🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
8. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 8 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 13 Jul 2025
  • 1,107 reads
  • ☆ No ratings yet
  • 8 min read

Episode -8

டாடி கிட்ட எப்டி சொல்லுவேன்? அவ்ளோ தான் நான் மினிஸ்டர் ம*ரா இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்ல டா! நிலா! என கத்தி கதறினான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“நான் இருக்கேன் அப்படியே விட்டுடுவேனா? டேய் நீ எழு! அவளுக்கு நம்ம தான் தைரியம் சொல்லணும். அதை விட்டுட்டு இப்படி அழுதுட்டு இருக்க? வா போலாம். எழுந்துக்க” என அவனை அணைத்த படி கூட்டி சென்றான். 

24 மணி நேரம் கழித்து கண் விழித்தான் ருத்ரன். அருகில் இன்ப ராகவன் நின்றிருந்தார். 

“நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? உங்களை யாரு வர சொன்னது? அம்மாவை அக்காவை தனியா விட்டுட்டு எதுக்கு வந்தீங்க?” என ருத்ரன் எழுந்து அமர்ந்தான். 

உங்க அம்மா, ரிதம் ரெண்டு பேரும் நல்லா தான் இருக்காங்க. அஞ்சு மாசமா உன்னை பத்தி எந்த செய்தியும் வரல. நீ செத்துட்டியா? இல்ல உயிரோட இருக்கியான்னு பார்க்க வந்தேன். இப்போ என்ன டா? என இன்பாவின் வார்த்தைகள் அவனை திட்டுவது போல இருந்தாலும் அவரின் பார்வை மொத்தமும் பதட்டத்துடன் தழுவியது. அடுத்த தலை முறையே அவனோட… கையில இருக்குன்னு சொல்ல வந்தேங்க. 

ருத்ரன் நெற்றியை நீவிய படி பார்த்தான். இன்பா கோபமாக “என்ன டா என்னை வயசான மாதிரி ட்ரீட் பண்ற கேள்வி கேட்கிற? திமிரா? நான் ஒன்னும் உன்னை பார்க்க வரல!.. அதாவது உனக்காக வரல. என் பொண்டாட்டிக்காக வந்தேன்.”

ருத்ரன் தன் தந்தையை சோர்வுடன் பார்த்து, “எனக்கே வயசாக போகுது. உங்களுக்கு என்ன பத்து வயசா?” 

“சரி நான் நல்லாருக்கென் கிளம்புங்க” என்றான் ருத்ரன். போதும் உனக்கு மூணு மாசம் லீவு கொடுத்திருக்காங்க. எதோ உனக்கு நிறைய டெஸ்ட் எடுத்திட்டு போயிருக்காங்க. அதில்லாம அடி பட்டிருக்குன்னு சொன்னாங்க. அடுத்த தடவை மெடிக்கல் ஃபிட்னஸ் முடிச்சதுக்கு அப்புறம் தான் நீ ஜாயின் பண்ண முடியும் ரெஸ்ட் எடு நாளைக்கு கிளம்பலாம். என்றார் இன்பா. 

“நான் வரேன் நீங்க முன்னாடி போங்க. ரிட்டையட்டுக்கு இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு தெரியுமா?” 

ஹே எனக்கு ரெண்டு வருசம் இருக்கு? என்றார் இன்பா. 

அதன் பின் இருவருக்கும் நடுவில் அமைதியே நிலவியது. இந்த நாய் கிட்ட பேச என்ன இருக்கு? என இன்பா பார்த்தார். 

“அட்டண்டர் ரூம்ல வெயிட் பண்ணுங்க போங்க.” என கண்களை மூடிக் கொண்டே கூறினான். 

அதுவும் சரி தான் இந்த நாயை பார்க்க என்னால முடியாது. என நகர்ந்தவர் எதோ நினைவு வந்தவராக “டேய் உன்னோட அம்மா பாட்டி ஆகிட்டா!”

“என்ன?”

“ஆமா ரிதம் அம்மா ஆகிட்டா!”

“அப்போ மாமா அப்பா ஆகிட்டார். நான் மாமா ஆகிட்டேன். அவனது போனை எடுத்தவன் வேகமாக சக்திக்கு எடுத்தவன். என்ன பாட்டியா? என் அம்மாவுக்கு வயசு ஒன்னும் ஆகல. அண்ட் நீங்க தாத்தா ஆகிட்டீங்க. அண்ட் என் அம்மா அம்மச்சி. பாட்டின்னு சொல்லி வயசான மாதிரி சொல்றீங்க” என்றவன் சக்திக்கு டயல் செய்தான். 

“எனக்கு வயசு ஆகும் அவங்க அம்மாவுக்கு இப்போ தான் வயசு 16 அவன் இவளுக்கு கொடி புடிப்பான். அவள் இந்த நாய்க்கு கொடி பிடிக்கும்” என்றவர் பிதற்றிய படி நகர்ந்தவர் கைகள் ரிதம் என்ன செய்கிறாள் என பெயரை வருடியது. ஆனால் பேச வில்லை..

இங்கே ருத்ரன் சந்தோசத்தில் திக்கு முக்காடிய படி சக்திக்கு அழைத்தான். திரும்ப திரும்ப… 

சத்ய தேவ்வின் போன் திரும்ப திரும்ப சிணுங்க .. அப்பொழுது தான் டாக்டர் இப்போ உள்ளே போயி பாருங்க சார் என்று கூறி விட்டு சென்றார். 

நிலா மெல்ல விட்டத்தை பார்த்தபடி இருந்தாள். 

பிக் அப் தி போன் மாமா! பிக் அப் பிக் அப் என ருத்ரன் சந்தோசத்தில் இருந்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நிலா மா! என மெல்ல பார்த்தாள். Zirrr zirr என திரும்ப திரும்ப போன் அலறி கொண்டிருக்க, அந்த போனை எடுத்து பேசு இல்ல கட் பண்ணு என நிதின் சொல்லி விட்டு உள்ளே சென்றான். 

ஹலோ ருத்ரன் என்ன இத்தனை தடவை கால் பண்ணிருக்க? எதுவும் எமர்ஜென்சியா? என கேட்டான். 

“என்ன மாமா அக்கா கூட இருக்கியா? இல்ல ஆபிஸ்ல இருக்கீங்களா?” என ருத்ரன் கேட்டான். 

“நான் நிதின் கூட இருக்கேன். என்ன விசயம்?”

“ரொம்ப அவசரத்தில் இருக்கீங்க என்ன மாமா? நான் சந்தோசமா இருக்கேன் நீங்க?” 

“சக்தி என்ன பண்ற பாப்பா உன்னை கேட்கிறா?”

இரு சக்தி நான் நிலா கூட இருக்கேன் அப்புறம் பேசுறென் என சொல்லி விட்டு போனை கட் செய்தான்.

ருத்ரன் முகத்தில் உடனே கோபத்தில் சிவந்தது. அவள் யாரு? எப்போ பாரு? Irritated பண்றா! அதுவும் நான் எப்போ மாமாகூட இருக்கேனோ! எப்போ பேசுறனோ அப்போ எல்லாம் இவள் அட்டை பூச்சி மாதிரி ஓட்டிட்டு இருக்கா! அவளும் அவள் மூஞ்சியும் irritating.  என உள்ளுக்குள் எரிந்தது. 

ஏன் நிலாவை ருத்ரனுக்கு பிடிக்க வில்லை? அதற்கு காரணம் அவளோட குடும்ப பின்னணி தான். அவளோட அண்ணன் மினிஸ்டர், இன்னொரு அண்ணன் பிஸ்னஸ் கழட்டி, சின்ன வயசில இருந்து அம்மணிக்கு பின்னாடி நாலு பாடி கார்ட்.. அவளை எல்லா இடத்திலையும் வானத்தில் இருந்து குதிச்சவளை போல அவளை நடத்துவாங்க. அவள் பேசும் பிராமண பாஷை இன்னும் கடுப்பை கிளப்பும், அதை விட முக்கியமாக தன் அக்கா ரிதமின் கணவன் சத்ய தேவுக்கு அவள் ஆருயிர் தங்கை. தன் மாமன் தனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால் ஒவ்வொரு முறை ருத்ரன் இருந்தால் விதியா சதியா என தெரியாமல் நிலா அந்த இடத்தில் இருக்கிறாள். 

ருத்ரனின் நினைவுகள் மொத்தமும் தன் அக்கா கருவாகி இருப்பதில் தங்கள் வீட்டுக்கு புதிய வரவு வர போவதில் இன்னும் சந்தோசம். இந்த குழந்தை அவர்களின் குடும்பத்துக்கு மிகவும் முக்கியம். என நினைத்தவன் உடனே தன் அக்காவுக்கு பேச அழைத்தான். 

சத்ய தேவ் அறைக்குள் நுழைந்ததும் எப்போவும் போல இயல்பாக அந்த கன்னகுழி ததும்ப புன்னகையுடன் பார்த்தாள் நிலா. 

“சக்தி அண்ணா!” என உற்சாகத்துடன் அழைத்தாள். 

சத்ய தேவ் நிதினை ஒரு பார்வை பார்த்து விட்டு, அப்படியே தன் தங்கையை பார்த்தான். “நிலா மா” என அவளின் கையை பிடித்துக் கொண்டான். 

“வீட்டுக்கு போலாமா? இங்கே சஃப்பகேட்டடா இருக்கு. நிதின் அண்ணா எதுக்கு இங்கே வந்திருக்காங்க? நான் எப்படி உங்களுக்கு கிடைச்சேன் என வெகு இயல்பாக பேசினாள்” நிலா.

நிதினால் தான் தங்கையின் நிலையை பார்க்கவே முடிய வில்லை. உள்ளம் இன்னும் ரணமாக இருக்க, நிதின் பாப்பா வீட்டுக்கு போகனும்னு சொல்றா நீ என்னன்னு பாரு. என வெளியே சைகை செய்தான். 

இத்!.. இதோ போறேன் என நிதின் வெளியே சென்று விட, நிலா மா! அண்ணா கிட்ட எதுவும் சொல்லனுமா? 

இல்ல ணா! என்ன இருக்கு சொல்ல? என நிலா சாதாரணமாக பேச, நிலா குட்டி என சத்ய தேவ் அவள் முகத்தை கையில் ஏந்தினான் கண்களில் நீருடன். அண்ணா நீ.. நீ போயி எதுக்கு அழற? என கண்களில் நீர் கொட்டியது அவளுக்கு. 

பிளீஸ் அண்ணன் கிட்ட எல்லாத்தையும் சொல்லு தங்கம். என்னாச்சுன்னு சொல்லு வாய் விட்டு அழுதிடு. உன்னோட டாடிக்கு தெரிஞ்சா தாங்க மாட்டாரு. மொத்தமா மனுசன் இடிஞ்சி போயிடுவார். அண்ணா கிட்ட அழுதிடு என சத்ய தேவ் அவளின் கண்ணை துடைத்த படி கேட்க, அவ்வளவு தான் வெடித்து சிதறினாள். 

அண்ணா என்னை கூட்டிட்டு போயிடு. என்னாச்சு சாகனும் போல இருக்கு. எனக்கு பயமா இருக்கு. எனக்கு எனக்கு அண்ணா நான் என்னை ஒருத்தன்.. என தேம்பி அழுதாள். 

வெளியில் இதையெல்லாம் கேட்ட படி நின்று கொண்டிருந்த நிதினுக்கு இரத்தம் கொதித்தது. சும்மா விட மாட்டேன் அவனை கொல்லாம விட மாட்டேன். என் தங்கச்சி மேலே கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கு? அப்படி வச்சவன துண்டு துண்டாக வெட்டி போடாமல் விட மாட்டேன் என தனக்கு தானே சொல்லிக் கொண்டான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நிலா தேம்பி தேம்பி அழுதவள். சிறிது நேரத்திலேயே மயங்கி சரிந்தாள். டாக்டர் டாக்டர் என சத்ய தேவ் கத்தினான். 

என்னாச்சு என அரக்க பறக்க ஓடி வந்தான் நிதின். டாக்டர் உள்ளே ஓடினார். 

சத்ய தேவ் பரபரப்புடன் இனி அவளை தனியா விட கூடாது. தூங்கும் போது கூட நம்ம பக்கத்தில் இருக்கணும் டா. இந்த விடயம் யாருக்கும் தெரிய வேணாம். 

அப்பாவுக்கு?.. 

சொல்றத கேளு நிதின் இது யாருக்கும் தெரிய கூடாது. முதல்ல மினிஸ்ட்ரில பேசு நிலா பத்தின எந்த விடயமும் லீக் ஆக கூடாது. மீடியாவுக்கு போச்சுன்னா என்ன நடக்குன்னு யோசிச்சு பார்த்தியா? இது நல்லா திட்டமிட்டு பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க. உடனே implement process பண்ணு. இதுக்கு யார் காரணம் என்னன்னு பின்னாடி பார்ப்போம். இப்போதைக்கு நமக்கு நம்ம பாப்பா தான் முக்கியம் என சொல்லி விட்டு சத்ய தேவ் மருத்துவருக்காக காத்திருந்தான். 

“டாக்டர் அவளுக்கு இப்போ எப்டி இருக்கு?”

சார் கொஞ்சம் வாங்க. என தனியாக அழைத்தார் டாக்டர். நிதின் பார்த்துக்கோ நான் போயிட்டு வரென் என சத்ய தேவ் சென்றான். 

“இது அவங்க ரிப்போர்ட். அவங்களுக்கு ஸ்ட்ராங் டிரக் கொடுத்திருக்காங்க. அண்ட் நாங்க அவங்களை செக் பண்ணதுள ஹராஸ்மென்ட் எதுவும் நடக்கல.”

“அப்புறம் எப்டி? என்ன சொல்றீங்க?”

அவங்க கூட ஒருத்தன் தான் இருந்திருக்கான். அண்ட் உங்க சிஸ்டர்க்கும் ஸ்ட்ராங் மெடிசன் கொடுத்திருக்காங்க. லைக் இந்த அடல்ட் மூவி பண்ற பார்ன் ஆக்டர்ஸ் டேப்லெட்ஸ் எடுத்திட்டு தான் மூவி நடிப்பாங்க. அந்த மாதிரி சம் கைன்ட் டேப்லட்டை உங்க சிஸ்டர்க்கு கொடுத்திருக்காங்க. பிளட் சேம்பில்ஸ்ல எங்களுக்கு வந்திருக்கு. தனித்த படி ஒரு சின்ன காயம் கூட உங்க சிஸ்டர் மேலே இல்ல, அடிக்கல, கஷ்ட படுத்தல, ஒன் அன்ட் ஒன்லி இன்டிமேட் தான் நடந்திருக்கு. கண்டிப்பா பிளான் பண்ணி தூக்கி இருக்காங்க. 

அவளுக்கு நியாபகம் இருக்குமா? அவங்க யார்ன்னு கண்டு பிடிக்க முடியுமா? என கைகளை முறுக்கி கண்கள் சிவந்த படு கேட்டான் சத்ய தேவ். 

அதுக்கு நீங்க சைக்காட்ரிஸ்ட் கிட்ட தான் போகனும். எங்க பார்க்ரீங்கன்னு சொல்லுங்க நான் சஜஸ்ட் பண்றேன் என கேட்டார். 

“இல்ல நாங்க பார்த்துக்றோம்” இப்போ பாப்பாவை எப்போ கூட்டிட்டு போறது? என ரிப்போர்ட்டை வாங்கினான். 

உங்க பிரியம்? மெண்டலீ அவங்க டிஸ்டர்ப்டா இருக்காங்க. இதுக்கு யார் காரணம்னு நிறைய யோசிக்கிறாங்க சோ நீங்க பக்கத்தில் இருக்கணும் முடிஞ்ச அளவுக்கு நியாபக படுத்த வேணாம். என்று கூறினார். 

நிலாவை நேராக பெங்களூர் அழைத்து சென்றார்கள் சத்ய தேவ் மற்றும் நிதின் இருவரும். அதே சமயம் ருத்ரன் ஊருக்கு வந்து சேர்ந்தான். 

அடுத்த படியாக கண்மணி சந்திப்பு..

வருவான்.

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!