Episode 128
ரிதம் நேராக குளித்து முடித்தவள் தனது மகனை தூக்கி முத்தமிட்டாள் வேகமாக.. இத்தனை நாள் அருகில் கூட செல்லவில்லையே? யாராவது எங்கிருந்தாவது தன்னை கண்காணித்து கொண்டிருந்தால் என்ன செய்வது? என்ற பயம் தான்.
துகில் என முத்தமிட்டு அணைத்து கொண்டாள். சத்ய தேவ் இன்னொரு பக்கம் தனது வீட்டில் இருக்கும் அனைவரையும் சமாதானம் செய்யவே போதும் போதுமென ஆகி விட்டது.
இன்ப ராகவனை அழைத்து கொண்டு நேராக மார்ச்சுவரி சென்றான்.
பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த உடல்களை பார்த்து விட்டு, ஒரு வேளை சரிகா சுடாமல் போயிருந்தால் என்ன பண்ணியிருப்ப? உன்னை அவள் கிட்ட மாட்டி விட்டிருந்தால் என்ன செஞ்சிருப்ப? என புருவம் சுருக்கி பார்த்தார் இன்பா.
சத்ய தேவ் சிரித்து கொண்டே கட்டுசோறுல ஆல்ரெடி விஷத்தை கலந்து வச்சிருந்தேன். ஒரே இடத்துக்கு அவங்களை வரவச்சு மொத்தமா போட நினைச்சேன். ஆர்பாட்டமே இல்லாம எல்லாமே அமைதியாக நடக்கணும்னு நினைச்சேன். என்றான்.
அந்த சரிகாவுக்கு உன்னை பத்தி தெரியுமா? என இன்ப ராகவன் கேட்க..
இது வரைக்கும் இல்ல. என்றான் சத்ய தேவ்.
அவள் வயித்துல இருந்த குழந்தை? என இன்ப ராகவன் உறுத்து பார்த்தார்.
நிதின் ஹரிணியுடையது மாமா!! நான் ரிதம் புருஷன் என் வாழ்க்கையில் அவள் மட்டும் தான். என்றான் உறுதியாக..
இன்பராகவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இருவரும் வீட்டுக்கு சென்றார்கள்.
ரிதம் வயிற்றை வருடிய படி அமர்ந்திருந்தாள். மிதுன் தான் அவளின் அருகில் அமர்ந்திருந்தான்.
என்னடி அப்படி பார்க்கிற? என மிதுன் கேட்க..
என் முன்னாடி நீ ரொம்ப உயர்ந்துட்ட மிதுன் என்னோட மரண படுக்கையில் கூட நீ இருப்பே டா!! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீ என் கூடவே இருந்தே! இதோ இப்போவும் இருக்க என கைகளை இறுக்கி பிடித்தாள் ரிதம்.
ஆமா எனக்கு எப்பவும் நீ ரொம்ப முக்கியம். இப்போ இருந்து இல்ல குழந்தையில இருந்து நீ என் கூட இருக்க!! நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா வளர்கிறோம். எனக்கு எப்பவுமே நீ கஷ்டப்பட்டா தாங்க முடியாது என்றான் மிதுன்.
துகில் மிதுனை பார்த்து கையசைக்க, வாடா வாடா தங்கம் என் ராஜா!! அப்பா கிட்ட வாங்க என சொல்லி கொண்டே நீட்டினான் கையை..
அப்பா சொல்லுங்க!! அப்பா சொல்லுங்க அழகனா? ராஜாவா? நீங்க பெரிய ராஜாவா? அப்பா சொல்லுங்க என மிதுன் கொஞ்சி கொண்டிருக்க,
சக்தி அப்பான்னு சொல்லுங்க என வந்தான் உள்ளே சத்ய தேவ்.
அவனை பார்த்ததும் மிதுன் முறைத்து விட்டு இவன் என்னோட பையன் போடா ராஸ்கல் என எழுந்தான்.
டேய் குட்றா!! என்ற மிதுன் ரிதமை சைகை காட்டினான்.
நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதை போல கண் சிமட்டிய சத்ய தேவ் பேச்சு வாக்கில் சண்டையிடுவது போல நாலு வார்த்தை பேசி விட்டு ரிதமின் பக்கம் சென்றான்.
மிதுன் துகிலை தூக்கி கொண்டு வெளியே சென்று விட்டான்.
ம்ம் இதயமே இவளிடம்.. உருகுதே என பாடி கொண்டே சென்றான் அருகில்..
ரிதம் மெதுவாக அவ்விடத்தை விட்டு எழுந்து கொண்டாள். ராவடி என அழைத்து கொண்டே அருகில் நெருங்கினான்.
வேகமாக அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ரிதம். கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
எதுக்கு டி அடிச்ச? என சத்ய தேவ் பாவமாக பார்க்க..
ரிதம் வயிற்றை பிடித்து கொண்டு அவனை மூச்சு வாங்க பார்த்தாள். உதட்டில் கோபமும் ஆத்திரமும் ஒன்று சேர்ந்து கொண்டது.
அதான் எல்லாமே பேசி புரிய வச்சுட்டேனே இப்போ எதுக்கு டி அடிச்ச? என சத்ய தேவ் கேட்டான் மீண்டும்.
அன்னிக்கி என்னடா சொன்னேன்? பக்கத்துல வராதன்னு படிச்சு படிச்சு சொன்னேனே ஏன்டா வந்த? என மூச்சு வாங்க பார்த்தாள்.
என்னைக்கு? என சத்ய தேவ் கேட்க, உதட்டை கடித்து கொண்டு வயிற்றை பார்த்தவள் அப்படியே அவனை பார்த்தாள்.
ஓ பாப்பாவா? என சத்ய தேவ் மென் புன்னகை சிந்தினான்.
ரிதம் இங்க வா கண்ணு ரெட்டை புள்ளை வயித்துல இருக்கு. எதுக்கு மேலே போன? என கேட்டு கொண்டே வந்தார் மகி. அவரின் கையில் இலங்கையின் ஸ்பெசல் வட்லாப்பம் இருந்தது.
இங்கே என்ன நடக்குது? என அதிர்ச்சியுடன் அவளின் வயிற்றை பார்த்தான். 7 மாத வயிறு கிட்ட தட்ட ஒன்பது மாத வயிறு போல காட்சி கொடுத்தது. உள்ளுக்குள் சொல்ல முடியாத உணர்வு. ரெட்டை குழந்தையா? ஒரு வருடம் ஓவர் நைட்டு வேலை பார்த்து துகில் வந்தான். ஒரே நாள் வேலையில் இப்படி டபிள் தமாக்காவா என ரீதியில் அவன் பார்வை பெருமையுடன் அவள் மீது படிந்தது.
மகி தட்டில் கொண்டு வந்து நீட்ட..,
இல் இல்ல மாமி எனக்கு குமட்டல் அதிகமா இருக்கு. என்றவள் அவருடன் அப்படியே நடந்து சென்றாள் கீழே…
ஹே என்னடி போற? என தன் அம்மா அங்கிருப்பதை மறந்து கத்தி விட்டான்.
மகி திரும்பி முறைத்து பார்த்தார். பின்னந்தலையை கோதி கொண்டவன் தயக்கத்துடன் ரிதமின் பின்னால் நடந்தான்.
எப்பொழுது தனியாக நேரம் கிடைக்கும் என பின்னாலேயே சுற்றி கொண்டிருந்தான் சத்ய தேவ்.
நேரம் கிட்டவில்லை. ரிதம் தன்னை பற்றி என்ன புரிதலில் இருக்கிறாள் என ஒன்றுமே புரியவில்லை. நெஞ்சம் அடைத்தது அவளுக்கு.
****
அனைத்து இடங்களிலும் அப்பாவியாக ஒருத்தி எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் நிலா.
ருத்ரனுடன் அனைத்து இடங்களிலும் ஒட்டி திரிந்தாள் இதழ். சாப்பிடும் நேரத்தில் நிலா வழக்கம் போல ருத்ரனை பார்க்க, இதழ் அவளை தனியாக அழைத்து சென்றவள். என்ன அப்படியே அவனை பார்த்துகிட்டே இருக்க? என்ன பிரச்னை? உனக்கு? அவன்கிட்ட எதுவும் பேசணுமா? சொல்லு கூப்பிடவா? என்றாள் இதழ்.
ஒன் ஒண்ணுமில்ல கா என நிலா சமாளிக்க,
என்ன நடக்குது? என கேட்டு கொண்டே வந்தான் ருத்ரன்.
எங்கே பார்த்தாலும் எப்போ பார்த்தாலும் உன்னை பார்த்துட்டே இருக்கா! அதான் காரணம் என்னன்னு கேட்க வந்தேன். வேற ஒண்ணுமில்ல என இதழ் கூறி விட்டு முன்னால் சென்று விட்டாள்.
ருத்ரன் எதுவும் பேசாமல் முன்னால் நடக்க, விசும்பும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தான்.
நிலா தான் நின்றிருந்தாள்.
இப்போ உனக்கு என்ன பிரச்னை? என ருத்ரன் கடுப்புடன் பார்த்தான்.
அது ஒன் ஒண்ணுமில்ல!!
அப்புறம் எதுக்கு என்னை பார்க்கிறயாம்? என ருத்ரன் கேட்க,
வேகமாக அவனருகில் வந்தவள். இமை வெட்டாமல் அவனையே பார்த்தாள்.
ஹாங் என்ன அப்படி பார்க்கிற? என கண்கள் வெளியே வந்துவிடும் அளவுக்கு பார்த்தான் ருத்ரன்.
ஒன் ஒண்ணுமில்ல என சொல்லி விட்டு வேகமாக அவளது அறைக்கு வயிற்றை பிடித்து கொண்டே நடந்து சென்றாள்.
ருத்ரன் தலையை கோதி விட்டபடி அதே இடத்தில் நின்று கொண்டிருக்க, அப்படியே கட்டிகிட்டா நல்லாருக்கும் கூடவே முத்தம் மிஸ் ஆகி போச்சுல்ல என பின்னால் இருந்து குரல் கேட்க, ஆமாம் என தன்னிச்சையாக கூறியவன் சட்டென திரும்பி பார்க்க அங்கே இதழ் இருந்தாள்.
ஆம் ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தவள் இன்னொரு பக்கம் வழியாக வந்து நேராக ருத்ரன் முன்னால் நின்றாள்.
ஹே லிப்ஸ்!! என ருத்ரன் பேச வர, இங்கே தானே கட்டிகிட்டா என அவளும் அணைத்து கொண்டாள்.
ஹே என்னடி பண்ற? அய்யோ தள்ளி போடி!! என ருத்ரன் அவளை பிரித்து விட மிகவும் சிரமப்பட்டான்.
என்ன நடந்தாலும் சரி நீ ரிவிட் அடிச்ச? கொன்னு போட்டுடுவேன். நீ மேடை ஏரியே ஆகணும். புரியுதா? என சலங்கயை கையில் சுற்றி கொண்டு அடிக்க ஓங்கினாள்.
இதழ் அவள் உன்னோட தங்கச்சி டி!! என ருத்ரன் எடுத்து கூற..
நான் அவளோட அக்கா!! என்று விட்டு அவ்விடத்தை விட்டு சென்றாள் இதழ்.
***
இரவு முழுவதும் யாருக்கும் தூக்கமில்லை. ரிதம் அனைத்து இடத்திலும் அவனை தவிர்த்தாள்.
இங்கே ருத்ரனோ நிலாவை நினைத்து கொண்டிருந்தவன் படுக்க செல்ல..
டேய் தீரா என மகனை தட்டி கொண்டே உள்ளே வந்தாள் இதழ்.
என்ன? என எழுந்தான்.
ரவுத்ரனை அவள் கிட்ட கொடுத்திடு நைட்டு அழுவான் என இதழ் கொடுக்க..
நீயே போயேன்!! என ருத்ரன் கூறினான்.
துகில் தொட்டிலில் இருக்கான் அவள் கீழே இருக்கா நீயே போய் கொடு. நான் துகில தூக்கணும் என்று விட்டு குழந்தையை கையில் கொடுத்தாள்.
ருத்ரன் தனது மகனுக்கு முத்தமிட்டு தோளில் போட்டபடி கீழே சென்றான். அவளின் அரை விளக்கு வெளிச்சத்தில் இருந்தது.
கதவை தட்டியபடி வெளியே நின்றான். மெல்ல கண்களை தேய்த்து கொண்டு கதவை திறந்தாள்.
எங்கே படுக்க வைக்க? என கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.
இங்கே போடுங்க என கட்டிலை காட்டினாள்.
ருத்ரன் மெதுவாக படுக்கையில் கிடத்தி உதட்டை துடைத்து விட்டு அவனுக்கு இரண்டு பக்கமும் தலையணை வைத்தவன் மெல்ல திரும்பினான்.
கர்ப்பகால உடையில் அழகாக இருந்தாள் தேன் நிலா. கிட்ட தட்ட அவளை எப்பொழுதெல்லாம் ருத்ரன் பார்க்கிறானோ அவள் கருவாக தான் இருக்கிறாள் அதாவது ஒரு வருடத்துக்கு முன்னால் சொல்கிறேன்.
இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்து கொண்டது. தலையை கோதிக்கொண்டே அவன் இரண்டு எட்டுக்கள் வைத்தான். அவளும் பின்னாலேயே சென்றாள். அதாவது கதவை அடைக்க,
எதுக்கு பின்னாடி வர, என ருத்ரன் திரும்ப ஹக் என கீழே விழ போனவளை அப்படியே வளைத்து பிடித்தான்.
அவனது சட்டையை இறுக்கி பிடித்தவள் கண்களை இறுக்கி மூடி இருந்தாள் நிலா.
கண்ணை எங்க டி வச்சிருக்க? என ருத்ரன் அவளின் இடையை பிடித்து நிறுத்தினான்.
மூச்சு வாங்கி கொண்டே கழுத்தை துடைத்தவள். அது கதவை சாத்த வந்தேன் என்றாள் நிலா.
அவளை முறைத்து விட்டு அறைக்கு வெளியே வந்தவன் திரும்பி அவளை பார்த்தான். நிலாவும் ருத்ரனையே பார்த்தாள் வைத்த கண் வாங்காமல்.. சட்டென வேகமாக வயிற்றை பிடித்து கொண்டு உள்ளே சென்றாள்.
என்னாச்சு என அறைக்குள் மீண்டும் வந்தான். ஒன் ஒண்ணுமில்ல என சோர்வுடன் படுக்கையில் அமர்ந்தாள். தண்ணீரை ஊற்றி நீட்டினான்.
அவளுக்கும் தேவைப்பட வாங்கி குடித்தாள். சட்டென புரை ஏறி விட அருகில் அமர்ந்து தட்டி விட்டான். இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்து கொள்ள நிலாவின் பார்வை அவனது உதட்டில் இருக்க, ஆல்ரெடி அவன் அங்கு தான் பார்த்து கொண்டிருந்தான்.
உதடுகள் இரண்டும் ஒட்டி கொண்டது.
தொடரும்..