Episode-105
பிலிஸ் லீவ் மி என கெஞ்சும் குரலில் கூறினாள் நிலா.
ப்ச் கிட்ட வாடி! என இழுத்து படுக்கையில் முத்தமிட்டான் ருத்ரன்.
அய்யோ வேணாம் என அவள் விலக..
நிலா love you சொல்லு. சொல்லு டி என முத்தமிட்டான் மூர்க்க தனமாக..
Roll number 21 என கோரசாக குரல் கேட்க..
விழித்தான் ருத்ரன். அதிகாலை 5 மணி இருக்கும்.
கனவா!! என தலையை கோதினான். விடிய விடிய உறக்கம் வரவே இல்லை. எல்லையில் எப்போதும் குளிராக இருக்கும். வீட்டுக்கு வந்தால் ac இல்லாமல் இருக்க மாட்டான். இங்கே கொசு கடி மற்றும் டேபிள் ஃபேன். அது மட்டுமில்லாமல் இரவில் குழந்தை சிணுங்கல் வேறு கேட்டது.
அது நிலாவின் அறையில் இருந்து தான். ஆம் ருத்ரனது டெண்ட் நிலாவின் அறைக்கு கீழே தான் இருக்கிறது. மேலே அறைக்குள் குழந்தையின் அழு குரல் நன்றாக கேட்டது.
Roll no 21 என மறுபடியும் அழைத்தார்கள்.
வரேன் என்றவன். ஷாட்ஸ் போட்டு கொண்டே, குட் மார்னிங் என்றான்.
இது சில்வர் குடம். என்று கொடுத்து விட்டு சென்றார்கள்.
இடியட்ஸ் என முனகியவன் மூன்று குடம் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றுவதற்குள் ஏழு மணி ஆகி போனது.
அவன் ஆசுவாசப்படுத்தி கொண்டு வர, roll no 21 இது உங்களோட யூனிபார்ம் இது டாய்லெட் இங்கே குளிச்சுக்கோங்க. என்று விட்டு அவர்கள் roll no 4 நகர..
Roll no 21 உங்களை பொம்மாயி மேடம் வர சொன்னாங்க. என்று விட்டு சென்றார் roll no 3
அடியே அருந்ததி உன் ரத்ததை குடிக்க போறேன். பொம்மாயி என் அழகு பொம்மாயி என தனக்கு தானே சொல்லி கொண்டவன் குளித்து முடித்து ரெடியாகி வாசலில் வந்து நின்றான்.
நிவாஸ் அவனை முறைத்து பார்த்து கொண்டே ஜிம் சென்றான்.
ஹாய் தீரா? என ஹரிணி அழைக்க..
அதற்குள் வந்தவள் அவன் முன் ஒரு பக்கெட் வைத்தாள்.
என்ன இது? என ஹரிணி கேட்க..
இது யூரின் மேட், அண்ட் என் பையனோட ஜட்டிகள் இருக்கு ஹைஹினா வாஷ் பண்ணிட்டு முடிச்சுட்டு நீங்க பிரேக் பாஸ்ட் போலாம் என்று விட்டு உள்ளே சென்றாள் நிலா.
நிலா நீ ஆணவத்தில் ஆடுற!!
ருத்ரன் சிரித்து கொண்டே நான் ராணுவத்தில் ஆடினேன். என் பொண்டாட்டி ஆணவத்தில் ஆடுறா விடு கா என்றவன் பக்கெட்டை எடுத்து கொண்டு சென்றான்.
முக்கால் மணி நேரம் துவைத்தான். இவன் சரியான மூத்திரசட்டி! மழை பெய்யுர போல விடிய விடிய பிஸ் அடிச்சிருக்கான். அந்த கோபத்தை இந்த அருந்ததி என்கிட்ட காட்டிட்டு போறா என வேலை அனைத்தும் முடித்தான்.
காலை உணவு தயாராக இருக்க, அனைவருடனும் சாப்பிட சென்றான்.
அவர்கள் ருத்ரனை வித்தியாசமாக பார்த்தார்கள். ராணுவம் சென்றதில் இருந்து புரோட்டீனை மட்டுமே அதிகமாக எடுத்து கொள்வான் ஆனால் இன்று சோறு சாப்பிட போகிறான். கார்ப் அவனுக்கு பிடிக்காது. வேறு வழி இல்லை. சாப்பிட்டு முடித்தவன்.
அவனது டெண்ட் பக்கம் செல்ல.. roll no 21 என அழைத்தாள் நிலா.
Yes மேடம் என ருத்ரன் வந்து நிற்க..
என் டாடி கிளம்பிட்டார் சோ உங்க டியூட்டி ஸ்டார்ட் ஆகுது என சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
SPR வெளியே வந்தார்.
குட் மார்னிங் சார்.
தயவு செஞ்சு என் கூட வராத. உன்னோட வேலை எதுவும் எனக்கு தேவையில்லா என SPR சொல்லி விட்டு ஏறினார்.
அவங்களோட ரூல்ச ஒபே பண்றது என்னோட வேலை. அதனால நான் செஞ்சு தான் ஆகணும் பிளீஸ் சார் என சொல்லி கொண்டே கார் ஸ்டார்ட் செய்தான்.
SPR corporation போ என முகத்தை திருப்பி கொண்டார்.
ருத்ரன் முதலில் கொஞ்சம் தடுமாறி அதன் பின் கூகிள் மேப் உதவியுடன் போய் சேர்ந்தான்.
SPR அவனை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விட ருத்ரன் அவரது பின்னாலேயே சென்றான். வெளியே லாபியில் குளு குளு ac காற்று வீச.. சொக்கி போனவன் அப்படியே ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு பேப்பர் புரட்ட எல்லாமே முறுக்கு பிழிந்த எழுத்துக்கள் போல இருந்தன அதாவது தெலுங்கில்.. வேகமாக ஆங்கில செய்தி தாள் எடுத்தவன் நன்றாக அமர்ந்து கொண்டு பேப்பர் முழுவதையும் படித்தவன். அப்படியே பேப்பரை மூடி கொண்டே உறக்கத்தை தழுவினான்.
மதிய உணவு வேளை வர SPR புறப்பட்டார்.
சோம்பல் முறித்து கொண்டே பார்த்தவன் SPR செல்வதை பார்த்து விட்டு வேகமாக சென்று கதவை திறந்து விட்டான்.
அவன் திறந்து விட்ட கதவை கோபத்துடன் சாத்தியவர். இன்னொரு பக்கம் திறந்தபடி காரில் ஏறினார்.
சார் எங்கே போகணும் என ருத்ரன் கேட்க..
வீட்டுக்கு என முடித்து கொண்டார் spr.
அவர் சாப்பிட உள்ளே செல்ல, roll no 21 என அழைத்தாள் நிலா.
மேடம் என போய் நின்றான்.
குழந்தைய பார்த்துக்க என கொடுத்து விட்டு சென்றிருந்தாள் நிலா.
அய்யோ இவன் மோசன் போயிட்டான். என முகம் சுழித்த ருத்ரன் அவனை தூக்கி கொண்டு போய் கழுவி விட்டு தூக்கி வந்தான்.
இதோ பசி எடுக்க கத்தினான் சிறு வண்டு. இதோ நிலா வந்து பிடுங்கி கொண்டு சென்று விட்டாள்.
இப்படியே ஒருவாரம் நடந்தது. நிலா நினைத்த ஒன்று கூட நடக்கவில்லை. ருத்ரன் மிகவும் அமைதியாக இருந்தான்.
மீனாட்சி தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். சட்டையில்லாமல் அமர்ந்திருந்தான் வெறும் பனியனில். மீனாட்சி இருப்பதை பார்த்ததும் உடை போட்டு கொண்டு வந்தான். அவனை பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்க
என்னாச்சு என கேட்டாள் மீனாட்சி
ஒன்னுமில்லையே! என ருத்ரன் கூற..
இல்ல முகம் சரி இல்லையே! என்றாள் மீனாட்சி.
அது கொஞ்சம் பெர்சனல் என ருத்ரன் கூற..
ஓகே என்று விட்டு நடந்தவள் நேராக ஹரிணியின் முன்னால் போய் நின்றாள்.
என்ன சொல்ற? என நிவினை தூக்கி கொண்டே கேட்டாள் ஹரிணி.
நீங்களே போய் பேசுங்க கா ஒரு மாதிரி இருக்காரு என மீனாட்சி அனுப்பி விட.. இதோ போறேன் என ருத்ரன் முன்னால் சென்றாள்.
தீரா!?
கா! சொல்லுங்க..
உனக்கு எல்லாமே ஓகே தானே!! என ஹரிணி கேட்க..
ருத்ரன் சிரித்து கொண்டே மீனாட்சி சொன்னார்களா? என கேட்டான்.
ஆமா டா என்ன விசயம் சொல்லு!
ஒண்ணுமில்ல கா!
தீரா இப்போ சொல்ல போறியா? இல்லையா?
கா sorry to say this! இங்கே ஒர்க் பண்ற ஸ்டாப் எல்லாருக்கும் யூனிபார்ம் சரி இல்ல. பாலியஸ்டர் ல stitch பண்ண யூனிபார்ம். அதனால ரொம்ப ஸ்வெட்டிங்கா இருக்கு. கூடவே லோ குவாலிட்டி. அதனால எனக்கு இட்ச் , ரேஷஸ் வந்திடுச்சு என்றான்.
அப்டியா என அதிர்ந்து கேட்ட ஹரிணி. ஒரு கணம் நிறுத்தி விட்டு, இல்லையே அதுக்கு சான்ஸ் இல்ல. இந்த வீட்ல வேலைக்காரங்கள servent மாதிரி நாங்க யாருமே ட்ரீட் பண்ண மாட்டோம். நம்ம மாமனார் ரொம்ப தங்கமான குணம் கொண்டவர். எல்லாரையும் ஒரே போல தான் நடத்துவார். இப்படி நடக்க வாசிப்பு இல்ல டா என்றாள்.
அப் அப்படியா என்றவன். சரி கா அப்போ விட்டுடுங்க! நான் ஏதோ தெரியமா சொல்லிட்டேன். என்றான் ருத்ரன்.
சரி என ஹரிணி நேராக சென்றது. டெய்லர் ரூம் தான்.
என்ன நடக்குது இங்கே என்று ஆளுமையாக கேட்டாள்..
மேடம் என்ன கேட்கிறீங்க? என அவர் பதட்டத்துடன் பார்க்க..
ருத்ரனுக்கு பாலியஸ்டர் ல யூனிபார்ம் கொடுத்திருக்கீங்க என கொதித்து எழுந்தாள் ஹரிணி.
மேடம் அது அது வந்து என்று அவர் தயங்க..
மாமா வீட்டுக்கு வரட்டும் நான் சொல்றேன் என ஹரிணி வெளியே செல்ல போக..
மேடம் மேடம் நான் சொல்றத கேளுங்க. நிலா மேடம் தான் லோ குவாலிட்டில தச்சு கொடுக்க சொன்னாங்க என போட்டு உடைத்தான்.
ஹரிணி..?
நிலா..?
ருத்ரன்..?
தொடரும்..