🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
67. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 67 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 19 Jul 2025
  • 350 reads
  • ☆ No ratings yet
  • 6 min read

Episode -66

ஹலோ” என நிலா பேச.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ஹலோ!!” என்றான் ருத்ரன். 

எப்படி இருக்கீங்க? என நிலா கேட்க.. 

உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல! அப்போ உயிரோட தான் இருக்கேன். என்றான் ருத்ரன். 

நிலா போனை எடுத்து கொண்டு மீண்டும் படுக்கையறை சென்றவள். எதுக்கு இப்படி பேசுறீங்க? நான் என்ன பண்ணேன்? 

நீ என்ன பண்ண? அதான் சிறப்பா ஆக்ட் பண்ணியே அப்புறம் என்ன? 

நானா? எதை நடிப்புன்னு சொல்றீங்க? என நிலா கேட்க.. 

“அப்படி அக்கறை மயிரு இருந்திருந்தால் போன் வந்திருக்கும். உன்னோட போன்ல இருந்து எனக்கு எந்த நம்பரும் வரலையே!! நீ ரொம்ப ஸ்மார்ட்”

“அப்படி இல்ல!! நீங்க அங்கே வேலையா பிஸியா இருப்பீங்கன்னு தான் நான் கூப்பிடல” 

“இந்த நோனா வட்டத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”

“ஹாங்” என நிலா கேட்க.. 

உனக்கு என்னால விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. நான் போனை வைக்கிறேன். என ருத்ரன் கட் செய்ய போக.. 

“ஒரு நிமிசம் இருங்க!!”

“என்ன சொல்லு!”

அது எதுவும் பேசலன்னா கூட பரவாயில்லை அட்லீஸ்ட் கொஞ்ச நேரம் லைன்ல இருங்களேன் சும்மா பிளீஸ்!! என கேட்டாள். 

சும்மா இருக்க வேணாம்!! நீ உன்னோட போன்ல கால் பண்ணு! என கட் செய்தான். 

நிலா போனை தன் மாமியாரிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள். அவனுக்கு அழைக்க.. 

வீடியோ கால் வரியா? எனக்கு பார்க்கணும். 

ம்ம் இதோ என வீடியோ கால் செய்தாள். 

ஹே சம்திங் நீ ப்ளஷ் அதிகமா இருக்க போல தோணுது. 

இல் இல்லையே அப்படியே தான் இருக்கேன். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அப்படியா!! சரி அதை காட்டு!”

“எதை?”

எதை கேட்பேன் நான்? உன் கிட்ட? ஹாங் காட்டு டி என ஸ்மைலி பந்தை கையில் எடுத்து கொண்டான் ருத்ரன். 

“பிளீஸ் வேண்டாமே!!”

நான் பக்கத்தில் இருந்தால் தான் உனக்கு புடிக்காது. தூரத்தில் தானே இருக்கேன். அப்புறம் என்ன? காட்டு இல்லன்னா நான் போனை வைக்கிறேன் என ருத்ரன் சொல்ல.. 

பிளீஸ் வைக்க வேணாம். அங்கே உங்களோட பக்கத்தில யாரும் இல்லையே! 

பைத்தியக்காரி! என் பக்கத்தில் யாராவது இருந்திருந்தால் உனக்கு கால் பன்னிருப்பேனா? 

சாரி!! என்றவள் அப்படியே நிற்க.. 

என்ன பண்ற? சீக்கிரம் டி!! என ருத்ரன் குளைந்தான். 

ஒரு பெரு மூச்சை விட்டவள். முடியை ஒரு பக்கம் போட்டு கொண்டு அவன் சொன்ன அனைத்தையும் செய்தாள். 

F* ரொம்ப மிஸ் பண்றேன். ரொம்ப.. என அழுத்தி கூறினான் வார்த்தையை மட்டும் அல்ல. கையில் இருக்கும் ஸ்மைலி பந்து நசுங்கி இரண்டாக பிஞ்சு போகும் வரை.. 

அந்த பந்துக்கே அப்படி ஒரு நிலை என்றால்? அப்போ நிலா. 

“நிலா வரட்டுமா டி!!” என ருத்ரன் உணர்வுகளுடன் அழைக்க.. 

இதுக்கு தான் நான் போன் பண்ணல! என்றாள் நிலா. 

ஓ உன்னோட மனசுல இப்படி வேற நினைச்சிட்டு இருக்கியா? உன் மேலே நான் பைத்தியமா இருக்கேன்னு? என வில்லன் போல சிரித்தவன். அப்படி எல்லாம் கற்பனை பண்ணிட்டு இருக்காத!! என்றான் சிரித்தபடி.. 

நிலா வெடுக்கென கண்களை விழித்து பார்க்க.. 

நல்லா சாப்பிடுறயா? என ருத்ரன் கேட்க.. 

என் மேலே அக்கறை இருக்க மாதிரி நீங்க நடிக்க வேணாம். என்றாள் நிலா. 

வந்தேன்னு வை எல்லாத்தையும் பிச்சு தின்னுடுவென் என்றான் இரு பொருளுடன். 

என்றைக்கும் அவன் மாற மாட்டான் என நிலாவுக்கு தெரிந்து விட்டது. அப்புறம் ஏன் அவனிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டும்? இது தேவையில்லாத வேலை என தோன்ற.. அமைதியாக இருந்தாள். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கிஸ் பண்ணு! 

எப்டி? 

நடிக்காத டி!! லவ்வர் கூட எல்லாமே பண்ணிட்டு இப்போ எதுவுமே தெரியாத மாதிரி சின்ன பாப்பா மாதிரி நடிக்காத!! 

முத்தமிடும் சத்தத்தை கொடுத்தாள். 

“நிலா நீ என்னை பார்க்கணுமா? சொல்லு டி!”

“வேணாம்”

ஏன் வேணாம் என மூச்சு வாங்கி கொண்டே கேட்டான். 

அது இப்போ வேணாம். என நிலா கூற.. சரி நான் நைட் கால் பண்ணவா? எனக்கு உன்னை வயிற ஃபோட்டோ எடுத்து செண்ட் பண்ணு. அண்ட் நைட்டி, அப்புறம் அது இது என எக்க சக்கமாக கூறினான். 

ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தாள். 

சரி நான் வைக்கட்டுமா என ருத்ரன் கட் செய்ய போக.. 

ஒரு நிமிசம்!! 

ம்ம் சொல்லு!!

ஸ்மோக் மட்டும் பண்ணாதீங்க பிளீஸ். 

பண்ண மாட்டேன். ஆனால் அடுத்த முறை நீ கேட்டால் உன் முன்னாடியே ஸ்மோக் பண்ணுவேன். 

இல்ல சாரி சாரி என நிலா பதட்டத்துடன் கூறினாள். 

சொன்னதை செய்வேன். உன் கிட்ட ஸ்மோக் பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கேன் சோ பண்ண மாட்டேன். ஓகே வா! 

ஓகே என அவள் சொல்லி முடிப்பதற்குள் போன் கட் ஆனது. ருத்ரனுக்கு முக்கியமான அழைப்பு. Lab ல் இருந்து அழைத்திருந்தார்கள். 

இதோ உடனே வரேன் என புறப்பட்டான். சொல்லுங்க டாக்டர் எதுவும் கண்டு பிடிக்க முடிஞ்சதா?  முடியுமா? என ருத்ரன் கேட்க.. 

டச் DNA ல கண்டு பிடிக்கலாம். இதை டெல்லிக்கு அனுப்பி வைக்கிறேன். நம்ம மிஷின் கொஞ்சம் ப்ராப்ளம். என்றார் ஃபாரன்சிக் ஆபிசர். 

அப்படியா!! என்றவன் அதனுடன் இது நான் யூஸ் பண்ண ட்ரஸ் அண்ட் அந்த பொண்ணோட முடி! இதை ரெண்டையும் மேட்ச் பண்ணி பாருங்க. நம்ம டேட்டா பேஸ்ல மேட்ச் ஆகுதான்னு பார்க்கலாம் என்றான் ருத்ரன். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

ஓகே ருத்ரன் அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் என அனைத்தையும் வாங்கி கொண்டார். 

***

அப்படியே நாட்கள் வேகமாக ஓடியது. இரண்டு மாதங்கள் ஆனது. 

என்னாச்சு ஒரு மாதிரி இருக்க? என கண்மணியை விசாரித்தார் தேஜு. 

நான் எனக்கென்ன மாமி!! நான் நல்லா தான் இருக்கேன் என்றாள் கண்மணி. 

அப்படியா சரி என அவரவர் வேலையை பார்த்து கொண்டிருக்க திடீரென மயங்கி விழுந்தாள் கண்மணி. 

அத்தை! அத்தை கண்மணி மயங்கி விழுந்துட்டா என ஹரிணி சொல்ல.. 

கண்மணி!! கண்மணி என அழைத்து கொண்டே அவளின் அருகில் வந்தார் தேஜு.

என்னாச்சு இந்த பொண்ணுக்கு? நான் கேட்டதுக்கு எதுவும் இல்லன்னு சொல்லுச்சு. இப்போ மயங்கி விழது! என தேஜூ தண்ணீரை தெளித்து அமர வைத்தார். 

அத்தை நான் டாக்டர வர சொல்லிட்டேன். கண்மணி முன்னை விட ஒல்லி ஆகிட்டா. சரியா சாப்பிடுறது இல்ல. நைட் நிவாஸ் வர வரைக்கும் முளிச்சிட்டு இருக்கா. நிவா வந்ததும் தான் சாப்பிடுறா! என ஹரிணி அடுக்கி கொண்டே சென்றாள். 

என்ன கண்மணி இது?  கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி இருக்கலாமா?  உடம்பு சரி இல்லாம போய்ட்டா என்ன ஆகறது? நிவாஸுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? ஏன் கண்மணி இப்படி பண்ற என்று தேஜூ கோபமாக அவளை பார்த்தார். 

இல்ல மாமி நான் நல்லா தான் சாப்பிடுறேன் என்னால முடிஞ்ச அளவுக்கு சாப்பிடுற நல்லா தூங்கி தான் ரெஸ்ட் எடுக்கிறேன் அவரு ஆஃபீஸ் கிளம்பினதும் நான் தூங்கிட்டு தான் இருக்கேன் எந்த வேலையும் செய்யறது இல்ல என்னன்னு தெரியல கிறுப்பா இருந்துச்சு என்றாள் கண்மணி. 

ஒரே சமயத்தில் ஹரிணி மற்றும் தேஜு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  ஆனால் எப்படி இது சாத்தியம்? கல்யாணம் ஆகி ரெண்டு மாசம்தான் ஆகுது.  அதுக்குள்ள எப்படி மாசமாக முடியும்?  அப்படி எல்லாம் இருக்காது அதுக்கு வாய்ப்பில்லை என்று இருவரும் நினைத்துக் கொண்டிருக்க..  டாக்டர் வந்து சேர்ந்தார்.‌ 

எதுக்கு மாமி தேவையில்லாம டாக்டர் செக்கப் எல்லாம்!!… எனக்கு பெருசா ஒன்னுமே இல்ல.  என்று மீண்டும் கண்மணி கூற.. 

அப்படி எல்லாம் இல்ல செக் பண்ணனும் அது மட்டும் இல்லாம ஹோல் பாடி செக் அப் பண்ணிக்கலாம் என்றார் தேஜு டாக்டர் வந்து அவளது முகத்தை பார்த்து விட்டு கைகளில் நாடிப் பிடித்து பார்த்தவர். முகம் அப்படியே தேஜூவை பார்த்தது. 

என்னாச்சு என்று தேஜு கேட்க 

உங்க டாட்டர் இல்லா மாசமா இருக்காங்க என்றார். 

கண்மணி..? 

நிவாஸ்..? 

தேஜு..? 

நிவாஸ் இதை கேட்டால் எப்படி react செய்வான்? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!