Episode -18
உனக்கு எத்தனை தடவை போன் பண்றது? ஏன் டா போன் எடுக்கல? என ஹரிணி கோபத்துடன் வந்து நிற்க.. சத்ய தேவ் அதிர்ச்சியுடன் மேடையை பார்த்தான்.
ஹரிணி அவனது பார்வை சென்ற இடத்தை பார்த்துக்கொண்டே, “நிலா தான் எனக்கே சொன்னாள். இந்த பொண்ணை தான் ருத்ரன் லவ் பண்ணானாமே! ஆனால் இவள் எப்படி இங்கே நிவாஸ் கூடன்னு தெரியல! நேத்தே இதை சொல்ல தான் கால் பண்ணேன். ஆனால் நீ எடுக்கல டா!”
சத்ய தேவ் நெற்றியை தடவியவன் போனை பார்க்க, ச்ச சாரி அத்தை நான் வந்துட்டேன் ஒருநிமிடம் உள்ளே வரேன். என மாமியாரின் காலை கட் செய்தான்.
“என்ன டா பண்றது இப்போ?” என ஹரிணி பதட்டத்துடன் பார்த்தாள்.
எது நடக்குதோ அது நன்மைக்கு ன்னுனு நினைச்சுக்கோ! இது இப்படி தான் முடியும்னு எழுதி இருக்கு.
“அய்யடா! அதை உன் தங்கச்சி கிட்ட சொல்லிடு! ருத்ரன் காதலில் அவள் தீவிரமா இருக்கா! இவளை ஏற்கனவே ருத்ரன் கூட நாட்டியாலயாவில் பார்த்திருக்காலாம். ருத்ரன் தீவிரமா இந்த பொண்ணை லவ் பண்ணத பத்தி அவள் தான் என் கிட்ட சொன்னா! இவளை ருத்ரன் கூட சேர்த்து வைக்கிற முனைப்பில் இருக்கா!” என்றாள் ஹரிணி.
நிலா எங்கே? என உடனே கிளம்பினான் சத்ய தேவ்.
“நிலா மா!”
“அண்ணா நீ வந்துட்டியா? என்னை இவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்றாங்க.”
“மாப்பிள்ளை யாரு?”
எனக்கு எதுவும் தெரியாது. முதலில் என்னை இங்க இருந்து தயவு செஞ்சு கூட்டிட்டு போயிடு. ஒரு நிமிசம் கூட இவங்க கூட என்னால இருக்க முடியாது. எனக்கு எதுவும் வேணாம். என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதையும் மீறி எதுவும் நடந்தால் நான் என்னோட உயிரை.. என நிலா சொல்லவர..
“பாப்பா என்ன பேச்சு இது? நீ கம்முன்னு இரு! நான் எதுக்கு இருக்கேன்? நீ கவலை படாதே! அண்ணன் இருக்கேன்! உங்க டாடி எங்கே?”
“டாடிய என்கிட்ட பேச விட மாட்டாங்க! நான் எனக்கு.. எனக்கு அழுகையா வருது அண்ணா! எனக்கு ஏற்கனவே நடந்த விசயங்களை மறக்க முடியல” என கதறி அழுதாள் நிலா.
சரி சரி டென்ஷன் வேணாம். ஜஸ்ட் ரிலாக்ஸ் பேபி! நீ அண்ணா சொல்றத கேளு! என்னை தாண்டி தான் எவனா இருந்தாலும் உன் கழுத்தில் தாலி காட்டமுடியும். பிராமிஸ் பண்றேன் நான் உனக்கு. நீ தைரியமா இரு நான் உங்க டாடிக்கிட்ட பேசிட்டு வரேன். இப்போதைக்கு எந்த பிரச்னையும் பண்ணாம அண்ணனுக்காக… கொஞ்சம் பொறுமையா இதை ஏத்துக்க..
அண்ணா என கேவி கேவி அழுதபடி பார்த்தாள் நிலா.
தங்கம் இல்ல டா அழ கூடாது. எனக்கு தெரியும் பொண்ணு! உன்னோட கஷ்டம் என்னன்னு! நான் அப்படியெல்லாம் விட்டுற மாட்டேன். என்றவன் சமாதானம் செய்து அழைத்து வந்தான்.
ஹரிணி வெளியே காத்துக்கொண்டிருக்க, இவளை பார்த்துக்கோ ஹரிணி என சத்யதேவ் விலக..
“அண்ணா முக்கியமான விசயம்?”
சத்ய தேவ் அமைதியாக பார்க்க, அண்ணா அது நிவாஸ் அண்ணாவுக்கு அந்த பொண்ணு அவங்க…
“கொஞ்சமாவது சுயநலமா இரு டா நிலா!”
நிலா தலையை குனிந்துகொண்டாள். எதுவும் பேசவில்லை.
நீ ஆயிரம் நல்லது பண்ணாலும் ருத்ரன் உன்னை எதிரி மாதிரி பார்க்கிறான். அதனாலே அவனை பத்தி நீ நினைக்காத! இப்படி தான் நடக்கும்னு எழுதி இருக்கு. அதனாலே நடக்குது. நீ உன்னை பத்தி நினை என்றுவிட்டு நகர்ந்தான்.
நிதின் பிரகாஷ் அனைவரையும் உபசரித்து கொண்டிருக்க, அருகில் சென்றான் சத்ய தேவ்.
சார் என அங்கிருக்கும் ஆபிசர்கள் அனைவரும் சல்யூட் வைத்தார்கள்.
நிதின் உடனே பார்வையை திருப்பிக்கொள்ள, நீ என்ன பைத்தியக்கார தனம் பண்ணிட்டு இருக்கேன்னு புரியுதா க*** என கெட்ட வார்த்தையில் திட்டினான்.
பிளீஸ் எனக்கு வேலை இருக்கு அப்புறம் பேசலாம் கொஞ்சம் நகரு என தள்ளி சென்றான் நிதின்.
“லிசன் நிதின் உன்னால என் கிட்ட இப்படி எல்லாத்துக்கும் விளக்கம் கொடுக்க முடியுமா முடியாதா? நிலாவ பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா?”
என் தங்கச்சி இருக்க நிலையை யோசிச்சு பார்த்திட்டு தான் இந்த முடிவுக்கு வந்தேன். அதே போல மாப்பிள்ளை சாதாரண ஆள் இல்ல. அகிலேஷ் அவரும் டாக்டர் தான். நிலாவ பத்தி முழு விவரமும் அவருக்கு தெரியும் சொல்லிட்டேன். அவரும் இதை பெருசா எதுக்கல இந்த காலத்தில் இது சாதாரணம்ன்னு சொல்லிட்டார். என் தங்கச்சி போட்டோவை பார்த்ததும் பிடிச்சு போச்சு. இப்போ அப்படி தான் இருக்கும் கல்யாணம் பண்ணிக்கிட்டா சரியா போயிடும். என்றான்.
“இது SPR க்கு தெரியுமா?”
எங்க அப்பாவுக்கு இதுல விருப்பம் தான். நீ பிரச்னை பண்ணாத உன்னோட வேலையை பார்த்திட்டு போ! என நிதின் கூற..
மாப்பிள்ளை பத்தி சொல்லு நான் விசாரிக்கனும். அவள் எனக்கும் தங்கச்சி தான் என போட்டு வாங்கினான் சத்ய தேவ்.
அந்த கவலை உனக்கு வேணாம் சத்ய தேவ். ஏன்னா மாப்பிள்ளை அகிலேஷ் அப்புறம் நிவாஸ் ரெண்டு பேரும் ஸ்கூல் மேட். அப்போ இருந்தே மாப்பிள்ளைக்கு நிலாவை பிடிக்கும். என்றான் நிதின்.
சத்ய தேவ் ஆழ்ந்து பார்த்தான். நிதின் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான். நிலா தன் அண்ணன் எப்படியும் தன்னை காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தாள். அது நடக்கவில்லை எனில் தாலி ஏறும் முன் உயிரை மாய்த்து கொள்ள வேண்டும். இப்போதைக்கு நிச்சயம் தானே நடக்கிறது என அதை கூட அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.
அதன் பின் சத்யதேவ் நேராக சென்ற இடம் தன் மாமியார் விவேகாவை பார்க்கத்தான். “என்ன பண்றது ஒன்னும் புரியல சத்தி” என மாமியார் வருத்தத்துடன் கூறினார்.
அத்தை இதை யார் கிட்டயும் சொல்ல வேணாம். சொல்லபோனால் இதை இங்கேயே மறந்துட்டு போறது தான் நல்லது.
என்ன சொல்ற? என் பையன் இவளை நினைச்சு 4 வருசம் பைத்தியக்காரன் போல இருக்கான் டா! இன்னும் அதில் இருந்து வெளியே வரல சக்தி என ஆதங்கத்தில் பேசினார் விவேகா.
“நீங்களே பார்த்திட்டு தானே இருக்கீங்க? அந்த பொண்ணு கட்டாயத்திலா நிக்கிரா? விருப்பப்பட்டு நிக்கிறா? அப்போ அதுக்கு அர்த்தம் என்னன்னு நான் சொல்லி தான் நீங்க தெரிஞ்சுக்கனுமா?”
விவேகா நம்ப இயலாமல் உனக்கு உன்னோட பெரியம்மா பசங்க வாழ்க்கை தானே முக்கியம். என் பையன் எப்படி போனால் என்ன! நான் ஏன் இதை உன்கிட்ட சொல்லணும். முதலில் இங்கே எனக்கு நிக்க பிடிக்கல! என் தீரன் என மகனை நினைத்துக் கொண்டு கிளம்பினார்.
சத்ய தேவ் ஒரு பெருமூச்சை விட்டபடி தன் மாமனார் இன்பாவுக்கு அழைத்து எளிமையாக விவரத்தை கூறினான்.
இன்பா அதிர்ச்சியுடன் இருக்க, மாமா நீங்களும் மொத்தமா என் தலையில் போடாதீங்க சொல்றத சரியா செய்யுங்க அத்தை வராங்க சமாலிங்க என போனை வைத்தான்.
அடுத்ததாக சத்ய தேவ் சென்றது கண்மணி என்னும் பெயரில் இருக்கும் மீனாட்சியை பார்க்க..
தங்க மீனாட்சியா? முத்து மீனாட்சியா?
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
