
அன்பானவன் அடங்காதவன் அசாராதவன்
- 12 Dec 2025
- 161 reads
- ☆ No ratings yet
- 6 min read
AAA -154
ரிதம் சொல்வதை புருவம் சுருக்கி கேட்டான் சத்ய தேவ். ஆனா அவனது மனக்குமுறல் அவளுக்கு தெரியாதே, அடி சண்டாளி இத்தனை நாள் எங்கடி போயிருந்த? என மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்க..
அவன் அருகில் மெல்ல நெருங்கினாள் ரிதம். வெடுக்கென சுய நினைவுக்கு வந்தவன். என் என்ன பண்றீங்க? பிளீஸ் மேம் என அவன் பின்னால் நகர..
சக்தி!! எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா!!.
அய்யோ சாவடிக்கிறா சண்டாலி என இதயம் வேகமாக துடிக்க எச்சில் விழுங்கி கொண்டே பின்னால் நகர்ந்தான்.
மேம்.. நான் எனக்கு..
எனக்கு தோணுது உனக்கு தோண வேணாம்.. என சத்ய தேவ் சுதாரிப்பதற்குள் அவனது பாதங்களில் அவளின் பாதம் ஏறி இருந்தது.
மூச்சு வாங்க அவளை ஏறிட்டவன். தப்பு மேம்.. எனக்கு கொஞ்சம் என அவன் சொல்ல வருவதற்குள் உதட்டில் முத்தமிட்டிருந்தாள்.
மேடம்.. மேடம்.. பிளீஸ்.. நான் உங்களை விட ஆறு வருசத்துக்கு பெரியவன். இதெல்லாம் தப்பு மேம் என மூச்சு வாங்கி கொண்டே கூறியவனை.. கோபத்துடன் பார்த்த ரிதம், அப்போ அந்த மூணு பேரை என்ன பண்ணுவ?
எந்த மூணு பேர்? என எதுவுமே தெரியாதவன் போல கேட்டான்.
டேய் சக்தி என உதட்டை பிதுக்கியபடி பார்த்தாள் ரிதம்.
மேடம் உங்க ஹஸ்பன்ட் பார்த்தால் என்ன நினைப்பாரு?
நீ தான் டா என்னோட புருஷன். என வேகமாக அவனிடமிருந்து விலகியவள் நெற்றியை பிடித்தபடி அங்கும் இங்கும் நடந்தவள். கோபத்துடன் அவனது கழுத்தை இறுக்கி பிடித்தாள்.
மே..
டேய் நான் அழகா இல்லையா? இப்போ தானே சொன்ன? கண்ணக்குழி இருக்குன்னு.. அப்புறம் ஏன் நீ எறும்பா மாற மாட்டின்ற? என கழுத்தை இறுக்கினாள்.
What ant?
இந்த இங்கிலீஷ் மயிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. மலுமட்டை மலுமட்டை என தலையை கோதி கொண்டு நடந்தவள் இடையில் புடவையின் மடிப்பு இறங்கி இருந்தது.
மேடம் ant பத்தி சொன்னீங்களே? What ant? என மீண்டும் கேட்டான்.
என்னை பார்த்தால் என்ன தோணுது?
ஓ ஆன்ட்யா மேம்..
டேய் உன்னை கொன்னுடுவேன் என அவள் கத்தி விட.. அவன் விழுந்து ஓடி படுக்கையில் அமர்ந்து கொண்டான்.
ரிதம் பெரு மூச்சுடன் அவன் பக்கம் திரும்பியவள். எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா!!
அங்கில வர சொல்லவா மேம் ஹாஸ்பிடல் போயிட்டு வாங்க.. என்றவன் டிவியை ஆன் செய்ய.. சக்கரை இனிக்கிற சக்கரை பாடல் ஓடி கொண்டிருந்தது.
ரிதம் கையை கட்டிக்கொண்டு அவனை பார்க்க, மேடம் என திரும்பி பார்த்தான் சத்ய தேவ்..
எல்லாம் என்னோட நேரம் என கதவின் பக்கம் திரும்பினாள் வெளியே செல்ல..
ரிதம் என்றழைத்தான் மெல்லிய குரலில்..
சக்தி நியாபகம் வந்துடுச்சா? என கேட்டாள் ஆர்பரிக்க அருகில் வந்து..
No no no மேம்.. அது நாளையில் இருந்து உங்க பேபி.. சாரி நம்ம boys மூணு பேரையும் கேர் பண்ணிக்கிறேன் என்றான் சத்ய தேவ்.
எப்படி திடீர் ஞாயன உதயம்? என புருவத்தை சுருக்கி கொண்டு கேட்டாள்.
தொட்டதும் பட்டதும் பூ மலரும் முத்திட முத்திட தேன் சிதறும் வரிகள் டீவியில் ஓடி கொண்டிருக்க.. ரிமோட்டில் சில படங்களை காட்டினான். அதில் ரிதம் சத்ய தேவ் திருமண படங்கள் இருந்தது.
இது தான் மேம் ரீசன். இனி என்னோட வாழ்க்கையில் லவ் பண்ணி மேரேஜ் பண்ண முடியாது. அதனால.. என அவளை பார்த்தான்.
ரிதமின் முகம் ஒரு நொடியில் கருத்து போனது. நான் மட்டும் தான் இவனை விரும்புகிறேன் என சொல்ல வேண்டுமா? இவன்? இவன் என்னை மறந்து சுற்றுவானா? என நினைத்தவள் கைகளை இறுக்கி மடக்கியபடி வெளியே செல்ல போக..
மேடம் என் கூட மியாமி வருவீங்களா? என கேட்டான் சத்ய தேவ்..
ஹான் என புருவம் உயர்த்தி கொண்டு திரும்பி பார்த்தாள்.
இல்ல என்னோட லவ்வர மியாமி பைக் ரைட் கூட்டிட்டு போகணும்னு ஆசை.. நீங்க எனக்கு தெரியாம என்னோட பொண்டாட்டி ஆனால் எனக்கு தெரிஞ்சு தான்.. துயரம் என்னன்னா இப்போ எனக்கு எதுவும் நினைவில் இல்ல.. ஆனால் எனக்கு சின்ன வயசுல இருந்து சில ஆசைகள் இருக்கு. என்றான் சத்ய தேவ்.
அப்படியா? என்ன? என படுக்கையில் அமர்ந்தாள்.
மியாமி போகணும் என்னோட லவ்வர் கூட.. paris ல giant wheel ல top ல போய் என்னோட லவ்வர்க்கு propose பண்ணனும். அண்ட் வெனிஸ் போகணும்..
அவ்ளோ தானா!! என ரிதம் கேட்க..
புரபோசல் வானத்தில் மிதக்கிற போல நடந்தது. அதனால என இடை நிறுத்தினான் சத்ய தேவ்.
என்ன சொல்லு? என ஆர்வமாக பார்த்தாள் ரிதம்.
நடு கடலில் பெரிய கப்பலில் என தலையை கோதினான்.
ம்ம் என்ன சொல்லு டா? என ரிதம் அதட்ட..
அது ரெண்டு பேரும் சேர்ந்து.. அது how to I tell you.. it’s.. என நிறுத்தினான்.
ஓ ஹோ.. அதுவா? Ant sugar விசயமா?
What ant sugar? என சத்ய தேவ் கேட்டவன். பாத கத்தி இப்படி காஜியா மாறிட்டாலே!! இதுல மூச்சுக்கு முன்னூறு தடவை பிரிஞ்சி போறேன்னு சொல்லிட்டு திரியுறா பொய் புழுகி சக்கரையாமே மேடம்.. நான் எறும்பா மாறனுமா மவளே!! என நினைத்து கொண்டான்.
அப்புறம் மேலே சொல்லு? என ரிதம் கேட்க..
அப்படியே கெத்தா உங்க டாடி முன்னாடி வந்து நான் உங்க பொன்னை லவ் பண்றேன். அவள் தான் என்னோட எல்லாமே அப்டின்னு சொல்லணும்.. அண்ட் எல்லாரும் எதிர்க்கணும். அங்கே எல்லார் முன்னாடியும் தூக்கிட்டு போய் மேரேஜ் பண்ணனும். என்றான் சத்ய தேவ்.
ரிதமின் கண்களில் இதய வடிவ இமோஜி தெரிய வழிசல் மட்டும் தான் ஊற்றவில்லை. அப்படி பார்த்து கொண்டிருந்தாள்.
ஆனால் என நிறுத்தினான்.
என்ன? என்னாச்சு? ஏன் நிறுத்திட்ட? என ரிதம் கேட்க..
அது நான் தான் இன்னும் லவ்வே பண்ண ஸ்டார்ட் பண்ணலயே? என அவளை பார்த்தான்.
ஸ்டார்ட் பண்ணு!!
மேடம் நான் ஒண்ணு சொல்லவா?
டேய் இப்போ நீ மேடம கட் பண்ணு!! என்றாள் கோபத்துடன்..
நீங்க பையன் மாதிரி behave பண்றீங்க? என்று விட்டான்.
ஓங்கி கன்னத்தில் அறைந்தாள் ரிதம். அவளின் கையை அழுத்தி பிடித்தான் கோபத்துடன்..
வாடா வாடா என் செல்லம் வந்துட்டான்ல என் தங்கம் வந்துட்டான்ல இந்த பிடிப்பு உடும்பு பிடிப்பு என ரிதம் கைகளை பார்த்து கொண்டிருக்க..
பிளீஸ் மேடம் என பால்கனி பக்கம் சென்று விட்டான் சத்ய தேவ். சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல்..
சரி உனக்கு எப்போ feelings வருதோ அது வரை உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் போதுமா. நான் வரேன் என்று விட்டு சென்று விட்டாள் ரிதம்.
ம்ம் வந்ததுக்கு ஒரு முத்தம் லாபம் பா என சத்ய தேவ் தலையை கோதி கொண்டு படுக்கையில் விழுந்தான்.
அடுத்த நாள் ஆரவாரத்துடன் விடிந்தது. ரிதம் புறப்பட்டாள். குழந்தைகளுடன்..
எங்கே மா போற? என மகி சூர்ய தேவ் என அனைவரும் கேட்க..
மிதுனுக்கு கல்யாண வேலை இருக்குல்ல மாமி. நான் ரெண்டு வீடு தள்ளி தானே இருக்க போறேன் நீங்க பாருங்க மாமி என்றாள் ரிதம்.
அடுத்த அரை மணி நேரத்தில் ரிதமை பார்க்க வந்திருந்தான் சத்ய தேவ்.
என்னாச்சுங்க வந்துட்டீங்க? என சத்ய தேவ் கேட்க..
அங்கே இருந்தால் உன்னை பார்க்கணும்னு தோணும். உனக்கு space கொடுக்கிறேன். உனக்கா எப்போ என்னை பார்க்க தோணுதோ அன்னிக்கு வா எனக்கு பிரச்னை இல்ல என கூறிவிட்டு நகர்ந்தாள் ரிதம்.
மகன்களை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான் சத்ய தேவ். தெரிந்து கொண்டே தெரியாததை போல பெயர்களை கேட்டான். இப்படியே மூன்று மாதங்கள் ஓடி இருக்க ரிதமின் பிறந்த நாள் வந்தது.
தொடரும்.










💬 Be the first to comment