🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
117. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 117 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 6 Sep 2025
  • 458 reads
  • ☆ No ratings yet
  • 6 min read

Episode-116

பதில் சொல்லு நிலா!! என நிதின் கேட்க..

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

என்ன சொல்லணும்? என நிலா அவனை பார்த்தாள்.

நிலா உனக்கு பைத்தியமா? எதுக்கு இப்படி நடந்திட்டு இருக்க? என நிதின் கேட்டான்.

அமைதி!!

ஹே அவன் ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துகிட்டான்னு அசால்ட்டா சொல்லிட்டு நிக்கிற? நீ எதுக்கு சும்மா சும்மா நிவாஸ் பொண்டாட்டியையும் ருத்ரனயும் சேர்த்து வச்சு பேசுற? என நிதின் கோபத்தில் கேட்டான்.

தீரா இங்கிருந்து போகணும்னு நினைச்சேன். எனக்கு அந்த மீனாட்சிய பிடிக்கல!! அவள் தான் தீராவை லவ் பண்ணா!! என்னோட தீரா எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும். அவன் யாரு கூடவும் பேச கூடாது. யார் கூடவும் பழக கூடாது. தீராவுக்கு நான் மட்டும் தான் என்றாள் நிலா.

நீ அவனை நிஜமாவே!!.. என நிதின் நிறுத்தி விட்டு பார்க்க..

ஆமா!! எனக்கு தீராவை குட்டி வயசுல இருந்தே பிடிக்கும். எனக்கு தீரா மேலே பைத்தியம். என்னோட வரம் தீரா தான்.

அப்புறம் எதுக்கு அவனை எல்லார் முடின்னாடியும் அவமான படுத்தின? எதுக்கு வேலைக்காரனா கூட்டு வந்து அவனை கொடுமை படுத்தின? என நிதின் புரியாமல் கேட்டான்.

எல்லாம் உன்னால தான்!! என்றாள் நிலா சத்தமாக..

நான் என்ன பண்ணேன்?

உன்னோட எதிரிகள் தானே என்னை கடத்தி வச்சிட்டு ப்ளாக் மெயில் பண்ணாங்க. அந்த இடத்தில தீரா இல்லாமல் போயிருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன்? நினைச்சாலே கொலை நடுங்குது. இதுக்கெல்லாம் காரணம் நீ தான். எங்கே என்னால தீராவுக்கு மறுபடியும் பிரச்னை வந்திடுமோன்னு நினைச்சேன். அதான் இப்படி நடந்துகிட்டேன். என்றாள் நிலா.

நாசமா போச்சு!! என முகத்தை அழுத்தி துடைத்தான் நிதின்.

உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல. உன்னால தான் தீரா கஷ்டப்படுறார். அவரு உனக்கு வேலைக்காரரா இருக்கணுமா? இனி அவருக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னா தீராவுக்கு எந்த பிரச்னையும் வராது தானே எனக்கு அது போதும். என்றாள் நிலா.

நிதின் தனது தங்கையை வெட்டவா குத்தவா என்னும் ரீதியில் பார்த்தான். அனைத்து பிரச்சினைக்கும் ருத்ரன் குடும்பம் தான் காரணம் அவனால் தான் நமக்கும் பிரச்னை என எப்படி சொல்ல முடியும்?

நிலா கண்கள் கலங்க.. உன்னை பழி வாங்க தீவிரவாதிகள் அன்னிக்கி சக்தி அண்ணாவை உன்னோட கண்ணு முன்னாடி சுட்டாங்க. எனக்கு எல்லாமே தெரியும். நீ அரசியலில் இருக்கிறதால உன்னை சுத்தி இருக்க எல்லாருக்கும் பிரச்னை. அதான் என்னோட தீராவாவது நிம்மதியா இருக்கட்டும்னு இப்படி பண்ணேன். அது மட்டும் இல்லாம தீராவோட மனசில நான் என்னைக்கும் நுழைய முடியாது. அவர் சின்சியரா இன்னும் முன்னால் காதலிய நினைச்சிட்டு இருக்கார். என்னால அவர் கூட சந்தோஷமா வாழ முடியாது. எனக்கு வேதனையா இருக்கு என அழுதாள்.

பைத்தியம் என நினைத்து கொண்ட நிதின் வேகமாக அவ்விடத்தை விட்டு சென்றான்.

ம்ம்.. பம்.. ப்ம்ம் என வாயில் எச்சில் ஒழுக ரவுத்திரன் தன் அம்மாவை பார்க்க..

கவலை படாத செல்லம் நான் உன்னை சீக்கிரமா உங்க அப்பா கிட்ட கொண்டு போய் விடறேன். என தன் மகனிடம் கூறினாள்.

அப்பா வேண்டாம் அம்மாவும் வேண்டாம் என ஒருநாள் கூற போகிறான். அது வெகு தொலைவில் இல்லை.


மா lips எனக்கு அக்கா மா? அதை விட எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. நான் எப்டி அவளை கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு அவள் மேலே அப்படி ஒரு எண்ணமே இல்ல மா!! என சொல்லி கொண்டிருந்தான் ருத்ரன்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

உனக்காக நீ கட்டிக்க வேணாம். துகிலுக்காக கட்டிக்கோ! என்றார் விவேகா.

துகில்க்கு என்னாச்சு? அக்கா எப்படி இருக்கா? என ருத்ரன் கேட்க..

உங்க அக்கா!! என விவேகா அழுதார்.

என்னாச்சு அவளுக்கு?

அவள் பழசு எல்லாத்தையும் மறந்துட்டா!! இப்போ அவள் சைலஜாவா இருக்கா. சக்தி அவனுக்கு நாங்க வேற கல்யாணம் பண்ண சொல்லிட்டோம். நீ இதழ கட்டிட்டா துகில அப்புறம் ரவுத்திர குட்டி ரெண்டையும் இதழ் பார்த்துக்குவா! அப்புறம் நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கோங்க என்றார் விவேகா.

ருத்ரன் பெரு மூச்சுடன் தன் அன்னையை பார்த்தவன். எனக்கு நிலா தான் என்னைக்கும் பொண்டாட்டி! இந்த கல்யாணத்துக்கு என்னால ஒத்துக்க முடியாது. உங்களுக்கு துகில தான பார்த்துக்கணும். நான் என் மாப்ளைய வளர்த்துக்கிறேன் என உடனே புறப்பட்டான் ரிதமை பார்க்க..

முகமெல்லாம் வீங்கி முடியெல்லாம் சடை பிடித்து பைத்தியகாரி போல இருந்தாள் ரிதம்.

அம்மா கிட்ட வாங்க என சந்தனா துகிலை கொஞ்ச..

மாமா என அழைத்து கொண்டு வந்தான் ருத்ரன்.

சந்தனாவின் கையில் துகில் இருக்க.. நீங்க தீரா தான!! என புன்னகையுடன் கேட்டாள்.

கொடுங்க என துகிலை வாங்கி கொண்டான் ருத்ரன்.

ஹே ருத்ரன் வா வா!! என சக்தி வந்தான்.

தேவ் உங்களுக்கு காபி போடவா? என சந்தனா கேட்க..

தீரா உனக்கு? என சக்தி கேட்டான்.

ருத்ரனுக்கு தன் கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை.

டேய் உன்னை தான்? என்ன வேணும் உனக்கு? என சக்தி கேட்க..

எனக்கு துகில் வேணும். நான் அவனை கூட்டிட்டு போறேன். இனி என் மருமகனை நான் பார்த்துக்கிறேன் என கூறினான் ருத்ரன்.

என்னாச்சு? என கேட்டு கொண்டே சந்தனா வெளியே வந்தாள்.

துகில் என் மகன் உங்கிட்ட தர முடியாது என சக்தி கூற..

உங்க கிட்ட பெர்மிஷன் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் என்னோட அக்கா பையன். என கன்னத்தில் முத்தமிட்டான் ருத்ரன்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

மரியாதையா குழந்தைய கொடுத்திடு!!

முடியாது என ருத்ரன் வேகமாக சக்தியை தள்ளி விட்டான்.

டேய் என்ன பண்ற? என மகி வந்தார் அவரின் பின்னால் சூர்யா, இதழ், மிதுன் என அனைவரும் வந்தார்கள்.

துகில்க்கு நான் இருக்கேன். உங்க கீப் என் அக்கா மகனை பார்த்துக்க வேண்டிய அவசியம் இல்ல. என ருத்ரன் சொல்லி விட.. ஓங்கி கன்னத்தில் விட்டான் அரை.

சத்ய தேவ் தான் ருத்ரனை அடித்திருந்தான். எனக்கு கவலை இல்ல. போதும். என்னோட துகில் என சொல்லி நெஞ்சில் அணைத்து கொண்டான் ருத்ரன்.

ப்பா என துகில் சத்ய தேவ்வின் பக்கம் கையை நீட்ட..

டேய் மரியாதையா குழந்தைய கொடு இல்லன்னா போலீஸ்ல கம்பிளண்ட் பண்ணுவேன் என சக்தி கூற..

நானும் பண்ணுவேன் இள்ளிகளா கீப் நீங்க வச்சிருக்கிறதா சொல்லுவேன் என்றான் ருத்ரன்.

இதை கேட்டு நான் இன்னும் உயிரோட இருக்கணுமா என சந்தனா அழுதாள். தேவ் நான் போறேன் என சந்தனா நகர..

இரு சந்தனா!! என அவளின் கையை பிடித்தான் சத்ய தேவ். தேம்பி அழுதாள் சந்தனா.

நானும் அதை தான் நினைச்சேன். எனக்கும் இந்த பொண்ணு இங்கே இருக்குறதால விருப்பம் இல்ல தீரா சொல்றது சரி தான் என சூர்யா, மகி, இருவரும் கூற..

மிதுன் ஒருபடி மேலே சென்றவன். டேய் அவள் எங்க முன்னாடியே உன்னை பெட்ரூமில் பண்றது எல்லாத்தையும் பண்றா? யாரு இவள்? B* மாதிரி. அவளை வீட்டை விட்டு இப்போவே அனுப்பு என்றான்.

அவள் எங்கேயும் போக மாட்டாள். என்னையும் அவளையும் சேர்த்து வச்சு பேசுறீங்களா? இதுக்காவே அவளை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் என அனைவரின் முன்னும் தோல் மேல் கைகளை போட்டான் சத்ய தேவ்.

சந்தனா அழுத முகத்துடன் பார்த்தாள். நீ அழாத சந்தனா! இத்தனை நாள் யோசிச்சேன். இனி யோசிக்க என்ன இருக்கு? எல்லாரும் பேசுற விடயத்தை நம்ம உண்மையாகலாம் என்றான் சத்ய தேவ்.

துகிலை தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ருத்ரன்.

இதோ ஒரு வாரத்தில் சத்ய தேவ் மற்றும் சந்தனா இருவருக்கும் திருமணம் நடந்தது. இதோ மூன்று மாதங்கள் ஆகியிருந்த நிலையில் வீட்டில் புதிய வரவு வர ஏற்பாடுகள் நடந்தது.

சத்ய தேவ்வின் குழந்தை.

தொடரும்..

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!