Episode- 42
அடிக்க தெரிந்த கைகளுக்கு அணைக்கவும் தெரியுமா என்ன? ஆச்சரியம் தான் அவளுக்கு. முதல் முத்தம். ஆம் சுய நினைவில் அவனாகவே அருகில் வந்திருக்கிறான். என்பதை நிலாவால் நம்பவே முடிய வில்லை.
தனது ஸ்பரிசமே பாவம் என்று நினைப்பவன். இன்று கட்டியணைத்து முத்தமிட்டிருப்பதை பற்றி நினைக்க நினைக்க உள்ளுக்குள் அவன் மீது எண்ணங்கள் அலை மோதினாலும் கூட.. அவனுக்கு தான் துரோகம் செய்து விட்டோம் என கண்களில் நீர் வழிந்தது நிலாவுக்கு.
தனது பெண்மை ருத்ரணுக்கு இல்லையே என வேதனை கொண்டாள். அது மட்டுமா? காதல் இல்லாத தீண்டல் தீ போன்றது. என உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி போனாள்.
அனைவரும் புடவை எடுக்க கிளம்பி விட்டார்கள். இரண்டு நாட்கள் பெங்களூரிலேயே தங்க திட்டம். புடவை எடுக்க எல்லாரும் காஞ்சிபுரம் போவாங்க! ஆனால் நீங்க எங்கே போறீங்க? என ஹரிணி கேட்க..
தேஜு புன்னகையுடன் விவேகாவோட அம்மா ஊரு சேலம். அங்கே சிந்தாமணியூர், இளம்பிள்ளை இப்படி ஃபேமஸ்சா நிறைய இடம் இருக்கு. அதை விட என்னோட தோப்பனார் பாட்டி வீடு அனுப்பூர். அதுவும் அங்கே தான் இருக்கு. இந்த முறை ஆத்துக்கு போகனும் என கூறினார்.
அணுப்பூர் என்ற பெயரை கேட்டதும் கண்மணிக்கு வயிற்றை கலக்கியது. அனைவரும் கிளம்பியிருக்க.. ஹே கண்மணி நீ வரலயா? என ஹரிணி கேட்டாள் வயிற்றை பிடித்து கொண்டே..
இல்ல கா நான் இங்கேயே இருக்க போறேன். அவாளுக்கு வேலை இருக்கு. அவரை தனியா விட்டுட்டு நான் வரல. இது எல்லாம் நிலாக்கு தானே எடுத்து கொடுக்குறாங்க. நான் எதுக்கு அங்கே தேவையே இல்லாம என்றாள் கண்மணி.
ஹே அனுப்பூருக்கு போலாம் கண்மணி. அங்கே உன்னோட குடும்பத்தை பார்க்க விருப்பம் இல்லையா என தேஜூ கேட்க..
கல்யாணம் ஆகிட்டூ போறேன் மாமி. நேக்கு பயமா இருக்கு என கண்மணி கூறி கொண்டிருக்க.. அனைவரும் வந்து சேர்ந்தார்கள்.
கிளம்பலாமா? என ஹரிணி புன்னகையுடன் நிதினை பார்க்க..
டாடி! எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. இப்போதைக்கு வர முடியாது. அண்ட் ஹரினிக்கு டெலிவரி டைம் வந்திடுச்சு. பாதுகாப்பு அதிகப்படுத்த வேணும். இந்த சமயத்துல வெளியே சுத்திட்டு இருக்க முடியாது. அதனாலே நானும் ஹரிணியும் வரல என்றான் நிதின்.
ஹரிணி புரியாமல் நித்தினை பார்த்தாள். நிதின் அவளை கண்டு கொள்ள வில்லை.
என்ன டா நீயும் இப்படி சொல்ற? நிவாஸ் வர மாட்டான்னு கண்மணி சொல்றா! நாங்க மூணு பேர் மட்டும் போகவா? என தேஜூ கேட்க..
நிதின் விரைப்புடன் எனக்கு வேலை இருக்கு தேஜூ! எந்த வேலைக்கும் கையாலாகாதவன்னு இருக்க கூடாதில்லை. அதான் வேலை பண்றேன் என்றான்.
Spr எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குள் நிலா மற்றும் நிவாஸ் இருவரும் வந்து விட.. மா என்னால வர முடியாது மீட்டிங் இருக்கு நீங்க போயிட்டு வாங்க என நிவாஸ் தன் அண்ணனை போலவே தட்டி கழித்தான்.
தேஜு அடுத்த வார்த்தை பேச வர, நம்ம மூணு பேர் மட்டும் போவோம். சத்ய தேவ் வரானே அது போதும் என சொல்லி கிளம்பி விட்டார் spr.
தேஜு ஏக்கத்துடன் திரும்பி பார்த்தபடி புறப்பட்டார்.
எங்க அம்மா வீட்டில் கொண்டு போய் விடுறேன்னு சொன்ன? தமிழ் முறைப்படி பிரசவம் அம்மா வீட்ல தான் நடக்கும். உன்னோட தெலுகு முறைய நீயே வச்சுக்க. எனக்கு என்னோட டாடிய பார்க்கணும் கூட்டிட்டு போ நிதின் என ஹரிணி சொல்ல..
நீ வீட்டை விட்டு எங்கேயும் போக கூடாது. அவங்களை வேணும்னா நான் இங்கே வர வைக்கிறேன். இப்போ நீ போயி ரெஸ்ட் எடு என இயல்பாக சொன்னான் நிதின்.
I hate you ராஸ்கல் என கோபமாக சொன்ன படி அவ்விடத்தை விட்டு மெல்ல வயிற்றை பிடித்து கொண்டு நடந்து சென்று விட்டாள் ஹரிணி.
கண்மணி மனதில் புதிதாக நம்பிக்கை முளைத்தது. இந்த வீட்டில் இருக்கும் இருவருக்கும் ருத்ரணை பிடிக்க வில்லை. அதனால் சுலபமாக திருமணத்தை நிறுத்தி விடலாம் என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
கண்மணி நைட்டு வெளியே போலாமா? என நிவாஸ் கேட்க..
எதுக்கு வெளியே போயிட்டு? இன்னிக்கி உங்களுக்கு பிடிச்ச அத்தனையும் நம்ம ஆத்துலயே செய்யறேன். இன்னிக்கி நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் என்றாள் கண்மணி.
அப்டின்னா சமையல் அறையில் வேலை இருக்காது.
பின்ன? என கண்மணி கேட்க..
படுக்கை அறையில்.. மெத்தைக்கு தான் வேலை இருக்கும். என கண்ணக்குளி ததும்ப கூறினான்.
கண்மணியின் முகத்தில் வெட்கம் பூசி கொள்ள.. சட்டென முகத்தை மாற்றி கொண்டவள். முதல்ல எல்லா வேலையும் முடிச்சிட்டு வாங்க அப்புறம் பார்ப்போம் என நழுவி ஓடி விட்டாள்.
கண்ணம்மா நில்லு என நிவாஸ் அழைக்க..
அதற்குள் அவள் சென்றிருந்தாள்.
நிவாஸ் முகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசமும் புன்னகையுடன் நிம்மதியும் குடி கொண்டது.
இது எத்தனை நாளைக்கு?
***
Spr, தேஜு, நிலா என மூவரும் பெங்களூர் சென்றார்கள். அங்கு ஓய்வெடுத்து விட்டு இன்ப ராகவன் குடும்பத்துடன் புறப்பட்டார்கள் புடவை கடையை நோக்கி..
மகி, மை விழி, இருவரும் அவர்களுடன் உடன்பிறப்பு உதயன் மனைவி தாரா மற்றும் அவளின் மகள் இனியா என ஒரு பட்டாளமே கிளம்பியது.
ரிதம் மற்றும் சத்ய தேவ் இருவரும் வந்தார்கள்.
அனைவரை பார்த்ததும் ரிதமுக்கு பேச தோன்றியது தன் அன்னையை கட்டி கொள்ள தோன்றியது. தன் அப்பாவிடம் கட்டி அழ தோன்றியது. ஆனால் தனக்கான எல்லையை சுற்றி போட்டு கொண்டவள் யாரிடமும் பேசாமல் தூரத்தில் இருந்து அவர்களை பார்த்தாள்.
மகி தான் ஒவ்வொரு முறையும் அவராகவே ரிதமிடம் பேச..
விவேகா கோபத்துடன் அக்கா நீ மாமியார் மாதிரி நடந்துக்க மாட்டியா? அவள் கிட்ட எதுக்கு கெஞ்சிட்டு இருக்க? அவளை என் பொண்ணுன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு என்றார்.
போதும் நிறுத்து தேவையில்லாம திட்டாத.. அவள் என்ன பண்ணாலும் என்னோட மருமகள் சும்மா திட்டாத என சப்போட் செய்தார் மகி.
நீ திருந்த மாட்ட என விவேகா சலித்து கொண்டார்.
நிலா வை பொம்மை போல அமர வைத்து அவரவர் சந்தோசத்துடன் ஒவ்வொரு புடவையாக எடுத்து வைத்து பார்த்தார்கள்.
இன்ப ராகவன் ஓரிடத்தில் நின்று தீவிரமாக ஒருவனுக்கு அழைப்பு விடுத்தார்.
என்னாச்சு மாமா! என சத்ய தேவ் கேட்க..
இன்னும் படுக்கைய விட்டு எழுந்துக்கல அந்த ராஸ்கல் சரியான சோம்பேறியா இருக்கான். எப்டி தான் நாலு மணிக்கு மேல் அவனுக்கு தூக்கம் வருதோ தெரியல இதுல ஆர்மியில் போய் என்னத்தை கிழிச்சுருப்பான். என நொந்தபடி கூறினார்.
இருங்க மாமா நான் போன் பண்றேன் என உடனே அழைத்தான் சத்ய தேவ்
அடுத்த நொடி போன் எடுக்க பட்டது. இன்பா வாயில் கெட்ட வார்த்தை மானாவாரியாக கொட்டியது.
சத்ய தேவ் தன் மாமன் கைகளை பிடித்து கொண்டு சீக்கிரம் வாடா என போனை வைத்தார்.
ருத்ரன் ஒருவழியாக புறப்பட்டு ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வர நிலாவிடன் இருந்து அழைப்பு வந்தது.
எடுக்க பிடிக்க வில்லை. காரணம் நேற்று நடந்த விளையாட்டுகள். அவள் முன் செல்லவே அவனுக்கு பிடிக்க வில்லை. அவமானமாக நினைத்தான். தன்னை கேவலமாக நினைத்திருப்பாள்.
அவளை பார்த்தால் என்னோட உணர்வு!! ச்ச.. என சலித்து கொண்டவன் வெகு நேரமாக அங்கேயே நின்றான்.
நிலா மீண்டும் அழைத்தாள்.
ருத்ரன்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels