அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali
417 views

Episode-90


மகி மற்றும் சூர்யா அரக்க பறக்க வந்து சேர அவர்களுடன் மிதுன் தேவ் வந்தான்.

இன்பா இறுகிய முகத்துடன் நின்றிருக்க… என்னாச்சு இன்பா? என சூர்யா நேராக தன் நண்பனின் அருகில் சென்றார்.

என்னாச்சு? என்ன நடக்குது இங்கே? என மகி கேட்க..

உங்க பையன் என்ன காரியம் செஞ்சிருக்கான் தெரியுமா? என நிதின் மகியிடம் குரலை உயர்த்த..

என்ன நிதின் பேசுற? என மகி கேட்டார்.

நிதின் ஒரு பெரு மூச்சுடன் அனைத்து விவரங்களையும் கூறினான்.

சூர்யா வேகமாக நிதின் முன்னால் வந்தவன். என் பையன் இப்படி தரங்கெட்டு இறங்கி பண்ற அளவுக்கு நீங்க என்ன பண்ணீங்க? நிதின் மரியாதையா பிரச்னை பண்ணாம போயிடு! அவ்ளோ தான் உனக்கு மரியாதை. இல்லன்னா நடக்கிறதே வேற என கூறினார்.

என்ன பண்ணுவீங்க? அவன் தான் பண்ணான்!! ஏன்னா அவனுக்கு தான் நிலா எங்கே இருக்காள் அப்டின்னு முதன் முதலில் அவளை கடத்தின விசயம் தெரிஞ்சது. எனக்கு என்ன தோணுதின்னா இவனே பிளான் போட்டு கடத்திட்டு இவனோட ஆசை ருத்ரன் மச்சானுக்கு தங்கச்சி தங்கச்சி அப்டின்னு என் நிலாவை கூட்டி கொடுத்திருக்கான். உனக்கு தான் தங்கச்சி இருக்கே டா!! அவளை கூட்டி கொடுக்க வேண்டியது தானே என கூறி விட்டான் நிதின்.

சூர்யா அவனது கன்னத்தில் ஓங்கி அரை விட.. நிவாஸ் பாய்ந்து கொண்டு என் அண்ணனை அடிக்க நீங்க யாரு என இன்னொரு பக்கம் வந்தான். Spr கோபத்துடன் என்ன பண்ற சூர்யா? அவன் மேலே கை வைக்கிற என கேட்டார்.

எல்லாரும் ஒரு நிமிசம் நிறுத்துங்க என மகி கத்த..

அனைவரும் அவர் பக்கம் கவனத்தை திருப்பினார்கள். சூர்யா கோபத்துடன் பார்த்துக்கோ டி! இவனுக்காக தானே சத்ய தேவை ஒதுக்கி வச்ச? என் பொன்னை தப்பா பேசுறான் டி! எல்லாரையும் சேர்த்து பிடிக்கணும் அப்டின்னு எல்லாரையும் அழைச்சு ஆக்கி அரிச்சு வடிச்சு போடுவியே இப்போ இந்த நாய் என்ன சொல்லுதுன்னு பாரு என்றார்.

மகி கண்களில் நீருடன் நிதின் இங்கே பாரு சத்ய தேவ் நீ சொல்ற மாதிரி பண்ற ஆள் இல்லை. நீ ஏதோ விசாரிக்காம பேசுற. அதை விட ருத்ரன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான். எங்கேயோ தப்பு நடந்திருக்கு. இது தான் விதி போல கடவுள் சரியாக தான் முடிச்சு போட்டிருக்கார். இதோ ருத்ரன் நிலா ரெண்டு பேருக்கும் தெரியாமல் நடந்தது. இப்போ ஊர் அரிய அவங்களுக்கு கல்யாணம் ஆகி போச்சே! எந்த விதத்திலும் உங்களுக்கு அவங்க குடும்பம் குறைஞ்சது இல்ல. பிரச்னைய விட்டுட்டு அடுத்து ஆக வேண்டிய வேலைய பாரு என்றவர். நகருங்க எல்லாரும் சக்தி வா நம்ம போலாம். ரிதம் வா என அழைத்தார்.

அப்படி எல்லாம் போக முடியாது என நிதின் கூற.. அவனது செக்யூரிட் கார்ட்ஸ் ஒரு இன்ச் கூட நகரவில்லை.

டேய் ராஸ்கல்!! என்ன திமிரா? என சூர்யா நிதினை குரலை உயர்த்த..

மகி SPR பக்கம் திரும்பியவள். மாமா என்ன அமைதியா நின்னுட்டு இருக்கீங்க? சொல்லுங்க! என கூற..

யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க! இவன் தான் எல்லாத்தையும் ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்கான் வெட்கம் கெட்டவன். என நிதின் சொல்ல..

கோபத்துடன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மகி.

உங்களுக்காக தான் நான் இவ்வளவு நேரமும் பொறுமையா இருந்தேன். இனி உறவெல்லாம் நமக்குள் இல்ல. விசாரணை நடக்கும் இந்த ருத்ரன் *** அப்புறம் உங்க பையன் ரெண்டு பேரும் வெளியவே வராத அளவுக்கு தண்டனை கிடைக்கும். எனக்கு வெட்டி போடுற ஆத்திரம் வருது என நிதின் அதிகார ஆளுமையில் கூற..

டமார் என துப்பாக்கி சத்தம் கேட்க..

ருத்ரன் அதிர்ச்சியுடன் மாமா என கத்த..

இன்பா சட்டென திரும்பி பார்த்தார். ரிதம் உறைந்து போக..

மகி என்ன நடக்கிறது என யோகிக்கவே நேரம் பிடித்தது.

பாஸ் நீங்க சொன்ன மாதிரியே எல்லாத்துக்கும் காரணமானவனை சுட்டுட்டேன் என்றாள் தீபனா. அத்தோடு நில்லாமல் நிதினிடம் அவனது பெர்சனல் லைசென்ஸ் துப்பாக்கியை நீட்டினாள்.

சத்ய தேவின் கண்கள் சிவக்க.. அவன் கீழே சரிய..

இன்பா பதட்டத்துடன் சக்தி!! என பாய்ந்தார்.

சக்தி என அழுது கொண்டே மகி கீழே சரிந்தார்.

ரிதம் வேக மூச்சுடன் டாக்டர் என கத்தினாள்.

சூர்யா அனைவரையும் பார்த்து டேய் என் பையனுக்கு எதுவும் ஆச்சு உங்களை கரு அறுக்காம விட மாட்டேன் என கூறிவிட்டு தூக்கினார்.

ஹே யார் நீ? உன்னை யார் அவனை சுட சொன்னது? என நிதின் அதிர்ச்சியில் கேட்டான்.

பாஸ் எனக்கு எல்லாமே தெரியும். என தீபனா சொல்ல..

நிதின் வேகமாக சத்ய தேவ் இருக்கும் பக்கம் நெருங்கினான்.

SPR அவனை அடித்து கழுத்தை நெருக்கியவர். என்னடா பண்ணி வச்சிருக்க? அவனை எதுக்கு சுட சொன்ன? என கேட்டார்.

மகி அழுதபடி இந்த அளவுக்கு நீங்க இருப்பீங்கன்னு எனக்கு தெரியல. போதும் இனி உங்களுக்கும் என் குடும்பத்துக்கும் எந்த ஒட்டு உறவும் இல்ல. என்றவள் பெருங்குறலெடுத்து அழுதார்.

சத்ய தேவ் ICU-வுக்கு கொண்டு செல்லபட்டான். இன்பா கோபத்துடன் வந்தவர். நிதின் சட்டையை பிடித்து உலுக்கி என்ன டா உனக்கு வேணும்? Youf சக்திய சுட்டதுக்கு நீ கோர்ட்ல பதில் சொல்லணும். நீ இனி எப்டி இந்த பதவியில் இருக்கேன்னு நான் பார்க்கிறேன். ஹே அவன் மேலே கேஸ் போட்டு உள்ளே தள்ளு அவனை என்ன வேணாலும் பண்ணுவேன்னு சொன்னியே நான் எதுவும் கேள்வி கேட்டேனா? நீ சக்தி மேலே கை வச்சில்ல நீ எப்டி இனி நிம்மதியா இருக்கிற அப்டின்னு பார்க்கிறேன் டா!! என்றவர். வேகமாக போனை எடுத்து நான் IG பேசறேன். ஹோம் மினிஸ்டர் பிளான் பண்ணி என்னோட மருமகனை கன் ஷூட் பண்ணிட்டார். நான் கேஸ் ஃபைல் பண்றேன். மினிஸ்டரா இருக்க எந்த தகுதியும் அவனுக்கு இல்ல. அவனை மினிஸ்டர் பதவியில் இருந்து தூக்கணும் ஏற்பாடு பண்ணுங்க என்றவர் மீண்டும் போன் செய்தார்.

ஹலோ சொல்லுங்க!!

அதிவீரா மினிஸ்டர் நிதின் பிரகாஷ் உன்னோட பிரெண்ட் சத்ய தேவை சூட் பண்ணிட்டான் அவன் இப்போ இந்த பதவியில் இருக்க கூடாது. உன்னோட ஸ்ட்ரட்டர்ஜஸ்ட் டீம் வச்சு வேலைய ஆரம்பி.

அங்கிள் இப்போ சத்ய தேவ் எப்டி இருக்கான்? நான் வரவா? எங்கே இருக்கீங்க நான் கிளம்பிட்டேன் என அதிவீரா கூற..

நான் பார்த்துக்கிறேன். நீ ஆட்சிய கவிழித்தும் வேலைய ஸ்டார்ட் பண்ணு! என் மருமகன் மேல கைய வச்சா அவனுக்கு என்ன நிலைமை வரும்னு காட்டணும் என கூறி போனை வைத்தார் இன்பா.

இதோ அடுத்த நொடி அதிவீரா வேலையை ஆரம்பித்தான்.

நிதின் நேராக ருத்ரன் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து வந்தவன். மினிஸ்டர் பதவி போறது போகட்டும். ஆனால் அதுக்கு முன்னாடி நீ முழுசா இருக்க கூடாது டா!! கார்ட்ஸ்! என கத்தினான்.

இன்பா தடுக்க வர..

IG உங்க வேலைய நீங்க பாருங்க! என் வேலைய நான் பார்க்கணும் என இழுத்து சென்று விட்டான். இவனுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க! ஏண்டா உயிரோட இருக்கோம் அப்டின்னு இவன் கதறனும் என தள்ளி விட்டான். ருத்ரன் கைகளில் விலங்கு மாட்டி இழுத்து சென்றார்கள். நிவாஸ் நீயும் போ நமக்கு அரை மணி நேரம் தான் டைம் இருக்கு. அதுக்குள்ள அந்த அதிவீரா என்ன வேணும்னாலும் பண்ணுவான். நீ அவனை விட்டுடாத! என்றான் நிதின்.

டேய் நிதின் என்ன பண்ற? என SPR வர.. என் இஸ்டபடி தான் நான் பண்ணுவேன். அவனை நான் சுடல!! அதுக்காக இந்த ருத்ரன என்னால சும்மா விட முடியாது. இந்த குழந்தைய நிலா கிட்டருந்து வாங்கும் வேலைய ஆரம்பிங்க. செத்துடுச்சுன்னு சொல்லிடலாம். அதை அந்த இன்பராகவன் குடும்பத்தில் கொடுத்துவோம். நிலா பக்கத்தில் யாரும் நெருங்க கூடாது. நான் சொல்றத இனி நீங்க கேளுங்க என்று விட்டு புறப்பட்டான்.

ஹே போனை எடு டி!! என பிளாக் ஈகில் கூலாக விளையாடி கொண்டிருந்தான் ரிதமுக்கு அழைத்து.

ஹலோ!! என ரிதம் அழுகையுடன் பேச..

எப்போ உன் புருஷனை விட்டு வர போற? முக்கியமா உன் குழந்தை உன் கூட இருக்க கூடாது. இல்லன்னா உன் புருஷன் உயிரோட இருக்க மாட்டான். போ இப்போவே உன் அப்பன் கிட்ட சொல்லு!!

சத்ய தேவ் கூட சரியாகுற வரைக்கும் இருக்கேன் பிளீஸ் என கெஞ்சினாள் ரிதம்.

அச்சோ!! நீ அழும் போது எப்டி இருக்கு தெரியுமா? அதை விட உன் அப்பன்!! அய்யோ அவன் துடிக்கிறது இன்னும் நல்லாருக்கு. இதுல ஒன்னு தெரியுது டி. உன் அப்பனுக்கு பையன விட மருமகன் தான் முக்கியம். அதுக்கு காரணம் நீயும் தான். ரிதம் தானே அவன் இதயத்தில் துடிக்கிது. இப்போ உன்னோட இதயம் துகில் கிட்ட பாதி தேவ் கிட்ட மீதி சரி தான!! என்றான் ப்ளாக் ஈகிள்.

என் பையன எதுவும் பண்ணாத!! பிளீஸ்!!

கண்டிப்பா பண்ண மாட்டேன். உடனே கொண்ணுட்டா சுவாரசியம் இருக்காதே!! என்றான் ப்ளாக் ஈகிள்.

ரிதம் அழுகையை கட்டு படுத்தியபடி நிற்க..

மூணு நாள் உன் புருஷன் கூட பண்ணிக்கோ! அப்புறம் நீ அவனை விட்டு போகல.. அவன் மேலே போயிடுவான். நான் யாருன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும் என போனை கட் செய்தான் பிளாக் ஈகில்.

ரிதம் அழுகையுடன் அப்படியே அமர்ந்தாள்.

டேய் எதுக்கு டா சக்திய சுட்ட என போனில் கத்தினான் நிதின்.

டேய் நான் சொல்றத கேட்கிற இடத்தில் தான் நீ இருக்க! நல்லா கேட்டுக்கோ! அந்த ருத்ரன் உடம்பில் உயிர் மட்டும் தான் இருக்கணும். அந்த அளவுக்கு அவனை சித்ரவதை பண்ணி கொண்டு போய் இன்பராகவன் முன்னாடி போடு!! அப்படி இல்ல.. உன்னோட தங்கச்சி உன்னோட மச்சான் ரெண்டு பேரும் பாம்பு போல பின்னி இருந்த வீடியோவ வெளி விட்டு டிரெண்ட் ஆக்குவேன். என்றான் ப்ளாக் ஈகிள்.

நிதின்..?

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment