🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
61. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 61 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 19 Jul 2025
  • 533 reads
  • ☆ No ratings yet
  • 7 min read

Episode-60

நிலாவின் தேம்பலை பார்த்த சத்ய தேவ் தன் தங்கையின் அருகில் சென்று வேண்டாம் வேண்டாம்னு சொன்னவன் பிரிஞ்சி போறான்னு அழுகையா பாப்பா? என பார்த்தான். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

சட்டென கண்களை துடைத்து கொண்டாள் நிலா. 

எப்படி  கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆகுது? அதுக்குள்ள இத்தனை மாற்றமா? என் மாப்பிள்ளை மாத்திட்டானா? இல்ல என் தங்கச்சி? என நிலாவை பார்த்தான். 

“அன் அண்ணா அப்படி எல்லாம் இல்லை”

“Something is fisy” என சத்ய தேவ் சிரிக்க..

அண்ணி எப்டி இருக்காங்க? என நிலா பேச்சை மாற்றினாள். 

உன் அண்ணி நல்லாருக்கா அதை விடு! ஒரு மாசமா மேடம் என்னை பத்தி நினைக்கவே இல்ல. ஒரு போன் கால்ஸ் இல்ல. அதை விட உன் புருஷன் ம்ம் ஹிம்! நீ அவனை மாத்தினயா? இல்ல அவன் உன்னை மாத்திட்டானா? என சத்ய தேவ் அவளை திட்டமாக பார்த்தான். 

அப் அப்படியெல்லாம் இல்ல அண்ணா. அது ப்ரெக்னன்சி மூட் ஸ்விங்கி. வேற ஒன்னுமில்லை. வாங்க போலாம் என நிலா நடையிட்டாள். 

“நிலா ஒரு நிமிசம் உண்மைய சொல்லு! உனக்கு ருத்ரனை பிடிக்கும் தான!!”

நிலாவின் முகம் குப்பென வியர்த்தது. 

நீ யாரு கிட்ட வேணாலும் மறைக்கலாம். ஆனால் என் கிட்ட மறைக்க முடியாது. சொல்லு! நீ அவனை விரும்புற! அது கொஞ்ச நாள் நேசமில்லைன்னு எனக்கு தெரியும். நீண்ட நாள் நேசம். சரியா என அவள் முன் வந்து நின்றான். 

நிலா எதுவும் பேசாமல் மவுனமாக இருக்க.. இல்ல பொயின்னு சொல்லு! நான் இதை பத்தி இனி கேட்க மாட்டேன் என்றான் சத்ய தேவ். 

சத்தியமா பொய்யில்லை! உண்மை அண்ணா! சக்தி அண்ணா என அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் மூச்சு முட்ட.. 

பாப்பா!! இப்போ எதுக்கு அழற? பாப்பா!! குட்டி மா!! இங்கே பாரு! அழாத பொண்ணு என அவளின் முகத்தை நிமிர்த்தி கண்ணை துடைத்து விட்டான். அனைவரும் முன்னால் சென்று விட.. 

ரிதம் விடாமல் அழைத்தாள் பார்க்கிங்கில் இருந்து.. 

உன் அப்பா கூட போ என சத்ய தேவ் போனில் கூற.. 

இல்ல நானே!! என ரிதம் சொல்ல வர.. 

காலையும் கையையும் வெட்டி வீசுவென் சொல்றத கேளு உங்க அப்பா கூட போ! ஆல்ரெடி நான் பேசிட்டேன். போ நான் நிலாவை கூட்டிட்டு வரேன். என கட் செய்தான் சத்ய தேவ். 

இன்பா தன் மகளுக்காக காத்திருக்க.. வந்துட்டா உன் பொண்ணு என விவேகா கூறி விட்டு முகத்தை திருப்பி கொண்டார். 

ரிதம் எதுவும் பேசாமல் காரில் ஏறினாள். விவேகா அவளை வசை பாட ஆரம்பிக்க.. விவேகா வாய மூடுல உன்னை இறக்கி விட்டுடுவென் என்றார் இன்பா. 

நீ மாறிட்ட என்னை ஏமாத்திட்ட என் அம்மா வீட்டுக்கு போறேன் நான்!! என விவேகா முனுமுனுத்தபடி பேசி கொண்டே வந்தார். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

***

நிலா கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே எனக்கு புடிக்கும் தீராவை ரொம்ப பிடிக்கும். எனக்கு தீரா வரம் மாதிரி! அவரோட பார்வை என் மேலே படாதான்னு ஏங்கி இருக்கேன்? ஏன் என்னை தீராவுக்கு புடிக்கலன்னு ஆயிரம் கேள்வி. தீரா பொண்டாட்டி நான்னு இப்போ கூட நம்ப முடியல என்றாள் மனம் விட்டு. 

சத்ய தேவ் சின்ன புன்னகையுடன் ஓ அதனாலே தான் மேடம் தேவ் gang ல இருந்தீங்களா!! 

அண்ணா!! என கோபத்தில் பார்த்தவள். 

அவரை பிடிக்க காரணமே நீ தான்!! என நிறுத்தினாள். 

“நானா? நான் என்ன பண்ணேன்?” என சத்ய தேவ் கேட்க.. 

நிலா பெரு மூச்சை விட்டபடி சின்ன வயசுல எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நிவாஸ் அண்ணாவும் நிதின் அண்ணாவும் என் கூட பேசவும் மாட்டாங்க விளையாடவும் மாட்டாங்க.   நிதின் அண்ணாவுக்கு என்னை பிடிக்காது. அதுக்கு காரணம். நான் பிறந்ததில் இருந்து நாண்ணா என்னை தான் என் மேலே தான் பாசமா இருப்பாராம். நிவாஸ் அண்ணனுக்கு நிதின் அண்ணா தான் உயிர்!.. அப்பா சொல்லிருக்காராம் என்னை பத்திரமா பார்த்துக்க சொல்லி அதனாலயே எல்லா இடத்திலயும் மிரட்டல் மட்டும் தான் என் கிட்ட.. 

இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? 

நீ எல்லாரையும் ஒரே போல பார்ப்ப!! ஆனால் அதையும் மீறி தீரா உன் கூட ரொம்ப பாசமா இருக்குறது எனக்கு புடிக்கும். அப்படியே சின்ன வயசில அதை பார்த்திட்டே வளர்ந்தேன். ஆனா தீராவுக்கு என்னை என நிறுத்தியவள் கஷ்ட பட்டு எட்சிலை விழுங்கி கொண்டு நிதின் நிவாசால என்னை புடிக்காது. நான் அப்டின்னா புடிக்காது. அது எந்த ஃபார்ம்ல இருந்தாலும் நான் spr பொண்ணு பந்தா கேசு, மினிஸ்டர் தங்கச்சி, சீன் போடுறவ, நாடகக்காரி இது தான் தீரா பார்வையில நானு. ஆனால் ஆயிரம் வெறுத்தாலும் எனக்கு தீராவை புடிக்கும் ரொம்ப என்றாள் நிலா. 

சத்ய தேவ் அவளுக்கு தண்ணீரை கொடுத்தபடி நீ தான் அவனை லவ் பண்றல்ல அப்புறம் எதுக்கு மீனாட்சி பத்தி அவன் கிட்ட சொன்ன? தீரா கிட்ட உன்னோட மனசுல இருக்குறதை சொல்ல வேண்டியது தானே!! உனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு தான!! 

நிலா தன் அண்ணனை பார்த்து சிரித்தவள். நேசமும் காதலும் மாராதுல்ல அண்ணா!! தீரா மனசுல மீனாட்சி தான் இருக்காங்க. ஆனால் மீனாட்சி எப்டி தீராவை தூக்கி போட்டாங்கன்னு தான் எனக்கு தெரியல. நான் நல்லதே நினைச்சு பண்ணாலும் தீரா பார்வையில அது கேட்டது தான் என்றாள். 

சத்ய தேவ் மனதில் முட்டாள் பெண் என நினைத்தவன் சிரித்து கொண்டே அப்போ உன்னை விடாப்பிடியாக கல்யாணம் பண்ணிக்க என்ன காரணம்? என புருவம் உயர்த்தினான். 

நிலா விரக்தியுடன் மீனாட்சி முன்னாடி சந்தோசமா வாழ்ந்து காட்டணும்ன்னு நினைச்சிருக்கலாம். அதான் என்னை விடாப்பிடியாக கல்யாணம் செஞ்சிருக்கார். 

அப்டின்னா!! கேரிங்கா இருக்க உன்னை கல்யாணம் பண்ணி மீனாட்சியை பழி வாங்குறது தான் ருத்ரனோட திட்டமா? 

நிலா ஒன்றும் புரியாமல் சத்ய தேவை பார்க்க.. சத்ய தேவ் புன்னகையுடன் இது தான் விதி!! அவன் உனக்கானவன்! 

அட போங்க அண்ணா!! என முகத்தை திருப்பினாள். 

குட்டி மா ஒன்னு தெரிஞ்சுக்கோ!! நமக்கான காதலை அடைய எந்த எல்லைக்கும் போகலாம். அது உனக்கு புரியல.  இந்த தியாகத்தை வச்சிட்டு காலம் முழுக்க அவனை நினைச்சு வறுத்தபட்டு உட்காருரதை விட நம்ம மனசுல இருக்குறதை எக்ஸ்ப்ரஸ் பண்ணிட்டு அடைய முயற்சி எடுத்தால் அது தான் வாழ்க்கை. 

நீங்க சொல்றது எனக்கு புரியல. என நிலா கூற.. 

மீனாட்சிய பழி வாங்க தான் ருத்ரன் கல்யாணம் பண்ணிருக்கான்னு நீ நினைக்கிற.. அவங்க ரெண்டு பேர் சேர நீ விட்டு கொடுத்திருக்க!! ருத்ரன் உனக்கு அப்படிங்கிறது தான் விதி. ஒரு பொருளை அடைய ஒருத்தர் எந்த எல்லைக்கும் போவாங்க. நான் சொல்றது உனக்கு ஒரு நாள் புரியும். எனி வே என் தங்கச்சி காதல் சக்சஸ் ஆகிடுச்சு என்றான் சத்ய தேவ். 

ஆனால் தீரா காதல்!! என நிலா கூற.. 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

சத்ய தேவ் சிரித்து கொண்டே எனக்கு அவனை விட நீ தான் முக்கியம் நீ என்னோட பெரிமா பொண்ணு. அவன் என் டாடியோட பிரென்ட் பையன். 

அண்ணா அவர் உங்களுக்கு மச்சான் ரிதம் அன்னிக்கு தம்பி என நிலா கூற.. 

சத்ய தேவ் சிரித்து கொண்டே அவன் எனக்கு மாப்பிள்ளை. என் தங்கச்சி புருசன் என்றான் சத்ய தேவ்.  

நிலா கண்ணகுளி தெரிய சிரித்தவள் சரி வாங்க அண்ணா வீட்டுக்கு போலாம் என்று இருவரும் புறப்பட்டார்கள். 

அண்ணா இது உனக்கு எப்டி தெரியும்? எப்போ தெரியும்? என காரில் செல்லும் போது கேட்டாள். 

“வேணாம் விடேன்”

“அண்ணா பிளீஸ் சொல்லு!”

நிறைய டைம் நோட் பண்ணிருக்கேன். நீ அவனை அடிக்கடி பார்ப்ப!! அவன் வரான்னு தெரிஞ்சா மேடம் உடனே வீட்டுக்கு வருவீங்க!! அவனுக்கு இரும்பினால் தண்ணி எடுத்து கொடுப்பீங்க! அவன் தூங்கும் போது என்கிட்ட பேசுற சாக்குல அவனை தான மேடம் பார்ப்பீங்க! 

இல்லையே என நிலா வெட்கத்துடன் மறுக்க.. 

குட்டி கிட்டார்ல D ன்னு போட்டு வாங்கினது நீ தான!! அதை எனக்காக வாங்கின்னு பச்சை பொய் சொல்லி கொடுப்ப! ருத்ரன் வந்து Dheera நான் தான அப்டின்னு எடுத்திட்டு போவான்ல.. இது ஒரு தடவை எதேட்சையா நடந்தது. அதுக்கு அப்புறம் அரிசில நேம் சங்குல, கேலியோகிராபிக் எல்லாத்திலயும் மேடம் D லெட்டர் போட்டு வாங்கிட்டு வந்து எனக்கு கொடுத்திருக்கீங்க என்றான் சத்ய தேவ். 

நிலா முகத்தில் புன்னகை பரவ.. வெட்கத்துடன் திரும்பி கொண்டாள். 

சத்ய தேவ் அவளின் தலையை பாசமாக வருடி விட்டவன். நம்ம நேசம் பொய்யில்லைன்னு இருக்கும் பட்சத்தில் அடுத்தவங்களுக்கு சொந்தம் ஆகினாலும் கூட அவங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிற மனசு தான் உன்னோட காதலை கை கூட வச்சிருக்கு. இது உன் அப்பா கிட்டருந்து வந்திருக்கலாம். அவரோட காதல் கை கூடல. ஆனால் உன்னோட காதல் இப்போ உன் கையில என்றான் சத்ய தேவ். 

நிலாவின் மனதில் சத்ய தேவ்வின் வார்த்தைகள் ஒரு வித நேர்மறை நிம்மதியை கொடுத்தது. 

இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். ஹைத்ராபாத் எப்போ போற? என சத்ய தேவ் கேட்க.. 

இல்ல அண்ணா நான் இங்கேயே தான் இருக்க போறேன். என பேசி கொண்டே உள்ளே வந்தார்கள். 

அவன் வந்த அடுத்த நொடி ரிதம் முறைத்தபடி கைப்பையை எடுத்து கொண்டு அருகில் வந்தாள். 

அண்ணி இப்போவே கிளம்புரீங்களா? இருந்திட்டு போங்களேன். 

இல்ல உன் அண்ணனுக்கு நைட் டியூட்டி இருக்கு கிளம்பனும் என முன்னாள் சென்றாள் ரிதம். 

மாமா சரி நான் புறப்படுறேன். என சக்தி கிளம்பினான். 

போகும் மருமகனையும் மகளையும் பார்த்தார் இன்பராகவன். 

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

இப்போ எதுக்கு முகத்தை இப்படி வச்சிருக்க? 

பேசாம மூடிட்டு வண்டிய ஓட்டு என ரிதம் திரும்பி கொண்டாள். 

சத்ய தேவ்..? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!