Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -33

அட கண்மணி ஏன் அங்கேயே நின்னுட்ட வாமா! என ஹரிணி அழைக்க.. 

நிலா சட்டென திரும்பி பின்னால் பார்த்தாள்.  கண்மணி நிலாவை பார்த்துக்கொண்டே வந்தாள். நேற்று இரவு அவ்வளவு சொல்லியும் இன்று அவனிடம் போன் பேசி கொண்டிருக்கிறாளே! அப்போ இதில் இருந்து என்ன தெரிகிறது? நான் பேசியது எதையும் அவள் காதில் போட்டு கொள்ளவில்லை. என உள்ளுக்குள் கோபம் ஏற்பட்டது. 

உன் பக்கத்தில் யாரு இருக்காங்க? என ருத்ரனின் குரலில் சுய நினைவுக்கு வந்தாள் நிலா. 

“மண்ணி இருக்காங்க!”

இன்னிக்கி என்ன ஸ்பெஷல்? என ருத்ரன் கேட்க.. திகைத்து விழித்தாள் நிலா. 

ஹரிணி அவளின் முக பாவனையை பார்த்தபடி, சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன். ருத்ரன் கிட்ட நீயும் பேசினதில்லை. அவனும் உன்கிட்ட பேச மாட்டான். ஆனால் இன்னிக்கு அவன் கால் பண்றத பார்த்தால் எதோ கனவில் நடக்கிற மாதிரி இருக்கு என்றாள் புன்னகையுடன். 

ஹரிணி அக்கா கிட்ட போனை கொடு என ருத்ரன் கூற..  மண்ணி உங்க கிட்ட அவர் பேசனுமாம் என நிலா போனை நீட்டினாள். கண்மணிக்கு அங்கு நிற்க துளி கூட பிடிக்கவில்லை. 

ஹரிணி சிறிது நேரம் பேசிவிட்டு நிலாவிடம் போனை கொடுக்க.. நீங்களே கட் பண்ணிடுங்க என கூற… ஹரிணி கட் செய்த அடுத்த நொடி ருத்ரன் அழைத்து விட்டான். 

கண்மணி கைகளை இறுக்கி மடக்கிய படி அவ்விடத்தில் அமர்ந்திருக்க.. தயக்கத்துடன் போனை அட்டன் செய்தாள் நிலா. 

இது நிஜமாவே தீரா தானா? என ஹரிணி வாய்மொழியாக கூற… 

கண்மணி மனதுக்குள் நினைத்தாள். இவளை தானே நான்கு வருடங்களுக்கு முன்பு பிடிக்காது என கூறினான். இன்று இன்று அவளுடன் போனில் பேசுகிறான். விடாப்பிடியாக அவளை கல்யாணம் செய்து கொள்ள ஒற்றை காலில் நிற்கிறான். என தோன்றியது. 

நிலா போனை பார்க்க, என்னடி போனை பார்க்கிற? எடுத்து பேசு! என்றாள் ஹரிணி. 

அது அது வந்து என நிலா தயங்கினாள். 

நீ எடுத்து பேசலன்னா கிளம்பி கூட வந்திடுவான். என ஹரிணி சிரித்து கொண்டே கூற அவ்விடத்தை விட்டு போனை எடுத்து கொண்டு சென்றாள் நிலா. 

“போன் எடுக்க இத்தனை நேரமா? என்ன பண்ண இவ்வளவு நேரமா?” என ருத்ரன் கடுமையாக கேட்க.. அது அதுவந்து எல்லாரும் என்னைய ஒரு மாதிரி பார்க்கிறாங்க! அண்ணி என்னை கிண்டல் பண்றாங்க என்றாள் நிலா. 

“உன்கிட்ட என்ன சொன்னேன்? எது நடந்தாலும் நீ போனை வைக்கவே கூடாதுன்னு சொல்றேன் தான”

சரி தான்! இப்போ சக்தி அண்ணா கால் பண்ணா என்ன பண்ணட்டும்? என நிலா கேட்க…

உன்கிட்ட கேட்கணும்ன்னு இருந்தேன். உனக்கு தான் ரெண்டு அண்ணா இருக்கானுங்களே! எதுக்கு எங்க மாமா கிட்ட அப்படியே பாசம் வழிந்து ஊத்துற போல சீன் போடுற? உன்னால இதழ் ( சத்ய தேவ்வின் தங்கை) எட்ட நிக்கிறா! நீ பெரிய அதிசயமா டி! என்றான் ருத்ரன். 

நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். இது என்ன கேள்வி? இவனுக்கு இதெல்லாம் பொறாமையா? ஏன் இப்படி இருக்கிறான்? என தோன்றியது அவளுக்கு. 

ஹே லைனில் இருக்கியா? என ருத்ரன் கேட்க.. 

“ம்ம் சொல்லுங்க!”

“என் கூட வரும்போது நான்வெஜ் சாப்பிடணும் நீ!”

என்ன? என நிலா அதிர்ச்சியுடன் கேட்க.. 

காது கேட்கலயா? இந்த மண்ணி, அத்திம்பேர், ஏன்னா, வான்னா, போங்கோ இதெல்லாம் இங்கே என்னோட காதுல விழவே கூடாது. நீ நாண்வெஜ் சாப்பிடுற அவ்ளோ தான். எனக்கு ஏத்த மாதிரி நீ மாறனும். என்றான் ருத்ரன். 

நிலா அமைதியாக இருக்க.. ஹே என்ன டி வாயில் கொழுக்கட்டை வச்சிருக்கியா? என ருத்ரன் அதட்ட.. 

ச..  சரி என ஒற்றை வார்த்தையில் முடித்தாள். 

ஒரு சில நொடிகளுக்கு பிறகு, சரி நீ சத்ய தேவ் மாமா கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ற என்று விட்டு போனை கட் செய்தான்.

நிலா பெரு மூச்சுடன் நேராக உணவு மேஜைக்கு சென்றாள். கண்மணி அவளை கண்டு கொள்ளாமல் நகர.. அண்ணி! என நிலா முன்னால் சென்று நின்றாள். 

அண்ணி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். என நிலா நேராக கண்மணியின் முன் நிற்க, சொல்லுங்க நிலா! என்ன விசயம்? என கேட்டாள். 

அண்ணி நீங்க என் மேலே கோபமா இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். ஆனால் என்னால..என நிலா பேச வர அதற்குள் நிலாவின் போன் அலறியது. 

அவனே தான்! ருத்ரன். 

நிலாவின் முகம் சட்டென மாற.. வேகமாக போனை எடுத்தாள். 

ஒரு நிமிசம் என்ற கண்மணி, போன் கால் ரொம்ப செயற்கையா இருக்கு. நீ தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிற மாதிரி எனக்கு தெரியுது. நீ அவர்க்கு மட்டும் தங்கை இல்ல. எனக்கும்.. நானும் உன்னை என்னோட தங்கையா தான் பார்த்தேன். அந்த அக்கரையில் தான் சொன்னேன். இனி உன்னோட இஷ்டம் என்று  அவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். 

அது நிலாவுக்கும் தெரியுமே! அதனால் அவள் அமைதியாக இருக்க… ரிங் தொடர்ந்து வரும் சத்தம் கேட்டது. சட்டென போனை பார்த்தாள். அவனே தான் ருத்ரன். நடிகர் திலகத்தை மிஞ்சிட்டார் என்று உதட்டில் கசந்த புன்னகையுடன் போனை அட்டன் செய்தாள். 

“நீ சத்ய தேவ் மாமா கிட்ட பேசவே இல்ல சரி தானே!” என எடுத்ததும் கோபத்துடன் ஒலித்தது அந்த குரல்… 

அது அது வந்து நான் பேச போனபோது கண்மணி என்கிட்ட பேச வந்தாங்க. அதான் அண்ணனுக்கு நான் கால் பண்ணல என கூறினாள் நிலா. 

கெட்டதை தான் சொல்லி கொடுத்திருப்பா! என்று நினைத்தவன். சொல்லு என்ன சொன்னாங்க உங்க கண்மணி அண்ணி! என கேட்டான்.

“ஒன்னுமில்லை பொதுவா பேசிட்டு இருந்தோம்.”

இன்னொரு முக்கியமான விசயம். ஹரிணி அக்கா கூட எப்போவும் போல நீ இரு எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் உன்னோட ரெண்டாவது அண்ணன் அண்ணி ரெண்டு பேர் கிட்ட இருந்தும் கொஞ்சம் தள்ளி இரு. 

என்னாச்சு? 

“எனக்கு பிடிக்கல. எனக்கு பிடிக்காத விசயத்தை நீ எப்போவும் செய்ய கூடாது. புரியுதா?” என ருத்ரன் காட்டமாக கூறினான்.

-அமைதி நிலவியது –

ஹே ம்ம் கொட்டு இல்ல பதில் சொல்லு. அமைதியா இருந்தால் என்ன டி அர்த்தம் என்று அதட்டலுடன் கேட்டான். 

ம்ம் என விம்மி கொண்டு பதில் கூறினாள். 

“சாப்பிட்டியா?”

“இல்ல”

“போய் சாப்பிடு!”

“போனை வைக்கவா?”

“சரி வச்சிரு” என்றவன் அடுத்த நொடி நான் நேர்ல வரேன் என்றான். 

இல்ல வேணாம் நான் போன் வைக்கல என உணவு மேஜைக்கு சென்றவள். அப்படியே சாப்பிட்டாள். 

எங்கே இருக்க? என்ன பண்ற? என இப்படியே நாண் ஸ்டாப் பேச்சுக்கள். அவளை சுற்றியது. ஒரு நொடி கூட அவளை விடவில்லை ருத்ரன். 

அப்படியே இரண்டு நாட்கள் ஓடியது. வீட்டீய் வந்தான் ருத்ரன். 

சொல்லுங்க மாப்பிள்ளை! என spr புன்னகையுடன் அழைக்க.. நிதின் எதுவும் பேசாமல் முறைத்த படி நின்றிருந்தான். 

நிதின், நிவாஸ் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கார் என spr இருவரையும் அதட்ட.. 

வாங்க என வேண்டா வெறுப்பாக இருவரும் அழைத்தார்கள். 

தேஜூ வந்த அடுத்த நொடி அனைவரையும் பார்த்தவன். முகூர்த்த புடவை எடுக்கணும். அதான் அம்மா சொல்லி விட்டாங்க. எப்போ வரீங்க? என கேட்டான். 

எங்க வீட்டுக்கே புடவை வரும். அப்படி ஒரு குடும்பத்தில் தான் என்னோட தங்கச்சிக்கு வரன் வரும்ன்னு பார்த்தேன். என்றான் நிவாஸ். 

நீங்க நினைக்கிற மாதிரி! உங்களை மாதிரி பெரிய பணக்காரன் நான் இல்ல. எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. இணை ஏற்பு விழா பண்ணிக்க தான் இஷ்டம். இதுக்கு எல்லாம் அதிகமா செலவு பண்ண எனக்கு உடன்பாடு இல்ல. என்றான் ருத்ரன். 

நிவாஸ் என spr அதட்டலுடன் அழைக்க.. எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். 

சரிங்க மாப்பிள்ளை நீங்க சொன்ன மாதிரி கடையிலேயே நம்ம முகூர்த்த புடவை வாங்கிக்கலாம். என்றார் spr. .

அப்போ சரி மாமா! என நகர்ந்தவன் சட்டென திரும்பி, நான் நிலாவை பார்க்கணும் என கேட்டான். ..

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.