Home Uncategorizedஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

by Pradhanya kuzhali

Episode -81

எப்டி தங்கம்? அய்யோ என் பேரன் பிறக்கும் போது யாருமே இல்லாம பிறந்திருக்கான்? என சேலையின் தலைப்பால் மூக்கை துடைத்தபடி தரையை சுத்தம் செய்து, ரிதமுக்கு பாங்கு செய்தார் மகி. 

அக்கா அழாதீங்க கா! என விவேகா வந்தார். 

எப்படி அழாமல் இருக்க சொல்ற விவேகா. நான் அவ்ளோ தூரம் சொல்றேன் பிடிவாதமா இங்கே தான் இருப்பேன்னு தனியா எல்லாத்தையும் செஞ்சிருக்கா ரிதம். இதெல்லாம் பண்ணனும்னு தலையெழுத்தா என்ன? என அங்கலாய்ப்புடன் கூறினார். 

விடுங்க அக்கா! இப்போ நீங்க குழந்தைய குளிக்க வைங்க நான் இதை சுத்தம் பண்றேன். ஹாஸ்பிடல் போகணும். பையனுக்கு தடுப்பூசி போடணும்ல குட்டி பையனுக்கு என்றார் விவேகா. 

தன் அருகில் படுத்திருக்கும் குழந்தையை ஆசையுடன் பார்த்தாள் ரிதம். 

என்ன டா!! அம்மா சொன்ன மாதிரியே ரெடி ஆகி வந்துட்ட!! என ரிதமின் மனதில் ஓடி கொண்டிருந்தது. 

சக்தி!! என மகி அழைக்க, சூர்யா  போனில் அனைவருக்கும் கூறி கொண்டிருந்தார். ம்ம் பேரன் தான்! அப்படியே சக்தி மாதிரி இருக்கான். மற்றும் இன்ப ராகவன் இன்னொரு பக்கம் ம்ம் ஹீரோ பிறந்திருகான். எங்க வீட்ல அடுத்த போலீஸ். அப்டியே என் பேபி போலவே I mean ரிதம் போலவே இருக்கான். 

ஹே என சூர்யா முறைக்க, கண்ணு அப்டியே சத்ய தேவ் போல!! எத்தனை அழகு தெரியுமா? கீ கீ அப்டின்னு கத்து போடுறான் மா என சொல்லி கொண்டிருந்தார். 

அவனது பெயரை கேட்டதும் உள்ளுக்குள் ஏதோ இனம் புரியா உணர்வு. இது பெண்களுக்கு உரித்தான emotion பார்ட் அதனுடன் கொஞ்சம் வெட்கம். என ஒரு சேர இருந்தாள். 

மிதுன், இதழ், ருத்ரன், நிலா, பவன்யா, இனியா, இதயன், என அனைவரும் வந்து சேர்ந்தார்கள் பார்க்க.. 

ரிதம் கண்களை மூடிய படி இருந்தாள்.  

டேய் எங்கே அப்டியே போற? குளிச்சிட்டு போ! என்று மகி அதட்ட அவன் உள்ளே சென்றான். 

அங்கே இல்ல சக்தி இங்கே போய் குளி! 

நான் பையன குளிக்க வைக்கணும் என்றார். 

சத்ய தேவ் தயக்கத்துடன் எட்டி பார்க்க.. 

போடா என அனுப்பி வைத்தார். 

கொஞ்சம் பால் குடிக்கிறயா ரிதம். என மகி கேட்க.. 

இல்ல மாமி! எனக்கு எதுவும் வேணாம் என்றாள். 

இரு நான் தம்பிய ரெடி பண்ணிட்டு வரேன் என மகி கொஞ்சி கொண்டே தூக்கி சென்றார். யாரா இது? அப்டியே அப்பா போலவே இருக்கீங்களே குட்டி பையா!! என்ன அழுகை? அம்மா போலவும் தான் இருக்க! அடேங்கப்பா? என்ன முறுக்கல்? அவ்ளோ சோக்கையா இருக்கா? அச்சோ எதுக்கு அழகை தங்கம்? ஆத்தா உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன் லைட்டா காக்கா குளியல் போட்டுட்டு ஹாஸ்பிடல் போயிட்டு ராசாவுக்கு எதுவும் இல்லனு செக் பண்ணிட்டு வந்திடுவோம். குளிப்போமா? என மெல்ல இதமான நீரில் துடைத்து கழுவி விட்டாள். 

அவசர அவசரமாக குளித்து முடித்து துண்டை மட்டும் கட்டியபடி வேகமாக உள்ளே நுழைந்தான் சத்ய தேவ். 

ரிதம் படுக்கையில் படுத்தபடி போனை நோண்டி கொண்டிருந்தாள். அசால்ட்டாக.. 

ஹே ராவடி!! என அழைத்தான் கம்பீரமாக.. 

ஏறிட்டு பார்த்தாள். 

வேகமாக உடையை அணிந்து கொண்டவன் சுற்றிலும் பார்வையை சுழற்றிய படி, என்னடி அசால்ட்டா படுத்திருக்க? 

ரிதம் முகத்தை திருப்பி கொண்டாள். 

சத்யதேவ் அவளை பார்த்து கொண்டே பேச வந்தவன். கண்களில் அவளின் இடைக்கு கீழ் படுக்கையில் உதிரம் தெரிய.. 

ரிதம் என அருகில் நெருங்கி அவளை தொட்டு காட்டினான். ஹாஸ்பிடல் போலாமா? என கேட்டான். 

அது பிளீடிங் வரும். பிரச்னை இல்லை. நிறைய வரணும். அது தான் நல்லது. என்றாள் ரிதம். 

அப்போ ஒரு நிமிசம் இரு என்றவன். காட்டன் உதிர தாங்கிகளை எடுத்து அவளின் கீழ் பகுதியில் சுத்தப்படுத்தி போட்டு விட்டான்.

டேய் உன்னை யாரு டா இதெல்லாம் செய்ய சொன்னது? தள்ளி போ! என் மம்மி வந்து பண்ணுவாங்க! அப்டின்னு சொல்ல மாட்டேன் நீ தான் பண்ற! என்று விட்டு முகத்தை திருப்பி கொண்டாள். 

ரிதம் என சத்ய தேவ் அழைக்க..

அவனை மெல்ல திரும்பி பார்த்தாள். 

கண்கள் கலங்கி இருந்தது அவனுக்கு. துவண்ட கொடி போல இருந்தவளை பார்த்தவன். உன் கூட நான் இல்லாம போயிட்டேன். சாரி டி! உன்னை மாதிரி ஒரு ஸ்ட்ராங்கா ஒருத்திய நான் பார்த்ததில்லை. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு. என அவளின் பாதத்தை பிடித்து முத்தமிட்டான். 

போதும் போதும் சிங்க பெண் மொமன்ட்!! என ரிதம் கூற, வேகமாக அவளின் உதட்டில் முத்தமிட்டவன். வலிச்சிதா டி என நெற்றியில் முத்தம் பதித்தான். 

இது வலி இல்ல.. இது வரம்! என்றவள். அவனது சட்டையை பிடித்து தள்ளி, அப்புறம் பார்த்தியா என கேட்டாள். 

என்ன பார்த்தியா? 

டேய்!! என் பையன்? என கூற.. 

நினைச்சத சாதிச்சிட்ட!! என அவளை பார்த்தான். 

ம்ம் என்றாள் கன்னக்குழி தெரிய.. 

அப்போ உன்னை போல தான் இருப்பான். என சக்தி கூற.. 

ரிதம் அவனை ரசித்தபடி இல்ல!! உன்னை போல என்றாள்.

எப்டி மேடம்? 

அவன் அமைதியா இருக்கான். கன்னக்குழி இல்ல. அப்டியே உன்னை சராக்ஸ் பண்ண போல இருக்கான். என்னை மாதிரி ஆர்பாட்டம் பண்ணல என்றாள் ரிதம். 

அப்டியா? ஆனாலும் எனக்கு உன்னை போல மகிய போல என் குக்கு போல ஒரு பாப்பா என சத்ய தேவ் சொல்ல.. 

ப்ச் எனக்கு எல்லாரும் சேர்ந்து கலவையா வேணாம். எனக்கு அவங்க எல்லாம் ரெண்டாம் பட்சம் தான். ஈவன் என்னோட டாடி கூட அந்த கேட்டகிரி தான். எனக்கு அவங்க எல்லார் விட நீ! நீ மட்டும்..உன்னை போல மட்டும் தான் எனக்கு வேணும் என்றாள் ரிதம்.

சத்ய தேவ் சில்லு சில்லாக சுக்கு நூறாக அவளுள் சரணடைய வேற வார்த்தை வேண்டுமா என்ன? 

சத்ய தேவ் அவளை காதலுடன் நெருங்க..  ரிதம் இமை வெட்டாமல் அவனையே பார்த்தாள்.

கீழ் உதட்டை கவ்வினான். 

வந்தாச்சு! வந்தாச்சு! குட்டி பையன் குளிச்சிட்டு வந்தாச்சு! என மகியின் குரல் கேட்க.. 

ரிதம் வேகமாக அவனை தள்ளி விட்டாள். பின் தலையை வருடியபடி அவன் தயக்கத்துடன் நிற்க.. மொட்டு வாய் வற்ற வீர் வீரெண்டு கத்தினான் ஒருவன். 

சத்ய தேவ் தன் அம்மாவின் கையில் இருக்கும் மகனை பார்த்தான். 

சக்தி!! இவன் உன்னை போல என ஆரம்பித்தவர். லாஸ்வேகஸ்ல ரிதம் பிறந்ததும் இப்படி தான் சினுங்குட்டே இருப்பா! அதே போல இருக்கான் இந்தா வாங்கி பாரு!! என்றார். 

மா நான் எப்டி? என சத்ய தேவ் கூற.. 

வாங்கிக்கோ டா!! என மகி அவன் கைகளில் கொடுத்தார். 

டேய் அப்பா கிட்ட இருக்க! உன் அப்பா!! உன்னோட டாடி! என் பையன் அப்பா ஆகிட்டான் என மகியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.. 

அங்கு வந்த விவேகா. சக்தி இந்தா ஸ்பூன் இதுல தேன் தடவி குட்டி பையன் வாயில் வை  என கூறினார். வெள்ளி ஸ்பூனை வாங்கி ஒரு சொட்டு வைத்தான். குழந்தை தலையை ஆட்டி கொண்டு பசிக்கு அழுதது. 

வயிறு பொசுக்குனு இருக்கு பசி வந்திடுச்சு குட்டி மனுஷனுக்கு. ரிதம் எழுந்து உட்காரு. சக்தி நீ வா நம்ம போலாம் விவேகா நீ ஹெல்ப் பண்ணு என்று விட்டு அவர் செல்ல.. 

மாமி! என அழைத்தாள் ரிதம். 

சொல்லு தங்கம். 

சக்தி என் கூட இருக்கட்டும் நீங்க அம்மா கூட போங்க எனக்கு பசிக்குது. என்றாள். 

ஹே என சத்ய தேவ் அவளை தயக்கத்துடன் பார்க்க, 

என்னடி பேசுற? என விவேகா சொல்ல.. 

மகி புன்னகையுடன் இருக்கட்டும் விவேகா நம்ம போலாம் வா! செலவு ரசம் செய்யணும். அவள் தொடர்ந்து குடிக்கணும். என சென்றார்..

அக்கா நான் பூண்டு தொக்கு பண்றேன் என சென்றார்கள். 

ஹே என்ன டி இதெல்லாம்? அம்மா முன்னாடி எதுக்கு அப்படி சொன்ன? 

ப்ச் வாடா பக்கத்தில்!! என ரிதம் அழைக்க.. 

நீ தான் புருஷன் மாதிரி இருக்க!! என்றான் சத்ய தேவ். 

நான் மட்டும் உனக்கு புருஷனா இருந்திருந்தால் இந்நேரம் உன்னை என அவள் சொல்ல வர.. 

ஹே இவன் பாவம் முதல்ல இவன கவனி என்றவன் மகனுக்கு நெற்றியில் முத்தமிட்டு நீட்டினான். 

வந்து ஹெல்ப் பண்ணு இங்கே பக்கத்தில் வா என அழைத்தாள். அவனும் அவள் சொன்னது போல அனைத்தையும் செய்தான். 

குழந்தை அனத்தி கொண்டே பால் குடிக்க, சத்ய தேவ் அதை ரசித்து கேட்டான். 

ஹே சக்தி!! 

ம்ம் என குழந்தையின் கால்களை வருடினான். 

ப்ச் அவனை அப்புறம் பாரு! இப்போ என்னை பார் டா! 

ம்ம் என்ன டி!! 

கிட்ட வா!.. 

இப்போ.. 

இன்னும் கிட்ட.. 

இப்போ.. 

ம்ம் ஓகே என்றவள் அவனது உதட்டில் முத்தமிட்டு சாரி என்றாள். 

எதுக்கு..? 

ரிதம்..? 

****

வளைகாப்பு வேணாம்னு சொன்னியா! ஹே நில்லு டி!! என கைகளை பிடித்தான் ருத்ரன். 

நிலா…? 

தொடரும்..

do like and share pradhanyakuzhalinovels

You may also like

Leave a Comment

About Me

பிரதன்ய குழலி நாவல் தளத்துக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் பிரதன்ய குழலி அவர்களால் எழுதப்பட்டது. அனைத்து கதைகளும் கற்பனையே. கொஞ்சம் ஊடல், அதிகமா காதல். என உணர்வுகளின் குவியலை படிக்கலாம்.