🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்🦚 பிரதன்யா குழலி நாவல்களுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!📖 படியுங்கள், ரசியுங்கள், கதைகளின் உலகில் மூழ்குங்கள்🪶 கதைகளின் தோகை விரியும் இடம்💎 இலவசம் முதல் பிரீமியம் வரை, உங்களுக்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுங்கள்
101. அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன்
📖 அன்பானவன் அடங்காதவன் அசராதவன் · Chapter 101 of 160

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்

  • 14 Aug 2025
  • 504 reads
  • ☆ No ratings yet
  • 5 min read

Episode-100

நிலா அவனை பார்க்க..

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அங்கிருக்கும் அக்ரிமென்ட் காகிதங்களை துண்டு துண்டாக கிழித்து வீசினான் கோபத்தில்..

நிலா அசராமல்.. அப்போ உங்களுக்கு இதில் விருப்பம் இல்ல போல..

கோர்ட்டில் மீட் பண்ணலாம் என அவள் நகர..

ஹே நிலா உனக்கென்ன பைத்தியமா? You ராஸ்கல்? என பற்களை கடித்தான் ருத்ரன்.

நிலா கணக்குழி தெரிய சிரித்தவள். உங்களுக்கு தான் பைத்தியம். நான் கிளம்புறேன். அண்ட் நீங்களும் கிளம்புங்க bye என்று நகர்ந்தாள்.

ஹே நில்லு டி!! என ருத்ரன் பற்களை கடித்தான்.

அய்யோ பயமா இருக்கு. நிக்க முடியாது போடா!!  என்றவள் என்னோட ரூல்க்கு ஓகே அப்டின்னா விவாகரத்து இல்ல. ஆறு மாசம் கழிச்சு சேர்ந்து வாழ வருவேன். இல்லன்னா இல்ல. என்று விட்டு நகர்ந்தாள் நிலா.

என்ன பண்றா உங்க பொண்ணு? என நிவாஸ் spr முன்பு கத்தினான்.

நிதின் தீவிர யோசனையில் இருக்க, spr தீர்க்கமாக பார்த்து ஏற்கனவே எனக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போதுமான அளவுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துட்டீங்க. இனி நான் எவனுக்கும் அறிவுரை சொல்லி எனக்கு போன மானம் திரும்பி வராது. உங்க அம்மாவை கட்டின வீட்ல என்னை நரக கொடூரன் போல portrait பண்ணிட்டீங்க. சக்திய நீ ஷூட் பண்ண சொல்லியிருக்க? ராஸ்கல் உன்னை நான் பெத்திருக்கவே கூடாது டா! நான் மொத்தமா தோத்து போயிட்டேன் என உடைந்த மனதுடன் சென்று விட்டார். அவரின் பின்னால் தேஜூ சென்றார்.

நிதின் அங்கிருக்க பிடிக்காமல் நகர்ந்தான் வீட்டில் இருந்தால் நரகத்தில் இருப்பதை போல தோன்றுகிறது. இந்த பக்கம் நிவாஸ கேவலமாக பார்த்து விட்டு சென்றாள் மீனாட்சி.

என்னாச்சு ருத்ரன்? நிலா போன் எடுக்க மாட்டின்றா? எனி ப்ராப்ளம்? என கேட்டான் சத்ய தேவ்.

ஒண்ணுமில்ல மாமா!! நான் அப்புறம் கூப்பிடுறேன் என பாரில் இருந்தான் ருத்ரன்.

டேய் வீட்டுக்கு வாடா! உன் அம்மா கேட்டுகிட்டே இருக்கா! என இன்பா கூற..

வரேன் டாடி!! என குழைவுடன்  கூறினான்.

என்னாச்சு? எங்கே இருக்க நீ? என இன்பா பதட்டத்துடன் கேட்க..

நான் டாடி!! நான் என தேம்பி விட்டு விசயத்தை கூறினான்.

Oh shit என உடனே புறப்பட்டவர் நேராக ஹைதராபாத் பறந்தார்.

அந்த பாரில் விடிய விடிய குடித்து அங்கேயே மயங்கி சரிந்திருந்தான் ருத்ரன்.

இன்பா தன் மகனை அங்கிருந்து அழைத்து வந்து ஹோட்டலில் ரூம் book செய்தார். போதை குறைய இரண்டு நாட்கள் ஆனது. அவ்வளவு  முரட்டு குடி.

இன்பா தன் மகனை கவலையுடன் பார்த்தார். ப்பா!! என்னை அவள் துரத்திட்டா பா! எனக்கு விவாகரத்து கொடுக்க போரால் பா! அவள் என்னை bipolar பைத்தியக்காரன் சொல்லிட்டா! டாடி!

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

நீ தான் அவளை விரும்பவே இல்லையே! வீம்புக்கு தான கல்யாணம் பண்ண! அதுவும் அந்த N families பழி வாங்க தானே.. முக்கியமா நிவாஸ உன்னோட ex லவ்வர் கட்டிக்கிட்ட காரணத்துக்காக தானே நீ நிலாவை மேரேஜ் பண்ண? எனக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல ஆனால் உன் அம்மா!! என இன்பா சொல்லி கொண்டிருக்க..

I love her டாடி! அவளை எனக்கு பிடிக்கும் ரொம்ப.. she is mine எப்போவும் நான் கல்லறையில் புதையுற வரை அவ எனக்கு வேணும்.

இன்பா இமைக்காமல் தன் மகனை பார்க்க, ருத்ரன் குலைவுடன் நிலா மட்டும் இதழ் இடத்தில் இருந்திருக்க இந்நேரம் தூக்கி இருப்பேன் டாடி! ஆனால் நிலா!! அவள் அவள் எதுக்கு அவங்களோட தங்கையா பிறக்கணும்? எனக்கு பிடிக்கல!! எனக்கு அவளை பிடிக்குது ஆனால் அவளோட அப்பனை சுத்தமா பிடிக்கல..

டேய்!! அவரு உன்னை என்ன பண்ணார்?

ருத்ரன் போதையில் அவங்க பேமிலி யாருமே என் டாடி மம்மிய respect பண்ணி நடந்துக்க மாட்டாங்க. அதனால எனக்கு பிடிக்கல டாடி! என்றான்.

இதை கேட்டதும் இன்பா தன் மகனை பிரமிப்புடன் பார்த்து அருகில் வந்தவர் அவன் தலையை வருடி கொடுத்தார். நீ சொல்றது உண்மையான்னு தெரியல பட் கேட்க நல்லாருக்கு.

Promise டாடி! ரிதம அவங்க மதிக்கவே மாட்டாங்க. ஆனால் என்னோட மூளையில்லா அக்கா நிதின் கூட தான் இருப்பா!

அப்போ நீ மீனாட்சிய லவ் பண்ணலயா?

பண்ணேன்!!

என்னடா சொல்ற? குடிகாரன் பேச்சு இப்படி தான் இருக்கும் போல.. என இன்பா கூற..

வீம்புக்கு பண்ணேன் லவ். அந்த நிலாவ மறக்க பண்ணேன். எனக்கு அவளை புடிக்கும் ரொம்ப.. ஆனால் அவனுங்க முன்னாடி போய் அவளை பொண்ணு கேட்க எனக்கு விருப்பம் இல்ல. அவள் வரவும் மாட்டாள். லவ் பண்ணவும் மாட்டாள். ஏன்னா அந்த கல்நெஞ்ச காங்களுக்கு தங்கச்சியா இருக்காளே! என்றான் ருத்ரன்.

உன்னோட மனசுல மீனாட்சியா இல்ல நிலாவா?

என்னோட மெயின் பிரான்சு bank account நிலா. சுவிட்ஸ் Bank அவ்ளோ சீக்கிரம் அடைய முடியாது. அதனால நான் அதை குழி தோண்டி புதைச்சுட்டு ஒரு ஐயங்கார் bank ல account create பண்ண நினைச்சேன். அது பேக்கரியா மாறி பால் ஊத்திட்டு ஆந்திரா பேங்க்க பிக் அப் பண்ணிட்டு போயிடுச்சு. எனக்கு சுவிட்ஸ் பேங்க் வேணும் டாடி என்றான்.

இன்பா பெரு மூச்சை விட்டபடி மோர் கொடுத்தார் மகனுக்கு. இரண்டு நாள் தூங்கி எழுந்தான் ருத்ரன்.

சரி வா வீட்டுக்கு போலாம் என இன்பா அழைக்க..

நிலா கூட தான் வீட்டுக்கு வருவேன் போங்க நீங்க.. என்றான் ருத்ரன்.

அந்த பொண்ணு தான் வர மாட்டேன்னு சொல்லிடுச்சே! உன்னை ஹாஸ்பிடல் கூட்டி போய் bipolar இருக்கா அப்டின்னு செக் பண்ணனும் என்றார் இன்பா.

அவள் இல்லாம நான் வரமாட்டேன் என்றான் ருத்ரன்.

மறுபடியும் பிரச்னை பண்ண போறியா ருத்ரன். சொல்றத கேளு டா!! என இன்பா அழைக்க..

ருத்ரன் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டி கொள்ளாமல், நிலா சொன்ன ஆறு மாத ஒப்பந்த விஷயத்தை பற்றி கூறினான்.

🪔 Exclusive Diwali Offer for Pradhayakuzali Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

இதை கேட்டதும் இன்பா அதிர்ச்சியுடன் this is ridiculous. ஒன்னும் வேணாம் நீ வா! நிலாவை தூக்கிட்டு வரலாம். உனக்கு அவள் தானே வேணும். இனி இன்பராகவன் யாருன்னு காட்டுறேன். கேஸ் நடத்துவோம். அவளை நீ force பண்ணல விருப்பப்பட்டு தான் குழந்தை வந்திருக்கு. என்னன்னு ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன் என இன்பா புறப்பட..

டாடி!! நான் சவாலுக்கு ரெடி என்றான் சட்டை கையை மடித்து கொண்டே..

என்னடா சொல்ற? என இன்பா அதிர்ந்து கேட்க..

எஸ் நான் வீட்டுக்கு வந்தால் அவளோட தான் வருவேன். என தீர்க்கமாக கூறினான் ருத்ரன்.

அடுத்து என்ன நடக்கும்?

தொடரும்.

do like and share pradhanyakuzhalinovels

How did this episode feel?
Rate this episode Be the first to rate

💬 Be the first to comment

Share your thoughts

error: Content is protected !!