அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
393 views

Episode -80

ரிதம் அப்படியே அமர்ந்திருந்தாள். செத்து கிடப்பவனை பார்த்தவள் ஒரு பெரு மூச்சை விட்டபடி, வைபவுக்கு அழைத்தாள். 

மேடம்!! என அவர் பதில் கொடுக்க.. 

போய் மீன் வாங்கிட்டு வாங்க வைபவ்!! 

மேடம் என புரியாமல் அவன் கேட்க.. 

புரிலையா வைபவ் மீன், மச்சிலி, பிஷ், இப்போ புரியுதா? என அதட்டலுடன் கூறினாள். 

ஓகே மேடம் என போன் வைக்க போக.. வைபவ் என அழைத்தவள் சொன்ன விஷயத்தை கேட்டு எச்சில் விழுங்கினான் பயத்தில்.. 

ம்ம் சீக்கிரம் வாங்கிட்டு வாங்க வைபவ் என்னோட புருஷன் வரத்துக்குள் நான் திருப்ப உங்க வீட்டு பாத்ரூம் வழியாக.. அங்கே எங்க வீட்டு வெஸ்டன் டாய்லெட் உள்ளே போகணும் என அவள் கூற.. 

சரி என வேலையை ஆரம்பித்தான் வைபவ். ரிதம் நேராக பாத் டப்பை நிறைத்து. நீர் செல்லும் ஓட்டையை அடைத்து வைத்தவள். வைபவுக்காக காத்திருந்தாள். 

வைபவ் கூடவே கடைக்காரர் ஆட்கள் டெலிவரி செய்ய வந்திருந்தார்கள். 

நீங்க போகலாம் என அனுப்பி விட்டு வைபவை உள்ளே அழைத்தாள். 

மேடம் என அவன் தயங்கி அழைக்க, இவனை தூக்கிட்டு போய் டப்ல போடுங்க வைபவ். 

அவள் சொன்னது போலவே கஷ்ட பட்டு அறிய இழுத்து டப்பில் போட்டான். 

அடுத்த படியா என்ன பண்ணனும்னு தெரியும் தான? என அவள் அதட்ட.. 

மேடம் நான் தனியா!.. 

ரிதம் ஒரு பெரு மூச்சுடன் சரி வரேன் என்றவள். அவனுடன் சேர்ந்து பிரானா மீன்களை டப்பில் போட்டாள். அவ்வளவு தான் மீன்கள் துள்ளி குதித்து கொண்டு அரிய சாப்பிட ஆரம்பிடுத்தது. 

மீன்கள் தின்ன தின்ன, ரிதம் அதை சலனம் இல்லாமல் பார்த்தவள். அப்படியே என்னோட பெட் ஃபிஷ் கூட சாப்பிட்டால் நல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுங்க வைபவ் என அவனின் உதவியுடன் அங்கிருக்கும் ஃபிஷ் டேங்கில் அவனது பாகங்களை தூக்கி போட்டாள். அசுர வேகத்துடன் மீன்கள் சாப்பிட ஆரம்பித்தது. 

ரிதம் கையில் இருந்த ரத்தத்தை கழுவி கொண்டே இப்போ என்ன பண்றது? ரொம்ப நேரம் ஆகும் போலயே! சரி வைபவ் என்னை கூட்டிட்டு போய் வீட்டில் விடுங்க. 

மேடம் என அவன் அதிர்ச்சியுடன் பார்க்க, மீன்கள் சாப்பிட்டு முடிச்சதும் அதை மறுபடியும்  வாங்கின இடத்துக்கே ரிட்டர்ன் பண்ணிடலாம். என்றவள் என்னாச்சு வைபவ் இதை நீங்க தான் பண்ணனும். வெளியே விசயம் கசிஞ்சா போலிஷ விட அந்த தீவிரவாத கும்பல் உங்களை தூக்கிட்டு போய் செஞ்சிடும் என கூறினாள். 

வைபவ் அமைதியாக இருக்க, ரிதம் ஒரு பெரு மூச்சுடன் இந்த எலும்பு கூடு பார்ட் எல்லாத்தையும் கொண்டு போய் எலக்ட்ரிக்கல் சுடு காட்டுக்கு கொண்டு போய் சாம்பல் பண்ணிடுங்க.. 

அங்கே முடியாது மேடம்! 

அப்படியா! அப்போ இன்னொரு ஐடியா இருக்கு! 

என்ன? என வைபவ் கேட்க.. 

இதையெல்லாம் ஒயிட் பெயிண்ட் பண்ணி அப்படியே கூடாக கோர்த்து, மெடிக்கல் காலேஜ் அதாவது உங்க தம்பி படிக்கிற  காலேஜ்க்கு பயாலஜி லேப் பார்வைக்காக கொடுத்திடுங்க.. 

மேடம் விசாரிக்க மாட்டாங்களா! என வைபவ் அதிர்ச்சியுடன் கேட்க.. 

பிளாஸ்டோ பாரிஸ்ல செஞ்ச பொம்மை அப்டின்னு சொல்லிட்டு போலாம். 

வைபவ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பார்க்க, ரிதம் ஒரு பெரு மூச்சை விட்டவள். நம்ம பண்ணது நிச்சயமா பாவம் இல்ல. வெயிட் பண்ணி எல்லாத்தையும் முடிச்சிட்டு வாங்க. நானே செத்தாலும் உங்களை மாட்டி விட மாட்டேன் என உறுதியாக கூறினாள். 

அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை. 

சரி போலாம் என்றவள் எட்டி அரியை பார்க்க.. மீன்கள் முழு பசியில் வேட்டையாடி பெருத்து போயிருந்தது. 

மேடம் அந்த கார்? என அவன் கேட்க.. 

இதை உடனே நசுக்கி உரு தெரியாம அழிக்கிற இடத்துக்கு போங்க என சென்றாள். வண்டி வெகுதூரம் சென்றது. அந்த கார் தூள் தூளாக உடைந்து நசுக்கும் காட்சியை அனுப்பி வைத்தால் இரண்டு லட்சம் பணம் தருவேன் என கூறினாள் ரிதம். 

சரிங்க மேடம் என அவர் வேலையை பார்க்க, மணி இப்பொழுது 5.00. 

வைபவ் இங்கே கார் நொறுங்கின்கும் எனக்கு கால் பண்ணுங்க. அடுத்து நீங்க அந்த வீட்டுக்கு போகணும் சரியா பண்ணுங்க என நடந்தாள். மழை வேறு தூறல் போட.. வயிற்றை பிடித்தபடி வந்து சேர்ந்தவள். நேராக வைபவ் வீட்டுக்கு சென்று அங்கிருந்து டாய்லெட் வழியாக அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். 

அவள் வீட்டுக்குள் நுழையும் போது மணி 6.00. மழை கொஞ்சம் விட்டிருந்தது. நேராக குளியலறைக்குள் சென்றவள் குளித்து முடித்து வேறு உடைக்கு மாறினாள். அரி சந்திரா கொடுத்து விட்டு போன கடிதம் அங்கு மேஜையில் இருக்க, அதை கிழித்து குப்பை தொட்டியில் போட்டாள். தலையை காயவைத்து கொண்டே ஹாயாக அமர்ந்திருந்தாள். அவளது மனதில் நான் ஏன் என்னோட சத்ய தேவ்வ வெறுக்கணும்? அவனை உருகி லவ் பண்ணுவேன். இன்னும் டீப்பா பண்ணுவேன். ஆனால் அவன் பக்கத்தில போக எவனும் நினைச்சா! இனி கூர்க் பக்கம் ஒரு வீடு வாங்கி பிரானாவை நம்ம வளர்த்து தீனி போடணும் என நினைத்தாள். எல்லாமே ஒரு பக்கம் சரியாக வந்தாலும் அவனுடன் இருப்பதால் பிரச்னை அவனுக்கு என நினைத்தவள். திகட்ட திகட்ட அவனுடன் இருந்து விட்டு குழந்தையை மகியிடம் கொடுத்து விட்டு எட்ட நின்று அவனை பார்க்க போகிறாள் அவ்வளவே. அதற்கு காரணம் பிரச்னை பெரிது. 

ரிதம் திட்டமிட்டப்படி பிரானா மீன்கள் அரியை மொத்தமாக தின்று ஏப்பம் விட்டிருந்தது. ரத்த வாடை கொஞ்சம் கூட இல்லை. அனைத்தையும் வைபவ் சுத்தம் செய்திருந்தான். அதே போல அரியின் எலும்புகளை ரிதம் சொன்னது போலவே பயாலஜி லேபில் பிளாஸ்டோ பாரிஸ் கூடு போல செய்ய கடையில் கொடுத்திருந்தான். செல்போன் சிம் ஒடித்து போனுடன் வெஸ்டன் டாய்லெட்டில் போட்டு விட்டாள். 

அரி என்பவன் அழிந்து இருந்தான். ரிதம் நிகழ்காலத்தில் சொடக்கு எடுத்து கொண்டே அமர்ந்திருக்க, சத்ய தேவ் வந்து சேர்ந்தான். 

அறையின் கதவு தட்டபட..  பாவமான முகத்துடன் எழுந்து கதவை திறந்தாள். ஹே வா வீட்டுக்கு போலாம். என அழைத்தான். 

அங்கே இருந்தால் உன்கூட இப்படி ஒட்டிட்டு இருக்க முடியாது. மாமி இருப்பாங்க மாமா அண்ட் இந்த மிதுன் பையன் நம்ம ரெண்டு பேரையும் வயித்தெறிச்சல் புடிச்சு பார்ப்பான். உன் தங்கச்சி முகம் இன்னும் பார்க்க சகிக்கல.. என்றாள் ரிதம். 

ஹே அப்போ உங்க வீடு!! 

அங்கே என் டாடி மம்மி முன்னாடி உன் கூட எப்டி நான் ஒட்டிட்டி இருக்க முடியும். எனக்கு கொஞ்சம் தயக்கம் என்றாள் ரிதம். 

இல்ல டி உனக்கு பெயின் வந்திடுச்சுனா என்ன பண்றது? என வயிற்றை வருடி கொண்டு கேட்டான். 

குழந்தை பிறக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு என ரிதம் கூற.. 

சரி என அவன் விலக.. 

ஹே பெட்டுக்கு போலாம் என ரிதம் அழைக்க. 

குளிச்சிட்டு வரேன் என புருவம் தூக்கியவன். நகர போக.. 

அழைப்பு வந்தது மீண்டும். 

சத்ய தேவ் அவளை பார்த்து விட்டு முக்கியமாக வேலை டி! போய் ஆகனும் என முத்தமிட

போடா! என முகம் சிணுங்கினாள். 

வந்து வச்சுக்கிறேன் என கண்ணை சிமட்டிஹான். 

ரிதம் முகத்தை திருப்பினாள். 

ஹே ராவடி முத்தம் கொடுத்து அனுப்பி வை என அழைத்தான். 

அவள் விடாப்பிடியாக நிற்க, அவளின் உதட்டில் முத்தமிட்டு வேகமாக வெளியே வந்தான். 

அவன் சென்ற நேரம் அடி வயிற்றில் சுரீர் வலி. 

சக்தி என அழைத்தாள். 

அவனுக்கு எட்ட வில்லை. 

போனை எடுக்க முயற்சி செய்தாள் முடியவில்லை. வலி பின்னி எடுக்க, அப்படியே நிலை தடுமாறி அமர்ந்தவள். நகர்ந்து சென்று கத்திரிக்கோல் மற்றும் கிளிப் தேடினாள். அதே இடத்தில் பிரசவம் அவளே பார்த்து கொண்டாள். கஷ்டம் கொடுக்கவில்லை மகன். அப்பனை போல பொறுமையாக ஆர்பாட்டமில்லாமல் பிறந்து விட்டான். 

வீர் என கத்தி கொண்டு வந்தான் துகிலன்.  நினைச்சது போலவே வந்துட்ட டா!! என உதட்டை மடித்து கூறியவள் கண்களில் நீர் வழிந்தது. 

வேகமாக போனை எடுத்தவள். மாமி உங்களுக்கு பேரன் பிறந்துட்டான். வீட்லயே பிறந்துட்டான் என சொல்லி விட்டு குழந்தைக்கு மார்பில் பால் புகட்ட ஆரம்பித்தவள் மயங்கி சரிந்தாள். பிரசவ மயக்கத்தில்.. 

ஹே ரிதம்!! ஹே ராவடி! என அவளது கன்னத்தை தட்டினான் சத்ய தேவ். 

ரிதம் அவனிடம்…? 

சத்ய தேவ்..? 

உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் அவள் என்ன சொல்லி இருப்பாள்?

தொடரும்.

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment