Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -76

சொல்லியே ஆகணுமா என அவனது உதட்டில் மேக்னட் புன்னகை!. 

சொல்லாமல் பக்கத்துல வரகூடாது. நீ என்ன விசயம் சொல்ல போற அப்டின்னு யோசிச்சு யோசிச்சு நானும் குட்டி குஞ்சனும் டயர்ட் தெரியுமா என்றாள் ரிதம். 

யாரது குட்டி குஞ்சு? 

இதோ என்னோட வயித்துல இருக்கவன் தான் என்றாள் ரிதம். 

அப்படியா என  சத்ய தேவ் அருகில் நெருங்க தந்தையின் பேச்சை கேட்டதும் உள்ளிருக்கும் சிசு எட்டி உதைத்தது. 

பாரேன் பிராடு பையன்! இவ்வளவு நேரமும் அசைவில்லாமல் இருந்தான். உன்னோட பேச்சை கேட்டதும் கங்கம் டான்ஸ் ஆடுறான் என்றாள் ரிதம். 

உன் பொண்ணு உன்னை மாதிரி தான ராவடி! என்றான். 

அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அந்த வார்த்தையின் அர்த்தம் மிகவும் வீரியமாக இருந்தது. 

ஆம் அவன் சொன்னதில் தவறு இல்லையே. சத்ய தேவ் என்ற பெயரை கேட்டதும் கருவிலேயே உணர்ந்து கொண்டவள் தானே ரிதம். அந்த அளவுக்கு சக்தியின் மேல் காதல் பித்து. உண்மையை தான் சொல்கிறான். 

அவளின் அருகில் நெருங்கி முகத்தை நிமர்த்தினான். 

டேய் விசயம் சொல்லாம பக்கத்தில் வராத! என அவள் விலக.. 

லவ் யூ! உன்னை டெய்லி லவ் பண்றேன். டெய்லி லவ் பண்ண தேடுறேன். 

இது தான் விஷயமா? 

ம்ம் லவ் யூ! காதலிக்கிறேன். அதை எல்லார் முன்னாடியும் சொல்ல போறேன். என்றான் கண் சிமட்டி.. 

ஒன்னும் வேணாம் என அவள் திரும்ப.. 

காஞ்சு போய் வந்திருக்கேண்டி! என பின் கழுத்தில் முத்தமிட்டான் சத்ய தேவ். முன்னாள் ஒன்று எட்டி உதைத்தது. நீ கட்டிக்க பார்க்கிற! இவன் எட்டி உதைக்கிறான். எப்டி டா வந்து சேர்றீங்க!. 

ப்ச் என முத்தங்கள் எல்லை கடக்க.. அது முகிரத்தில் முடிந்தது. இரண்டு முறை.. 

மூன்றாம் போருக்கு தயாரானான். அதற்குள் போன் விடாமல் அடிக்க கதவும் தட்ட பட்டது. படுக்கையில் மெல்ல அவளுக்கு போர்வை போர்த்தி விட்டவன். உடையணிந்து கதவை திறக்க.. வெளியே நிதின் நின்றிருந்தான். 

எதுக்கு டிஸ்டர்ப் பண்ற? 

வாடா! பட்ட பகலில் என்ன பண்ற? என கடுப்புடன் கூறினான் நிதின். 

ஹே நைட் எட்டு மணி ஆகுது. வாடா என இழுத்து செல்ல.. 

டேய் இரு அவளை பார்த்திட்டு வரேன் என சக்தி திரும்ப.. 

வாடா உள்ளே போனால் அவள் உன்னை விட மாட்டாள் என்று இழுத்து சென்று விட்டான். 

எங்கே கூட்டி போற? என சத்ய தேவ் கேட்க.. 

அந்த கேஸ்ல ஒரு ஆள் மிஸ்ஸிங்! 

எந்த கேஸ்ல? 

அதிவீரா கேஸ்ல ஒருத்தனுக்கு கால் போச்சே!

“அரிச்சந்திரா!” என சத்ய தேவ் கேட்க.. 

ம்ம் அவன் தான்! இந்த ரெண்டு வாரமும் அவனை தான் DIA தேடிட்டு இருந்தாங்க. பெங்களூர்ல இருக்கிறதா செய்தி வந்தது. இப்போ எங்கே இருக்கான்னு தெரியல.. என சொல்லி கொண்டே சென்றான் நிதின். 

அவனோட முகத்தை தான் நீ பார்த்திருக்க தானே! எனக்கு சில fotos இருக்கு நீ அதை பாரு என்று தனியாக சென்று காட்டினான். இது அவன் தானா என உறுதி படுத்த.. 

மணி எட்டு தொட அனைவரும் சாப்பிட வந்தார்கள். ரிதம் குளித்து முடித்து தளர்வான உடையில் கீழே வந்தாள். அனைத்து ஜோடிகளும் அவரவர் இணையுடன் சாப்பிட்டது. 

நிலா உணவை அவனது வாய்க்கு அருகில் கொண்டு செல்ல.. 

எனக்கு கை இருக்கு. உன் கிட்ட இப்போ ஊட்டி விட சொல்லி கேட்டேனா டி! அப்படியே வந்து அப்பாவி மாதிரி முகத்தை வச்சு காரியம் சாதிக்கிற! எப்படியோ என்னை மயக்கி உன்கிட்ட பணிய வைக்கிற! என கடும் வார்த்தைகளில் பேசினான். 

நிலா உதட்டை கடித்து வேதனையை அடக்கி கொண்டவள். உங்களுக்கு இப்போ என்ன வேணும்? நான் ஊட்ட கூடாது அவ்ளோ தானே! நான் இனி ஊட்டல! அண்ட் நீங்க ஒன்னும் என் அண்ணனுக்கு defence force ல இருக்க வேணாம். என்றவள் எழுந்து செல்ல போக.. 

ஹே நில்லு டி! உட்காரு என கையை பிடித்து இழுத்தான். 

எதுவும் வேணுமா நிலா? என தேஜூ அருகில் வர.. 

வேணும்னா நாங்களே கேட்கிறோம் மாமி என சொன்னவன் அவளின் தோல் மேல் கைகளை போட்டு கொண்டு காலியாக இருக்கும் கயிற்று கட்டில் பக்கம் அழைத்து சென்றான். 

கைய எடுங்க! என நிலா அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்ய.. 

கோபப்பட உனக்கு ரைட்ஸ் இல்ல. நான் தான் கோப படுவேன். இப்போ ஊட்டி விடு! 

முடியாது. 

ஹே ஊட்றீ! என மிரட்டினான். 

முகத்தை வேறு புறம் திரும்பி கொண்டே ஊட்டி விட்டாள். 

நீயும் அப்படியே சாப்பிடு! என போனை நோண்டியபடி பதில் கூறினான். 

எனக்கு வேணாம். 

அப்போ இதுல வசிய மருந்து கலந்திருக்கியா? என்ன? 

கண்களில் நீருடன் வேகமாக உணவை வாய்க்குள் தள்ளினாள். 

ருத்ரன் புன்னகையுடன் உன் மொத்த குடும்பமும் இருக்கிறதால என் கோபத்தை கட்டு படுத்திட்டு இருக்கேன். இல்லன்னா.. 

என்ன பண்ணுவீங்க? என நிலா கேட்க.. 

ஓ அந்த அளவுக்கு வந்துட்டியா நீ! ஓகே நாளைக்கு கட்டு சோறு முடிஞ்சதும் உடனே நீயும் நானும் கிளம்புறோம். எல்லார் முன்னாடியும் குட்டி போட்ட பூனை மாதிரி உன் பின்னால் என்னால சுத்த முடியாது. எனக்கு குடிக்கணும் என்றான் ருத்ரன். 

நிலாவின் கண்களில் நீர் வற்றி போனது. முகமெல்லாம் சிவந்து பார்க்கவே அகதி போல இருந்தாள். என்ன பேச முடியும்? யாரை குறை சொல்வது? இவன் எட்டடி என்றால் பிறந்த வீடு பதினாறு அடி! 

விசும்பி கொண்டே உணவை வாய்க்குள் திணித்தவள். அவனை ஏறிட்டு பார்த்தாள். என் மேலே சத்தியம் செய்தானே! குடிக்க மாட்டேன். சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று. 

ருத்ரன் அவளை பார்த்து நான் நார்த்தீகவாதி! கடவுள் துதி பாடுறவன் இல்ல. பார்டர்ல 30 பேரை சுட்டு கொன்னுருக்கேன் என்றான். 

நான் கேட்கவே இல்லையே! என முகத்தை திருப்பி கொண்டவள் எழுந்து சென்றாள். 

ருத்ரன் தலையை கோதி விட்டபடி ஒரு பக்கம் நின்றிருக்க.. 

க்கும் என தொண்டையை கணைத்தபடி spr வந்தார். 

ச்ச இந்த ஆளு வேற! இந்த ஆள் பொன்னை விட டார்ச்சர் பண்றான். மொத்த குடும்பமும் டார்ச்சர் என மனதில் நினைத்த ருத்ரன் instant புன்னகையுடன் சொல்லுங்க மாமா! என்றான்.

அப்பாயின்ட்மெண்ட் லெட்டர் வந்ததா மாப்பிள்ளை. 

கமான் மாமா ருத்ரன் அப்டின்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க. என புன்னகைத்தான் வெள்ளந்தி முகத்துடன்.. ( வில்ல முகத்துடன்) 

ம்ம் ருத்ரன் அப்பாயின்ட்மெண்ட் லெட்டர் வந்ததா? 

ஹாங் மாமா வந்தது என்றான். 

தலையை சொரிந்த spr, இது நிலாவுக்கு தெரியாது. நிதின் கூட வேணாம்னு தான் சொன்னான். எனக்கு தான் மனசு கேட்கல. நிலா பக்கத்தில் நீங்க இருக்கணும்னு நினைச்சேன். ஆனால் உங்க போஸ்டிங் எந்த விதத்திலும் குறைச்சல் இல்ல. சென்ட்ரல் கவர்மென்ட் போஸ்ட் தான். உங்கள கட்டாயப்படுத்தல, எனக்கு உங்க பாதுகாப்பும் முக்கியம். நீங்க spr வீட்டு மாப்பிள்ளை. எனக்கும் சரி நிதினுக்கும் சரி கொஞ்சம் எதிரிகள் அதிகம். அதுக்காக தான் நீங்க பக்கத்தில் இருந்தால் எனக்கு நிம்மதி என்றார். 

புரியுது மாமா! ஒன்னும் பிரச்னை இல்ல. 

உங்களுக்கு ஓகேவா? 

கண்டிப்பா மாமா! நீங்க சொல்லி கேட்காமல் இருப்பேனா? அக்கா வளைகாப்பு முடிஞ்சதும் நான் போய் ப்ரோபெர்ரா டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு வரேன். 

மாப்பிள்ளை நிலாவுக்கு ஏழு மாசம். அதனால சீமந்தம் பண்ணனும். நெக்ஸ்ட் வீக் பண்ணிட முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு அப்புறம் புரட்டாசி வருது. அதுல நாங்க செய்ய மாட்டோம் என்றார் spr. 

அப்படியா அப்போ நிலாவோட சீமந்தம் முடிச்சிட்டு போறேன் மாமா! என புன்னகையுடன் கூறினான் ருத்ரன். 

அவனது கையை ஆதரவாக பிடித்தவர். நானே தேடினால் கூட நிலா இந்த அளவுக்கு சந்தோஷமா இருப்பாளா எனக்கு தெரியல. என் கண்ணு முன்னாடி பாதுகாப்பா உங்க வீட்ல இருக்கா! எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு என்றார். 

இதெல்லாம் என்ன மாமா! அவளை என் மம்மி டாடி! முதல் எங்க தாத்தா பாட்டி வரை நல்லா பார்த்துப்பாங்க. நானும் தான் என்றான் ருத்ரன். 

Spr திருப்தியுடன் அவ்விடத்தை விட்டு நகர.. ருத்ரன் தலையை கோதி கொண்டே நிலாவை தேடி சென்றான். 

இப்போ எப்டி இருக்கு? உனக்கு ஓகேவா? என்று விவேகா மகி இருவரும் அவரவர் மருமகளிடம் பேசி கொண்டிருந்தார்கள். 

ரிதம் மெல்ல எழுந்து ஓகே மாமி! நான் எனக்கு பரவாயில்ல என கூற..

சரி நேரமே தூங்கு மா! என மகி அவளை அனுப்பி வைத்தார். 

நிலா அதே இடத்தில் அமர்ந்திருக்க.. ருத்ரன் அருகில் சென்றான். 

இந்த பக்கம் மீனாட்சி ஒரே வாமிட்

என்னாச்சு கா? என மகி, விவேகா இருவரும் தேஜுவின் பின்னால் சென்றார்கள். 

நேரத்துல சாப்பிட சொன்னேன். அவள் கேட்கல. நிவாஸ் வந்தால் தான் சாப்பிடுவேன் அப்டின்னு அடம் பண்ணா! இப்போ லேட்டா சாப்பிட்டதும் குமட்டல் அதிகமா போச்சு. எங்கே நம்ம பேச்சை கேட்கிறாங்க? அவங்க இஷ்டத்துக்கு தானே பண்றாங்க. என புலம்பி கொண்டே அவளை கவனித்தார். 

நிலா அருகில் நிற்பவனை கண்டு கொள்ளாமல் வெளியே செல்ல போக.. 

ஹே வாடி தூங்கலாம். என அழைத்தான். 

நான் இல்லன்னா தான் உங்களுக்கு தூக்கம் வரும். நானே கெட்டவள்! இப்போ வெளியே போகணும் என நிலா சொல்ல.. 

வசியம் பண்ணிட்டியே! உன் கூட தான் எனக்கு தூக்கம் வரும். என இழுத்து சென்றான்.

என்னை விடுங்க! என்று நிலா விடுபட போராட.. 

ப்ச் வாடிஇஇ! தனியா படுக்கவா அங்கிருந்து இங்கே வந்தேன். பெட் ரூம் உள்ளே சண்டையெல்லாம் தூக்கிட்டு வராத! அதெல்லாம் தாழ்ப்பாள்க்கு வெளியே! என்றவன் கோபமாக பார்த்தாள். 

என்ன முறைக்கிற? என்று அவளின் முகத்தை குனிந்து பார்த்தான். 

அவள் குட்டியாக குள்ளையாக அவனருகில் தெரிந்தாள். 

அவளின் மேல் கை வைத்தான். 

நான் அங்கே படுக்கணும் என நிலா சோபாவை காட்ட.. ருத்ரன்…? 

தொடரும்.. 

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.