Episode-70
ஏன் எல்லாரும் என்னையவே பார்க்கிறாங்க? என ரிதம் கேட்க..
நீ ரொம்ப அழகா இருக்க அதான் என்றான் சத்ய தேவ்.
உதட்டை சுழித்து முறைத்தாள் ரிதம். இன்பா தனது மகளை தீவிரமாக பார்த்தார்.
சரி எல்லாரும் கிளம்புவோம் என சூர்ய தேவ் கூற.. பயணம் ஆரம்பித்தது. ஆறு மணி நேர பயணம். விவேகா, இன்பா, நிலா மூவரும் ஒரு காரில் ஏறி கொள்ள..
ரிதம் காரை பார்த்தவள் தனது குடும்பத்தையும் ஏக்க பார்வை பார்த்தாள். தார் மஹிந்திரா ஜீப்.
மாமா நான் ஓட்டுறேன் பாப்பா நீ முன்னாடி வா! மாமி, ரிதம், மாமா மூணு பேரும் பின்னாடி உட்காருங்க என சத்ய தேவ் கூறினான்.
சூர்ய தேவ், மகி மை விழி, கார்த்திக், என அனைவரும் 7 சீட்டர் காரில் ஏறி கொண்டார்கள்.
இதழ், மிதுன் தேவ், வெற்றி, பவன்யா மூவரும் இன்னொரு காரில் வந்தார்கள்.
நான் முன்னாடி வரேன் என ரிதம் சொல்ல..
போய் உட்காரு!! அவ்ளோ தான் சொல்லுவேன் என சத்ய தேவ் பற்களை கடிக்க… இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள் ரிதம்.
சத்ய தேவிடம் நிலா பேச்சு கொடுத்து கொண்டே வந்தாள். அண்ணா இப்போ தானே சேத்து நோம்பி வரும்?
ஆமா பாப்பா நியாபகம் வச்சிருக்கயா? என சத்ய தேவ் கேட்க..
எனக்கு அங்கே வர ரொம்ப புடிக்கும். ரொம்ப ஜாலியா இருக்கும். அதுவும் கோவில சுத்தி கடை சூப்பரா இருக்கும் . அப்புறம் சொப்பு சாமானம் இருக்கும். அப்புறம் தேர் இளுப்பாங்க. அப்புறம் கம்பம் நடுவாங்க. குதிரை துளுக்கும். ஒரு தடவை நட்ராஜ் தாத்தா கூட நானு, சித்தப்பா, மிதுன் அண்ணா, பவன்யா கா எல்லாரும் போய் குதிரை துளுக்குறத பார்த்தோம். எவ்ளோ கூட்டம்? சூர்யா டாடி என்னை தூக்கி காட்டினார். என ஆர்வத்துடன் பேசி கொண்டே வந்தாள் நிலா.
விவேகா ஆற்றாமையுடன் மகளை பார்த்தவர். அவன் கூட சந்தோசமா தான இருக்க? அப்புறம் என்ன ரிதம் உனக்கு பிரச்னை? சத்ய தேவ் உன்னை எப்டி தாங்குறான்? இதை விட என்னடி வேணும்? உன் அப்பா கூட இப்படி இருந்ததில்லை. எதுக்கு டி பிரச்னை பண்ணிட்டு யார் கூடவும் பேசாமல் முகரைய இழுத்து கிட்டு உட்கார்ந்துட்டு இருக்க? நிலா நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு உன்னை பத்தி என்ன நினைப்பா என கண்களை கசக்கி கொண்டு கேட்டார்.
விவேகா கம்முன்னு வர மாட்டியா நீ? என இன்பா அதட்ட..
ரிதம் வேக மூச்சுடன் எதுவும் பேசாமல் வேறு புறம் திரும்பி கொள்ள.. நீ கோர்ட் படி ஏறிய நிமிடத்தில் இருந்து உன் அப்பா தூக்கம் போச்சு டி!! என்றார் விவேகா.
ரிதம் தன் அன்னையை திரும்பி பார்க்க.. என்ன பார்க்கிற? ஹாஸ்பிடல் கூட்டி போயி செக் பண்ணி தூங்க மாத்திரை வாங்கி கொடுத்திருக்கேன். மாத்திரை அதிகமா எடுத்துக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க டாக்டர். கிட்னிக்கு நல்லதில்லையாம். உன் அப்பா சூப்பர் மேன் இல்ல. என்றார் விவேகா.
அண்ணா அண்ணி!! என நிலா திரும்ப.. பாப்பா!! நீ கதைய கண்டினியோ பண்ணு அவங்களுக்கு நடுவில் போக வேணாம். அது அவங்க குடும்ப விசயம் என சத்ய தேவ் சொல்ல.. நிலா மீண்டும் பேசுவதில் கவனம் செலுத்தினாள்.
ஹே வாய மூடு விவேகா என இன்பா கத்த..
ரிதமின் கண்ணில் நீர் வழிய தன் தந்தையை பார்த்தாள். டாடிஇஇஇ!! என அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
இன்பா வேக மூச்சுடன் அவளின் நெற்றியில் முத்தம் பதித்தவர். அவள் கடக்குறா நீ அவள் சொல்றத கண்டுக்காத!! என் செல்லம்! என் பேபி;! என கண்ணை துடைத்து விட்டார்.
விவேகா மூச்சை உறிஞ்சியபடி அமர்ந்திருக்க.. மா என நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ரிதம்.
நீ மாசமா இருக்கேன்னு சத்ய தேவ் சொல்லும் போது நான் எவ்ளோ சந்தோசமா இருந்தேன் தெரியுமா? ஆனால் நீ கோர்ட் எதுக்கு போன? உனக்கே தெரியும். என்னை விட உன்னை மகி மாமி தான பார்த்துகிட்டாங்க! அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? தப்பு தான ரிதம் என விவேகா எடுத்து கூற..
ரிதம் தன் தந்தையின் பக்கம் திரும்பியவள் டாடி! நான் அது வந்து!! என தயங்கினாள்.
அவள் சொல்றத நீ காதுல வாங்காத என தலையை வருடி கொடுத்தார் இன்பா. டாடி!! சாரி டாடி என்னால!!..
இல்ல செல்லம்!! நீ எதையும் கண்டுக்காத என தலையை மெல்ல வருடி விட்டார்.
மதிய உணவு சேலத்தில் சாப்பிட்டார்கள். நான் சக்தி கிட்ட போறேன் என எழுந்து சென்று விட்டாள் ரிதம்.
என்ன ராகவ் இவளை புரிஞ்சுக்க முடியலயே? என விவேகா கேட்க…
உன்னையே இன்னும் என்னால புரிஞ்சுக்க முடியல!! ஆனால் மூணு பேரும் ஒவ்வொரு மாதிரி இருக்கீங்க என்றார் இன்ப ராகவன்.
விவேகா பெரு மூச்சை விட்டபடி சரி சாப்பிடலாம் என அனைவரும் சாப்பிட்டார்கள்.
“இப்போ எதுக்கு என்கிட்ட வந்து ஒட்டிட்டு உட்கார்ந்துட்ட? அதான் உன் அப்பா கிட்ட பேசிட்டல்ல!! அப்புறம் என்ன? போடி! அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணு!” என சத்ய தேவ் தன் தங்கை இதழ்க்கு உணவு பரிமாறினான்.
நீ ஊட்டி விடு என அமர்ந்து கொண்டாள். ரிதம்!!
ஊட்டு டா!! என ரிதம் கூற.. மீல்ஸ் நாக்குக்கு உணத்தியாக நெய் விட்டு ஊட்டி விட்டான்.
நிலா ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். விவேகா ருத்ரனுக்கு போன் செய்து பேசினார்.
சட்டென அவன் நினைவு வர, அய்யோ மறந்து போயிட்டேன! என தோன்ற மாமி என நிலா அழைக்க..
நீ கால் பண்ணி பேசணுமாம்!! என விவேகா கூறி விட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்.
வியர்க்க விறுவிறுக்க.. போனை எடுத்து அழைத்தாள்.
முதல் அழைப்பில் எடுக்க வில்லை ருத்ரன். பிளீஸ் பிளீஸ் என கெஞ்சி கொண்டே இரண்டு மெஸேஜ் அனுப்பியவள். கால் பண்ணவா பிளீஸ் என அழைத்தாள்.
அவனே அழைத்தான். ஹலோ என்னங்க?
தனியா வா!! என ருத்ரன் அழைக்க..
இல்ல இங்கே நாங்க A2B ல இருக்கோம்.
காருக்கு வா!! கிஸ் பண்ணு!! என ருத்ரன் கூற..
என்னங்க கோவிலுக்கு போறோம் இப்படி பண்ண கூடாது. பிளீஸ் என சிணுங்கினாள்.
கிஸ் பண்ண கூடாது ஓகே! போன் கூட பண்ண கூடாதா? உனக்கென்ன டி கேடு? என திட்டினான் ருத்ரன்.
நிலா மவுனமாக இருக்க.. சாப்பிட்டியா? என ருத்ரன் கேட்க..
ம்ம் என ஒற்றை பதில் கொடுத்தாள்.
சரி எனக்கு?
உங்களுக்கு ரெண்டு வாய் என் பிளேட்ல எடுத்து வச்சேன். என்றாள் நிலா.
ருத்ரன் உதட்டில் மெல்லிய புன்னகை. அப்புறம் என கேட்டான்.
அப்புறம் என்ன?
பேசு டி!! அதான் உன் லவ்வர் கூட கடலை போட்டிருப்ப தான!! என ருத்ரன் கூறி கொண்டிருக்க..
போன்ல யாரு? என ரிதம் கேட்டாள்.
அது வந்து அவர் தான் அண்ணி!! என்றாள் நிலா.
ஹே என் கிட்ட பேசு டி! என ருத்ரன் அதட்ட..
“டேய் நான் ரிதம் பேசுறேன்”
ப்ச் உன் கிட்ட எனக்கு என்ன பேச்சு? நீ போனை அவள் கிட்ட கொடு என சிடுசிடுவென பேசினான் ருத்ரன்.
ருத்ரன் உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும். என ரிதம் கூற..
போனை அவள் கிட்ட கொடு ரிதம் டென்ஷன் பண்ணாத என ருத்ரன் சொல்ல..
ரிதம்..?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels