🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
32. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 32 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 18 Jul 2025
  • 783 reads
  • ☆ No ratings yet
  • 5 min read

Episode -32

சொல்லு போன்ல என்ன சொன்ன? எனக்கு சரியா காது கேட்கல.. இப்போ சொல்லு என ருத்ரனின் பார்வை அவளை துளைத்தது. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“இ.. இதை கேட்க தான் கிளம்பி வந்தீங்களா?” என வியர்க்க விறுவிறுக்க நிலா அவனை பார்த்தாள். 

பின்ன உன்னோட அழகுல மயங்கி வந்தேன்னு நினைச்சியா? என அறையை சுற்றி பார்த்தவன். ம்ம் இன்டீரியர் எல்லாம் பயங்கரமா இருக்கு போல. உன் அண்ணன் வாங்குற லஞ்சமா? இல்ல உன்னோட சின்ன அண்ணன் பிஸ்னஸ்ல ஏமாத்தி சம்பாதிச்ச பணமா? என ருத்ரன் கேட்டான் வேண்டும் என்றே.. 

இது எங்களோட பரம்பரை வீடு! நீங்க சொல்ற மாதிரி நாங்க இல்ல.. அப்படியே இருந்தாலும் உங்களோட தகுதிய தாழ்த்திகிட்டு என்னை கட்டிக்க என்ன அவசியம் வந்தது. பிளீஸ் என்னை வேணாம்னு சொல்லிடுங்க. எதுக்கும் நான் உங்களுக்கு பொருத்தம் இல்ல. என கையெடுத்து கும்பிட்டாள். 

“நிலா உன்கிட்ட நான் விழுந்துட்டென் டி!” என ருத்ரன் படுக்கையில் இருந்து எழுந்தான். 

அவள் ஒன்றும் புரியாமல் பார்க்க.. உன்னோட தகுதி..  சாரி அந்த வார்த்தைய சொல்ல உனக்கு அருகதை இல்லன்னு உன்னோட நிலைய நீ ஒத்துக்குற பார்த்தியா! அது தான் அது தான் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு. நானே உன்னை வாழவச்சவனா இருந்திட்டு போறேன் எப்டி? என்றான் ருத்ரன். 

அவள் இரத்த கண்ணீர் வடிக்கும் அளவுக்கு பேசினான் ருத்ரன். 

என்ன பண்றது? இது தான் விதி போல.. எனக்கு பிடிக்காத ஒருத்தின்னா..  இல்லல்ல நீ முதல் இல்ல.. நீ ரெண்டாவது. அண்ட் எனக்கு பிடிக்காத ஒரே ஃபேமிலி அப்டின்னா அது உங்க குடும்பம் தான். ஆனால் என்ன பண்றது? என்னோட அம்மா வார்த்தைக்கு கட்டு பட்டு தான் இதை பண்றேன். என்றவன் அவளின் அருகில் நெருங்கி இருந்தான். 

நிலா அதே இடத்தில் நெஞ்சம் அடைத்து நின்றிருக்க.. ஹே இங்கே பாரு! என்னை பாரு என அவளின் மோவாயை நிமிர்த்தினான். இரண்டு விழிகளும் சிவந்திருக்க.. கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு கண்ணீர்.  ருத்ரனை அண்ணார்ந்து பார்த்தாள். அவனுக்கு அருகில் நின்றிருக்கும் போது அவள் மிகவும் குட்டியாக தெரிந்தாள். 

வாட்ட சாட்டமான உருவம் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவன் போல..  உடல்கள் மொத்தமும் உருண்டு திரண்டு கட்டு மஸ்தானாக காணபட்டான். அவன் கட்டி அணைத்தால் இரும்பு கரங்களுக்குள் அடங்கி கொள்ளும் அவளின் மென்மையான தேகம். சின்ன முகம் நிலாவின் முகம். நெருக்கமான இமை முடிகள், அடர்த்தியான புருவம், மோவாய் குளி, கண்ணகுளி, குட்டி காது அதுவும் குடை காது, அதில் குட்டி வைர கம்மல். என செதுக்கி வைத்த சிலை போல இருந்தாள் நிலா. 

அவளின் தலைக்கு மேல் சுவற்றில் வைத்தவன் இன்னொரு கையை மோவாயில் வைத்தபடி குனிந்து அவளின் முகத்தை பார்த்தவன். இது தான் லாஸ்ட் வார்னிங் இனி இந்த கல்யாணத்தை நிருத்துங்கன்னு சொன்ன! இது மாதிரி வந்து பொறுமையா சொல்லிட்டு இருக்க மாட்டேன். புரியுதா? 

-அமைதி – 

“ஹே சொன்னது காதில் விழலையா ம்ம் கொட்ட கூட சொல்லி தரலயா உனக்கு?”

“ம்ம்” என்றாள் நிலா. 

“என்ன டி! இதுக்கு மேலே பேசினால் முத்து உதுந்து போகுமா? வாயை திறந்து சொல்லு டி!”

ம்ம் அப்படி பேச மாட்டேன். என நிலா சொல்ல.. 

அது! என்றவன். அவளை பார்த்து இனி எனக்கு டெயிலி போன் பண்ற! 

எதுக்கு நான் உங்ககிட்ட பேசணும்? என நிலா கேட்க.. 

தாடையை பிடித்து அழுத்தினான். 

“ஸ்ஸஸ் வலிக்குது!” என அவள் முகம் சினுங்களுடன் அவனை தள்ளி விட கைகளை தூக்கினாள். 

ருத்ரன் அவனது பாக்கெட்டில் இருந்து தட்டையான விஸ்கி பாட்டிலை எடுத்து ஒரே மூச்சாக குடித்தவன். அவளின் தோல் பட்டையில் வாயை துடைத்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நிலா அழுது கொண்டே எதுக்கு இப்படி குடிச்சு உடம்பை.. என ஆரம்பிக்க.. 

போதும் டி உன்னோட நடிப்பு! இதையெல்லாம் சத்ய தேவ் மாமா கிட்ட காட்டு. இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன். நீ டெய்லி போன் பண்ற! எனக்கு ஒன்னும் உன்கிட்ட பேச ஆசை இல்லை. 24 ஹவர்ஸ் நீ காதில் வச்சிருக்கனும். 

அவள் புரியாமல் பார்க்க.. உன்கிட்ட விடிய விடிய பேச எனக்கு விருப்பம் இல்ல. ஜஸ்ட் ஒரு டிராமா பிளே பண்ணனும். என்னோட அம்மா வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க. அதுக்காக ஒரு பில்ட் அப் அவ்ளோ தான். உன்னோட வாய்ஸ் ஈயத்தை காய்ச்சி காதில் ஊத்தின போல இருக்கும். இதுல உன்கிட்ட பேசுறது ஒரு கேடா என ருத்ரன் சொல்ல.. அவனை தள்ளி விட்டு வேகமாக நகர்ந்தாள் நிலா. நகர்ந்தவளின் கைகளை பிடித்து இழுத்தான் ருத்ரன். 

பிளீஸ் தீரா! முடியல அவ்ளோ வெறுப்பா என் மேலே!.  பேசாமல் என்னை கொன்னுடுங்க பிளீஸ் என அவள் அழ.. அவளை இழுத்து படுக்கையில் தள்ளியவன். அவளுடன் படுத்துக் கொண்டான். 

நிலா அவனிடம் ஒன்றவும் முடியாமல் விலகவும் முடியாமல் திணறி தவித்தவள். மாமிச மலையை தள்ள முயற்சி செய்து தோர்த்து போய் அப்படியே கண்களை மூடி அசந்தாள். 

அடுத்த நாள் காலை அவள் எழும் போது ருத்ரன் இல்லை. அறையில் மொத்தமும் தேடினாள் காணவில்லை. அவளின் போன் அலற… அவனே தான்!.. 

சொல்லுங்க என காதில் வைத்தாள். யுவர் டைம் ஸ்டார்ட் நவ் இனி எங்கே போனாலும் போன் எடுத்திட்டு போற! புரியுதா? நீ லைன்ல இருக்கியான்னு அப்பப்போ நான் செக் பண்ணுவேன். Be alart.. என கூறினான். 

“அது எனக்கு பாத்ரூம் வருமே!”

அங்கேயும் எடுத்திட்டு போ! 

குளிக்கும் போது!.. 

ச்சீ! என்ன கேட்கிற? அப்படியே எனக்கு ஆசை பாரு நீ குளிக்கிற சவுண்ட கேட்கவும்.. உன்னை பார்க்கவும். வியாக் ஹிப்போபாட்டமஸ் என்றான் முனுமுனுத்துக்கொண்டே.. 

அப்போ என்ன பண்ணனும்? 

வெளியே சார்ஜ் போடு! ஆனால் போன் கட் பண்ண கூடாது. உனக்கு குளிக்க 10 நிமிசம் தான் டைம் என்றவன் படுக்கையில் படுத்து உறங்க ஆரம்பித்தான் அவனது வீட்டில். அதிகாலை நான்கு மணிக்கு பிளைட்டில் பறந்து பெங்களூர் வந்து சேர்ந்தவன். இப்பொழுது அவன் படுக்கையில் விழுந்தான். 

“ஹே லைன்ல இருக்கியா!”

ம்ம் இருக்கேன். என அவள் குரல் கொடுக்க.. அமைதி.. 

ஹே என்ன டி பண்ற? 

சாப்பிட போறேன்! என்றாள் நிலா. 

சரி! என அவன் சொல்ல.. 

டைனிங்ல எல்லாரும் இருப்பாங்களே அப்போ எப்படி போன காதுல வைக்க முடியும். என நிலா கேட்க.. 

அப்போ வீடியோ கால் பண்றயா? என தூக்க கலக்கத்தில் ருத்ரன் கேட்டான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

வேணாம் நான் எப்போவும் லைன்ல இருக்கேன் என நிலா கூறிய படி குளித்து முடித்து டைனிங் சென்றாள். 

போன்ல யாரு? என நிலாவின் அண்ணி ஹரிணி கேட்க.. 

அது அவர் தான் மண்ணி என நிலா சொல்லவும் அது கண்மணியின் காதில் கேட்கவும் சரியாக இருந்தது. 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!