Episode-29
நிலா இங்கே அத்தை கிட்ட வா! என விவேகா அவளை அழைக்க.. ருத்ரன் எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு பக்கம் நின்று போனை நோண்டி கொண்டிருந்தான் கேசுவலாக..
ம்ம் நீ எதை பத்தியும் கவலை படாத! பயப்பட வேணாம். சின்ன வயசில இருந்து மகி அக்கா வீட்ல உன்னை நான் பார்க்கிறேன். நீ சின்ன குழந்தையா இருக்கும் போது ருத்ரன் எட்டி எட்டி பார்ப்பான். உன்னோட காலை தொட்டு பார்ப்பான். கைய பிடிப்பேன். அக்கா உங்களுக்கு நியாபகம் இருக்கா என தேஜூவை பார்த்தார் விவேகா.
ருத்ரன் ஒரு வித அதிர்ச்சியுடன் தன் அன்னையின் அருகில் சென்றவன். மா தேவையில்லாத சீன் கிரியேட் பண்ணாத விவேகா! அதான் நான் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேனே! இப்போ எதுக்கு என்னை அவள் கூட சேர்த்து வச்சு பேசுற? நீஇஇஇ! என பற்களை கடித்தான்.
டேய் தீரா! நான் பொய் சொல்லல! உன்னோட மாமிய கேளு! அக்கா சொல்லுங்க இவன் என் கிட்ட சண்டைக்கு வரான். நீ தான் டா குட்டி பாப்பா! குட்டி பாப்பான்னு சுத்துவ! அந்த போட்டோஸ் கூட இருக்கு! மகி அக்கா வீடியோ எடுத்து வச்சிருக்காங்க.
தேஜு சிரித்தபடி “ஆமா ருத்ரன் மாப்பிள்ளை ! நிலா பக்கத்துல நீங்க வந்தாலே நிவாஸ் வந்து என் பாப்பா! என்னோட பாப்பான்னு சொல்லி சண்டை போடுவான். அதுக்கு அப்புறம் விவரம் தெரிய ஆரம்பிச்சதும் ஆள் ஆளுக்கு ஸ்கூல் போயி சேர்ந்ததும் பேசுறது குறைஞ்சு சண்டை வேற மாதிரி வந்திடுச்சு என கூறினார்.
ஆமா கா! என விவேகா புன்னகையுடன் கூற..
ருத்ரனும் நீங்களும் தான் விளையாடுவீங்க. நிலா உன்னை விட்டு ருத்ரன் ஒரு நிமிசம் கூட பிரிய மாட்டான் தெரியுமா? இதோ வீடியோஸ் என்கிட்ட கூட இருக்கு. மெயிலில் வச்சிருக்கேன். என தேஜு போனை நோண்டினார்.
கண்மணி கைகளை இறுக்கி மடக்கியபடி பார்த்து கொண்டிருக்க, மா போலாம். என ருத்ரனுக்கு அதற்கு மேல் நிற்க பிடிக்க வில்லை அந்த இடத்தில்..
அக்கா எனக்கு சேர் பண்ணுங்க நான் பார்த்துக்கிறேன். என விவேகா சொல்ல..
உன்னோட வாட்ஸ் அப் நம்பர்க்கு அனுப்பவா?
“இல்ல ஃபேமிலி க்ரூப்ல போடுங்க”
ருத்ரன் நிலை இல்லாமல் தள்ளாடி தவித்தான். நெவர் அய்யோ இருக்காது. இந்த அம்மா வேற ஃபேமிலி க்ருப்ல போடுங்கன்னு சொல்லிட்டாங்க. அய்யோ தூரி பார்த்தால் என்ன ஆகும்? இதழ் பார்த்தால் என்னை கிண்டல் பண்ணுவா! அய்யோ இவளை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சா இனியா ஓட்டுவா! அய்யோ நான் போய் இவள் பின்னாடி சுத்தி இருப்பேனா? சான்சே இல்ல. அவளே ஒரு ஏமாத்துகாரி! எதோ எடிட்டிங் ஒர்க் பண்ணிருப்பாங்க. இந்த ருத்ரன் எப்போவும் இவள் பின்னாடி போகவே மாட்டான். அப்படி ஒன்னு நடந்திருக்காது என தனக்கு தானே சொல்லி கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
இந்த வீக் வீட்டுக்கு வாங்க வீடு வாசல் பார்க்கும் சாங்கியம் பண்ணிடலாம். என விவேகா சொல்லி விட்டு சென்றார்.
மாமா நீங்க முன்னாடி போங்க நான் வரேன். என சத்ய தேவ் அனைவரையும் அனுப்பி வைக்க..
இன்பா கையெடுத்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றார். அவர்கள் சென்ற அடுத்த நொடி! நிலா சத்ய தேவ்வின் அருகில் வந்தவள். அண்ணா நீயும் என்னை புரிஞ்சுக்கல இல்ல. உன்னை தானே நான் மலை போல நம்பி இருந்தேன். எவனோ ஒருத்தன் என்னை சீரழிச்சிட்டு போயிட்டான். என்னால நான் அவருக்கு தகுதி இல்லாதவள். பிளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லு என அழுதாள் நிலா.
ருத்ரனுக்கு இங்கே புரை ஏறியது. அவன் இரும்ப..
யாரோ உன்னை திட்றாங்க தீரா! தண்ணி குடி என விவேகா தன் மகனின் தலையை தடவி விட்டார்.
அந்த நிவாஸ் கிறுக்கனா தான் இருக்கும். நான் யாருன்னு இனி அவங்களுக்கு தெரியும். காட்டுவேன் என தனக்கு தானே சொல்லி கொண்டான்.
**
நான் சொல்றத கேளு நிலா! நீ ருத்ரனை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும். அதுல எந்த மாற்றமும் இல்ல. உன்னோட வாழ்க்கை எனக்கு முக்கியம். நீ அவனை கட்டுகிட்டா என் கண்ணு முன்னாடி இருப்பா! என்னை மீறி அவன் எதுவும் செய்ய மாட்டான். என் பேச்சை கேட்பான். நீ இங்கே இருக்கிறத விட அங்கே உன்னை விவேகா அத்தை நல்லா பார்த்துக்குவாங்க. இது தான் என்னோட முடிவு. என்றான் சத்ய தேவ்.
அண்ணா நான் கெட்டு!
பாப்பா சும்மா சும்மா எதுக்கு சொல்ற? அதை பத்தி! உனக்கு நடந்தது பெரிய விஸ்யம் இல்ல. நம்ம 1950 ல இல்ல. இது 2030 இது பெரிய இஸ்யூ இல்ல. நீ இஸ்யூ ஆக்காத என்றவன். Sp யிடம் பேச வர..
நிலா அழுத படி அவ்விடத்தை விட்டு சென்று விட்டாள். ஹரிணி மெதுவாக வயிற்றை நீவி கொண்டு நேராக நிலாவின் அறை பக்கம் சென்றாள்.
பெரிப்பா! தேஜு மா! கொஞ்சம் சொல்லி புரிய வைங்க தயவு செஞ்சு நிலா விசயத்தை யார் கிட்டயும் சொல்ல வேணாம். யாருக்கும் தெரிய வேணாம். இந்த கல்யாணம் நல்ல படியா முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கு தேதி fix பண்ணிட்டு சொல்லுங்க என சத்ய தேவ் கூற..
முதல்ல ஹரிணி – நிதின் சீமந்தம் முடியட்டும் அதுக்கு பிறகு கல்யாண தேதிய ஃபிக்ஸ் பன்னிப்போம். என தேஜு கூறினார்.
சரிங்க தேஜு மா! அவளை பார்த்துக்கோங்க! என்றவன் நிதினை பார்த்து ஒரு சின்ன தலை அசைப்புடன் நகர்ந்தான்.
சத்ய தேவ் என அழைத்த sp அவனை கட்டியணைத்து. எனக்கு சந்தோசமா இருக்கு. உன்னால தான் நிலாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது என கண்களில் நீர் கோர்க்க கூறினார்.
நிவாஸ் இதையெல்லாம் பார்க்க பிடிக்காமல் அவ்விடத்தை விட்டு செல்ல.. அவனை பின் தொடர்ந்து கண்மணி சென்றாள்.
மாமா எப்போ வரீங்க என செய்தியை அனுப்பிய படி பெப்ஸி டின் ஓபன் செய்தான் ருத்ரன்.
ருத்திரனின் கையில் இருக்கும் டின்நை பிடுங்கிய இன்பா ஒரு மிடுக்கு குடித்து பார்க்க.. எதுக்கு என் கையில் இருந்து இப்படி பிடுங்கி குடிக்கிரீங்க! மா இவருக்கு என்ன பழக்கம்? என முகத்தை சுளித்தான்.
இது வெறும் பெப்சியா இல்ல சரக்கு கலந்த பெப்சி தூக்கலா அப்டின்னு செக் பண்ண தான் குடிச்சேன் டா குடிகாரா! என்றார்.
தேவையில்லாம பேசுறீங்க என ருத்ரன் ஒரு மிடுக்கு குடித்து கொண்டிருக்க.. அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான் சத்ய தேவ்.
இங்கே கண்மணி தன் ஆருயிர் காதலன் பின்னால் சென்றாள். நிவா! நிவா! உங்களை தான் நில்லுங்கோ என மூச்சு வாங்கியவள்.
ஸ்ஸ்ஸ் ஹா பிரானம் போறது என கத்தினாள். என்னாச்சு என கேட்டபடி நிவா உடனே வேகமாக அவளின் அருகில் வந்தான்.
நிவாஸ் – கண்மணி
ருத்ரன் – நிலா
தொடரும்..
do like and share pradhanyakuzhalinovels
