அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
329 views

Episode-78

அதிகாலை அவன் மார்பில் அவள் இறுக்கமாக அணைத்தபடி உறங்கி கொண்டிருந்தாள். 

சக்தியின் போன் சிணுங்கியது. ம்ம் சொல்லுங்க மா! என பதில் கொடுத்தான். 

ரிதம கொஞ்சம் எழுப்பி விடு டா! 4 ல இருந்து 6 குள்ள வளையல் போடனும்னு உன் பெரிமா வர சொல்றாங்க! என மகி கூறி கொண்டிருக்க.. போனை பிடுங்கிய தேஜி, சக்தி அவளோட நீயும் தயாரா வா! பிரம்ம முகூர்த்தத்தில் வளையல் போட்டுடனும். என்றார். 

ஹான் சரி பெரிமா நான் புறப்படுறேன். என போனை வைத்தவன். ஹே பேபி தங்கம் எழுந்திரு! என அழைக்க.. 

ரொம்ப தூக்கம் வருது. நாளைக்கு வளைகாப்பு பண்ணலாம் இல்லன்னா சாயங்காலம் பண்ணுவோம் பிளீஸ் என்றாள். 

ஹே ரிதம் எல்லாரும் உனக்காக தாண்டி வெயிட் பண்றாங்க! வாடி! என் ரவுடி ராவடி என கொஞ்சினான். 

முடியாது. ரெண்டு மணி நேரம் கூட தூங்கல நான். அதனால எனக்கு தூக்கம் வருது என ரிதம் தூக்கத்தை கண்டின்யூ செய்ய.. அவளை தூக்கி கொண்டு பாத்ரூம் சென்று விட்டு வந்தான் சத்ய தேவ். 

மா மோட்டர் போட சொல்லுங்க! இங்கே பாத்ரூம்ல தண்ணி வரல! என ருத்ரன் பேசி போனை வைத்தான். 

மெதுவாக கண்களை விழித்தாள் நிலா. எவ்வளவு சொல்லியும் அவன் சமாதானம் ஆகவில்லை. உடையை மாற்றி கொண்டு ருத்ரனை பார்த்து கொண்டே அமர்ந்தவள் எப்படி தூங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை. 

துண்டை மட்டும் கட்டி கொண்டு நின்றிருந்தான். பாத்ரூம் போய் வந்தாள் இயற்கை அழைப்புக்கு. தாயிடமிருந்து போன் வர, அட்டன் செய்தவன் தண்ணி வருது மா. நான் குளிச்சிட்டு வரேன் என கட் செய்து விட்டு திரும்பினான் வாசலில் நிலா நின்று கொண்டிருக்க.. 

ஒரு சில நொடிகள் அதே இடத்தில் நின்றான். 

நிலா அதே இடத்தில் நின்று கொண்டிருக்க.. 

ப்ச் நகரு என்றான் ருத்ரன். 

நான் உங்க கிட்ட பேசணும். எனக்கு எனக்கு பாப்பா பெத்துக்க இஷ்டம் என்றாள் நிலா ஒருவழியாக அவனிடம்.. 

ருத்ரன் அவளை பார்த்து, எனக்கு எந்த குழந்தையும் வேணாம். முக்கியமா உன் கிட்ட இருந்து தேவையே இல்ல. என்றான் முகத்தில் அடித்தார் போல.. 

நிலாவின் கண்களில் நீர் கோர்க்க, இதை மட்டும் door delivery மாதிரி அப்போப்போ கண்ணீரை டெலிவரி பண்ணிடு. 

பிளீஸ் தீரா! நான் சொல்றத கேளுங்க! எனஜி இஷ்டம் தான் என அவள் மீண்டும் ஆரம்பிக்க.. 

ஹே போதும். நான் என்னமோ உன்னை கொடுமை பண்ற மாதிரி! என்றவன் அவளை பார்த்து, நான் எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? என்னோட அம்மா ஆசைக்காக! சோ அந்த லைன்லயே நிக்கிறேன். இதை தாண்டி உனக்கும் எனக்கும் நடுவில் எதுவும் இல்ல. இந்த பாண்டை பிரேக் பண்ணிட்டு நீ தாராளமா போலாம். என்றவன் ஓரெட்டு வைத்து ஹான் உன் அப்பன் கிட்ட சொல்லிட்டு போயிடு! அந்த ஆளு நசனசன்னு என்னை டார்ச்சர் பண்ட்ராப்டி என்று விட்டு உள்ளே நுழைந்தான். 

நிலா என்ன செய்வது என தெரியாமல் அதே இடத்தில் நின்றாள். கால் வைக்கிற இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைக்கிறான். சண்டாளன். விலகவும் முடியவில்லை ஒன்றவும் முடியவில்லை. 

ரிதம் அமர்ந்து கொண்டிருக்க.. அவளின் முடியை உலர்த்தியவன் ஹே இப்போ ஓகே டி! என்னை பாரு என அழைக்க.. கண்களை தேய்த்து கொண்டே நிமிர்ந்தாள். 

நெற்றியில் முத்தமிட்டவன் அவளின் முன் தாலி கொடி நீட்டினான். 

யாரோட தாலி? 

உன்னோடது! இனி எதுக்கு வெறும் கழுத்தில் இருக்கணும். உனக்காக புதுசா பண்ணேன்.  இது குல தெய்வ கோவிலில் வச்சு பூஜை செஞ்சு வாங்கிட்டு வர சொன்னேன். என் ஆத்தா கிட்ட.. அண்ட் இதுல இன்னொரு ஸ்பெசல் இருக்கு. 

என்ன? என ரிதம் கேட்க.. 

இதுல என்னோட ஆத்தா உனக்காக கொடுத்த ரெண்டு கிராம் காசு, அப்புறம் மகி கொடுத்த மாங்கா டிசைன் காசு அது கூட விவேகா மாமி கொடுத்த தாயத்து எல்லாமே இருக்கு. அதை விட இந்த தாலிய ஆத்தா முதல்ல அம்மாவை போட்டுக்க சொன்னாங்க தீர்க்க சுமங்கலி யோகம் something like that ஏதோ சொன்னாங்க. சோ இது ரொம்ப ஸ்பெசல் நீ இனி இதை பத்திரமா பாதுகாக்க வேணும்னு சொன்னாங்க. அதான் என்றவன் கண் இமைக்கும் நொடியில் போட்டு விட்டிருந்தான் அவளுக்கு. முத்து, பவளம், கருகமணி அதனுடன் தங்க காசு, மற்றும் மோப்பு என புது பொலிவுடன் அந்த தாலி ரிதமின் கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது. 

இப்போ வெளியே போங்க மேடம் நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன் என சத்ய தேவ் கப்போட் பக்கம் சென்றான். 

ரிதமின் முகம் குப்பென வியர்க்க தாலியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். உள்ளுக்குள் எதுவோ போட்டு பிசைந்து எடுத்தது.

வேஷ்டி சட்டையில் சத்ய தேவ், அரக்கு கலர், மயில் பச்சை வண்ணம் கூரை புடவையில் ரிதம் வந்தாள். தளர்வாக அவளின் ஜடையை பின்னி பூ வைத்தார்கள். நெற்றியில் பொட்டு வகுட்டில் குங்குமம் என அதன் அடுத்து. வசுமதி, முன்னால் வந்து அவளுக்கு வைர நெக்லஸ் அணிவித்தார். கங்கா அருகில் தன் பேத்தியை நிறைவுடன் பார்த்தார். இன்பா விரைப்புடன் நிற்க ரவி சந்திரன் கண்கள் கலங்கி போனது. சுபா மற்றும் சரவணன் வருண் அதிதி, என அனைவரும் பார்த்து கொண்டிருந்தார்கள். 

இப்போ எதுக்கு அழர போல முகத்தை வச்சிருக்கீங்க என இன்பா தன் தந்தையிடம் கேட்க.. என் பேத்தி! என்றார் உணர்வு பூர்வமாக.. இன்பாவுக்கும் தடுமாற்றம் தான்.

ருத்ரன் தனது அக்காவை ஆச்சரியமாக பார்த்தான். 

என்னடா அப்படி பார்க்கிற? என சத்ய தேவ் கேட்க.. 

மாமா நீங்க சூப்பர் மேன் அவளை பொண்ணா மாத்திட்டீங்க! என்றான். 

தம்பி என ரிதம் அழைக்க.. 

சத்ய தேவ் வாய் விட்டு சிரித்தான். 

ருத்ரன் என்ன செய்வதென தெரியாமல் அருகில் சென்றான். 

அவனது கையை பிடித்து கொண்டாள் ரிதம் சில நிமிடத்துக்கு. 

இதோ நூறு வகை சீர் தட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, சூர்யா தன் அம்மாவின் அருகில் வந்து, மா நீ முதல்ல வளையல் போடு என வைர வளையலை கொடுத்தார். 

உமா வசுமதியை பார்க்க, போடுங்க என கண் சிமட்டினார். 

உமா சிரித்து கொண்டே சக்தி தங்கம் வந்து உட்காரு என அழைத்தார். 

நட்ராஜ் மற்றும் உமா இருவரும் சாமியை வேண்டி கொண்டு ரிதம் கையில் வைர வளையலை அணிவித்தார் உமா. 

ரிதம் ஒரு வித கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள். அடுத்து வசுமதி நீங்க போடுங்க என நகர்ந்தார். அதன் பின் கலைவாணி. இப்போ அம்மா அப்பா அப்படியே வரிசையா வாங்க என அழைத்தார்கள். 

சத்ய தேவ் தன் அம்மாவிடம் மா சித்தி வரட்டும் என கேட்க.. 

மைவிழி கண்களில் நீர் கலங்க, என் பையன் என சிரித்து கொண்டே ரிதமின் கையில் வளையல் போட்டு விட்டார். சக்தியின் கன்னத்தில் சந்தனம் பூசி இருவரையும் ஆசிர்வாதம் செய்தார். ரிதமின் கைகளில் தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, மண் வளையல் அதனுடன், வைர வளை அதன் பின் கண்ணாடி வளையல் என அனைவரும் வரிசையாக போட்டு விட்டார்கள். 

ரிதமின் கைகளை சத்ய தேவ் பிடித்து கொண்டான். இருவரையும் ஆசிர்வாதம் செய்தார்கள் அனைவரும். ரிதமின் பிறந்த வீட்டு உறவுகளை அழைத்து கட்டு சோறு ஊட்டி விட சொன்னார் உமா. நிலா மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தவள் கண்களில் நீர் கோர்த்து கொண்டது. அவளது கைகள் வயிற்றை வருடியது.  அப்படியே எங்காவது கண் காணாத இடத்துக்கு சென்று விடலாம் போல தோன்றியது.

ஹே ராவடி! 

போடா! 

என்னாச்சு? 

நீ எனக்கு வளையல் போடவே இல்ல. 

அவ்ளோ தான போட்டுட்டா போச்சு என இழுத்து மடியில் அமர வைத்தவன். கையில் வளையலை போட்டு விட்டு முத்தம் பதித்தான். 

சக்தி! 

சொல்லு டி! 

இந்த தாலி ரொம்ப சென்டிமென்டா? 

ஆமா! இதை கழட்டினா அப்புறம் உன் புருஷன் அதாவது நான்!! 

ஹே என உதட்டில் முத்தமிட்டாள். 

ரிதம் உன்கிட்ட ஒண்ணு கேட்கணும். 

என்ன? 

திட்ட கூடாது கோப பட கூடாது என் கிட்ட கோவிக்க கூடாது. 

என்னன்னு சொல்லு! 

இப்போ நீ சைலஜாவா மாறின தான! 

இன்னும் நீ அவளை நினைச்சிட்டு இருக்கியா? என ரிதம் கோபத்துடன் கேட்க.. 

இல்ல சத்தியமா என் மனசுல ரிதம் மட்டும் தான் இருக்கா! But யோசிச்சு பார்த்தால் கொஞ்சம் கிளு கிளுப்பா இருக்கும் என்றான் சத்ய தேவ். 

டேய் உன்னை என சரமாரியாக அடிக்க கை உயர்த்தினாள். 

இருவரும் ஏகாந்தத்தில் இருக்கும் நேரம் மீண்டும் அவனுக்கு வேலை விசயமாக அழைப்பு வந்தது. போடா நீ! என சோர்வுடன் கூறினாள். 

அடுத்தநாள் அனைவரும் பெங்களூர் புறப்படுவதாக திட்டம்.

சத்ய தேவ் தான் அவசர அவசரமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். போன் பேசினான். மீட்டிங் அட்டன் செய்தான். இப்படி அவனுக்கு வேலை எக்க சக்கமாக இருந்தது. 

ரிதம் ஒரு பெரு மூச்சுடன் மகியின் அருகில் வந்தாள். 

என்னடா தங்கம்? 

மாமி நான் கோவிலுக்கு போகணும் ஐ மீன் குல தெய்வ கோவில். 

அப்படியா அதுக்கென்ன நான் சக்திய கூட்டிட்டு போக சொல்றேன் என்றார். 

இல்ல மாமி அவனுக்கு வேலை இருக்குல்ல நான் மிதுன் கூட இதழ் கூட போயிட்டு வரேன் என புறப்பட்டாள். 

இதழ் மற்றும் மிதுன் இருவரும் வந்தார்கள் அவளுடன்.. 

நிலா கஷ்டபட்டு தன்னை இயல்பாக வைத்துக் கொள்ள கஷ்ட பட்டாள். ஆனால் ருத்ரன் அதற்கு மாறாக எனர்ஜி முகத்துடன் திரிந்தான் அவனுக்கென்ன? அவனுக்கு ஒரு கேடு வராதா? பார்ப்போம். 

விருந்து முடித்து அடுத்தநாள் அனைவரும் ஊருக்கு புறப்பட்டார்கள். டெலிவரி வந்திடுச்சு நீ தனியா இருக்க வேணாம் ரிதம் குட்டி என்று மகி விவேகா இருவரும் கூற.. 

ரெண்டு நாள் மட்டும் அங்கே இருந்திட்டு வரேன் என அடம் பிடித்து சென்றாள் ரிதம். 

ஹே எங்கே ப்ளாக் ஈகிள்! என வந்து நின்றாள்.  சரிகா! 

ரிதம் அவளை ஏறிட்டு பார்க்க, 

அரிசந்திரா உன்னை பார்க்க தானே வந்தான். அதுக்கு அப்புறம் அவன் ஆள காணோம் எங்கே என கேட்டாள் சரிகா. 

எனக்கு என்ன தெரியும்? என ரிதம் திரும்ப.. 

ஹே சொல்லு டி என ரிதமின் தலை முடியை பிடித்தாள் சரிகா. 

யாரு இந்த சரிகா? 

ப்ளாக் ஈகிள் என்னும் அரிச்சந்தராவின் தங்கை. 

அடுத்து என்ன நடக்கும்? 

தொடரும்.

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment