுட மாட்டேன். பார்த்துக்கலாம் கண்டு பிடிக்கிறேன். என்றான். 

***

நிலா ருத்ரனுக்கு அழைத்தாள். 

ருத்ரன் அழைப்பை பார்த்து ஆச்சரியத்தில் அப்படியே நின்றான். 

மீண்டும் அழைப்பு வர.. 

ஹலோ என என்றான் அழைப்பை ஏற்று. 

நிலா…? 

தொடரும்.. 

பிளாக் ஈகில் சொன்னது என்ன? ஆனால் ரிதம் இப்போ செஞ்சிட்டு இருக்கிறது என்ன? ரிதம் எதையும் மறைக்கிறா அப்டின்னு உயிர் கொடுத்தவர் சொல்ல..  புது உயிர கொடுக்க போறவன் கண்டு பிடிக்கறேன்னு சொல்லி இருக்கான். 

அடுத்து என்ன நடக்கும்? 

Stay tuned unexpected twist.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment